Header Logo
SLIC
ஜோதிடம்
இன்றைய ராசிப்பலன் (03.09.2026)!

Sep 3, 2026 - 09:23 AM

இன்றைய ராசிப்பலன் (03.09.2026)!
Mobitel Inner 1278
EDEX Inner

இன்று (03) ரிஷப ராசியில் சந்திரன் சஞ்சாரம் செய்கிறார். மேலும் மரண யோகம் உள்ளது. கடகத்தில் குரு உச்சம் பெற்றும், துலாமில் சுக்கிரன் ஆட்சி பெற்று சஞ்சாரம் செய்கின்றனர். மூன்று கிரக சேர்க்கை சிம்ம ராசியில் நடக்கின்றன. இன்று கன்னி, துலாம் ராசியை சேர்ந்த அஸ்தம்,சித்திரை நட்சத்திரத்திற்கு சந்திராஷ்டம நாள். 

மேஷம் ராசி பலன் 

மேஷ ராசி அன்பர்களுக்கு இன்று உங்களுடைய பணியிடத்தில் கடின உழைப்பிற்கான அங்கீகாரம் கிடைக்கும். உங்களுடைய திறமையை வளர்த்துக் கொள்ளவும், திட்டங்களை செயல்படுத்தவும் சாதகமான சூழல் அமையும். புரிய வாய்ப்புகள், பதவிகள் கிடைக்கக்கூடிய நாள். இன்று சில எதிர்மறையான சிந்தனை மனதில் தோன்றும். இது உங்களுடைய உறவுகள் மற்றும் வேலை தொடர்பாக பாதிப்புகளை தரலாம். 

உங்கள் மனதில் தெளிவையும், நேர்மறை சிந்தனை உடன் செயல்பட்டால் காலம் உங்கள் நண்பனாக செயல்படும்.உங்களுடைய தொழில் தொடர்பாக இருக்கக்கூடிய முயற்சிகள் விரைவில் நற்பலனை பெறுவீர்கள். இலக்கை நிர்ணயத்தை செயல்படுங்கள். 

ரிஷபம் ராசி பலன் 

ரிஷப ராசி அன்பர்களுக்கு இன்று உறவுகளை வலுப்படுத்துவதில் கவனம் செலுத்தவும். உங்கள் துணை கூறுவதை காது கொடுத்து கேட்பது நன்மை தரும். முடிந்த வரியில் உங்கள் வேலைகளை பணியிடத்திலேயே முடிப்பது அவசியம். வேலையை வீட்டிற்கு கொண்டு வருவதை தவிர்க்கவும். இன்று உங்களுடைய பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது, திறமையை வெளிப்படுத்துவது என சிறப்பாக செயல்படுவீர்கள். கடினமான பணிகளை கூட நிதானமான மனநிலையுடன் செயல்படுவதால் வெற்றி பெற முடியும். பணம் தொடர்பான விஷயங்களை கூடுதல் கவனத்துடன் இருக்கவும். இல்லையெனில் கடின உழைப்பால் ஈட்டிய பணம் நஷ்டமடைய வாய்ப்பு உண்டு. 

மிதுனம் ராசி பலன் 

மிதுன ராசி அன்பர்களுக்கு இன்று உங்களுடைய விடாமுயற்சி மற்றும் கடின உழைப்பு துறை ரீதியான முன்னேற்றத்தையும், லாபத்தையும் பெற்று தரவும். உங்களை இலக்கை சரியான திசையில் வைக்கவும். உங்கள் துணையுடன் உறவில் சில கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். அவருடைய மனநிலையை புரிந்து செயல்படுவது நன்மை தரும். உங்களுடைய வேலை தொடர்பாக கூடுதல் பொறுப்புகள் சுமக்க நேரிடும். இருப்பினும் சக ஊழியர்களின் ஆதரவு வேலையை சரியான நேரத்தில் முடிக்க முடியும். 

கடகம் ராசி பலன் 

கடக ராசி அன்பர்களுக்கு இன்று பணியிடத்தில் உங்களுடைய திட்டங்கள் எதிர்பார்த்த விதத்தில் வெற்றியை தராமல் போகலாம். இருப்பினும் இன்று உங்களுடைய முயற்சியை கைவிட வேண்டாம். உங்களை நீங்களே உற்சாகப்படுத்திக் கொண்டு செயல்படுவது நல்லது. சிலருக்கு தங்களுடைய காதலை திருமணத்திற்கு எடுத்துச் செல்லக்கூடிய விஷயங்களில் ஈடுபடுவீர்கள். அதே சமயம் காதல் மன்னன் விஷயங்களில் முடிவுகளை எடுப்பதில்லை கவனம் தேவை. இன்று உங்களுடைய வருமானம் எதிர்பார்த்ததைவிட அதிகரிக்கும் என்பதால், உங்கள் வீட்டின் செலவுகள் குறித்த கவலை நீங்கும். 

