Sep 2, 2026 - 06:28 PM

வெல்லம்பிட்டி - சேதவத்தை பகுதியில் பெருந்தொகை போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் இன்று (2) கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபரிடம் இருந்து 8 கிலோகிராம் ஐஸ் மற்றும் 4 கிலோகிராம் ஹெரோயின் போதைப்பொருட்கள் கைப்பற்றபட்டுள்ளன.
அத்துடன் போதைப்பொருள் வர்த்தகத்தினால் ஈட்டப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படும் பெருந்தொகை பணமும் இதன்போது சந்தேகநபரிடம் இருந்து மீட்கப்பட்டுள்ளன.
கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் முன்னெடுத்த சுற்றிவளைப்பின் போதே, சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைதானவர் சேதவத்தை கசுன் என்ற போதைப்பொருள் கடத்தல் குற்றவாளியின் உதவியாளர் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.
கைப்பற்றப்பட்ட போதைப்பொருளின் பெறுமதி 20 கோடி ரூபாவாகும் என தெரிவிக்கப்படுகின்றது



























