Sep 3, 2026 - 09:17 AM

பொரளை - சகஸ்புர பகுதியில் கட்டளையை மீறி பயணித்த முச்சக்கரவண்டி ஒன்றின் மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.
குறித்த முச்சக்கரவண்டி கொம்பனித்தெரு பொலிஸ் பிரிவில் இருந்தே பொலிஸாரின் கட்டளையை மீறி இவ்வாறு செலுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அந்த முச்சக்கரவண்டியில் 5 பேர் இருந்துள்ளதுடன், அதிலிருந்த 3 வாள்களும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
குறித்த நபர்கள் கொலன்னாவை பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.



