சிம்மம் ராசி பலன் 

சிம்ம ராசி அன்பர்களுக்கு இன்று லாபத்தை பெறக்கூடிய வழிகளை காண்பீர்கள். உங்களுடைய கடின உழைப்பு மற்றும் முயற்சிகள் காரணமாக பணியிடத்தில் கடினமான சூழலை கண்டு அஞ்ச மாட்டீர்கள். உங்களுடைய வருமானத்தை விட செலவுகள் அதிகரிக்க வாய்ப்பு உண்டு. அதனால் செலவுகளை திட்டமிட்டு செய்யவும். குடும்ப வாழ்க்கையிலும், காதல் தொடர்பான விஷயங்களிலும் ரொமான்டிக்காக செயல்படுவது நன்மை தரும். உங்களுடைய குடும்ப உறவில் மகிழ்ச்சி அதிகரிக்கும். இன்று உங்கள் துணையின் நம்பிக்கையை பெறுவீர்கள். 

கன்னி ராசி பலன் 

கன்னி ராசி அன்பர்களுக்கு இன்று நடைமுறைக்கு ஏற்ற விஷயங்களை மட்டும் செய்வது நல்லது. தேவையற்ற கற்பனையை தவிர்க்கவும். இன்று சில அனுபவம் வாய்ந்த நபர்களிடமிருந்து ஆலோசனை கிடைப்பது பயனுள்ளதாக இருக்கும். பயிற்சி, ஆராய்ச்சி போன்ற வழக்கமான வேலையை தாண்டிய விஷயங்களை ஈடுபடுவீர்கள். புதிய தொழில்நுட்பங்களை கற்றுக் கொள்வதில் ஆர்வம் காட்டுவீர்கள். இன்று தெளிவான புரிதல் உடன் செயல்படுவது நன்மை தரும். காதல் தொடர்பான விஷயங்களில் உங்களுடைய தனிப்பட்ட உறவுகளில் ஆழம் அதிகரிக்கும். இன்று நீங்கள் சில பயணத் திட்டங்களை மேற்கொள்வீர்கள். 

துலாம் ராசி பலன் 

துலாம் ராசி அன்பர்களுக்கு இன்று சுக்கிரன் உங்கள் ராசியில் ஆட்சி பெற்று சஞ்சரிப்பதால் தம்பதியிடையே உறவு வலுவாக இருக்கும். இன்று எந்த ஒரு முடிவுகளையும் அவசரப்பட்டு எடுக்க வேண்டாம். இது உங்கள் உறவுகளை பாதிக்க வாய்ப்புகள் உண்டு. நீங்கள் செய்யக்கூடிய வேலை, தொழில் தொடர்பாக ஒரு கொள்கை வகுத்து செயல்படுவது நன்மை தரும். கல்வி, வேலை தொடர்பான பயணங்கள் மேற்கொள்ள வாய்ப்புகள் உண்டு. இன்று ஏதேனும் ஒரு விஷயத்திற்கான பணம் செலுத்தும் விஷயத்தில் நிதானத்தை கடைப்பிடிப்பதும், அவற்றை பரிசீலிப்பதும் அவசியம். 

விருச்சிகம் ராசி பலன் 

விருச்சிக ராசி அன்பர்களுக்கு இன்று வீண் செலவுகள் தவிர்த்து விவேகமாக செயல்படவும். இன்று உங்களுடைய வசதிக்காக அல்லது சமூகத்தின் அழுத்தத்தின் காரணமாக தேவையற்ற பொருட்களை வாங்க நேரிடலாம். நீண்ட கால நிதி சார்ந்த முடிவுகளில் கவனம் தேவை. உங்களுடைய ஆரோக்கியம் ஏற்ற இறக்கத்துடன் இருக்கும். அதனால் மனதை தெளிவாக வைத்துக்கொள்ளவும். குறிப்பாக உங்கள் உணவு சார்ந்த விஷயங்களில் கவனம் தேவை. இன்று வேலைப்பளு காரணமாக பரபரப்பான நாளாவே இருக்கும். உங்கள் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. 

தனுசு ராசி பலன் 

தனுசு ராசி அன்பர்களுக்கு இன்று உங்கள் பணிகளை திட்டமிடுவதும், அவற்றை முடிப்பதற்காக சுறுசுறுப்பாக செயல்பட வேண்டிய நாள். ஆரோக்கியத்தை பராமரிக்கும் விதமாக உணவுகளை எடுத்துக் கொள்ளவும். சிலருக்கு செரிமானம் தொடர்பான பிரச்சனைகள் இருக்கலாம். இன்று உங்களுடைய நிதி சார்ந்த மற்றும் தனிப்பட்ட விஷயங்களில் கவனம் தேவை. மேலும் இது குறித்து உங்கள் துணையுடன் வெளிப்படையாக பேசுவது நன்மை தரும். இன்று ஆராய்ச்சி தொடர்பான விஷயங்களில் ஆர்வத்துடன் ஈடுபடுவீர்கள். உங்களுடைய நிதி சார்ந்த பாதுகாப்பை உறுதிப்படுத்திக் கொள்ளவும். 

மகரம் ராசி பலன் 

மகர ராசி அன்பர்களுக்கு இன்று உறவுகளை கவனமாக கையாள வேண்டிய நாள். இன்று உங்கள் துணையின் மன உணர்வை புரிந்து செயல்பட வேண்டிய நாள். இன்று உங்களுடைய தகவல்கள் மற்றும் வீட்டில் தெளிவாக இருக்கவும். இன்று கடன் வாங்குவது அல்லது முதலீடு செய்யும் விஷயத்தில் மறு ஆய்வு செய்து செயல்படும். உடல் மற்றும் மன நலனை அதிகரிக்க ஆழ்ந்த மூச்சுப் பயிற்சி மற்றும் மென்மையான உடற்பயிற்சிகளை செய்ய தவறாதீர்கள். என்ற ஒரு விஷயங்களையும் உணர்வுபூர்வமாக உடனடியாக அனுபவத்தை தவிர்க்கவும். நிதானமாக யோசித்து செயல்பட வேண்டிய நாள். வேலை மற்றும் பணம் தொடர்பானது உங்களுடைய ரகசியங்களை யாரிடம் வெளிப்படுத்த வேண்டாம். 

கும்பம் ராசி பலன் 

கும்ப ராசி அன்பர்களுக்கு இன்று சில விஷயங்கள் உங்களுக்கு சுமையாக மாற வாய்ப்பு உண்டு. அதனால் மனதளவில் சோர்வாக காணப்படுகிறது. உங்களுடைய தொழில் தொடர்பாக முடிவு எடுப்பதில் கவனம் தேவை. காதல் தொடர்பான விஷயங்களில் நிதானத்தை கடைபிடிக்கவும். உணர்வு பூர்வமான நெருக்கம் அதிகரிக்கும். தம்பதிகள் சில குடும்ப பொறுப்புகளை கவனமாக செய்து முடிப்பது நன்மை தரும். கடன் வாங்குவது அல்லது முதலீடு தொடர்பான விஷயங்களை மறு ஆய்வு செய்து செயல்படவும். தேவையற்ற பணிகளில் அதிக ஆர்வம் காட்டுவீர்கள். அதை நீண்ட கால ஸ்திரத்தன்மையை வலுப்படுத்தும் விஷயங்களில் ஈடுபடவும். 

மீனம் ராசி பலன் 

மீன ராசி அன்பர்களுக்கு இன்று உங்களுடைய மனதில் தேங்கியிருக்கும் குறைகள் அல்லது மனக்கவலைகள் தீரக்கூடியதாக இருக்கும். நிதி சார்ந்த மன அழுத்தத்தில் இருந்து விடுபடுபீர்கள். உங்களுடைய உடல்நலம் மேம்படுத்தும் விதமான உணவை எடுத்துக் கொள்ளவும். வேலை தொடர்பாக கூட்டு முயற்சி நல்ல பலனை தரும். இன்று உங்களுடைய முக்கிய பணிகளை வரிசைப்படுத்தி திட்டமிட்டுக் கொள்ளவும். இது வேலையை சரியான நேரத்தில் முடிப்பதற்கான சூழலை தரும். இன்று உங்கள் குடும்பத்தினருடன் நேரம் செலவிடுவதற்காக திட்டமிடங்கள்.

Disclaimer: All the comments will be moderated by the AD editorial. Abstain from posting comments that are obscene, defamatory or slanderous. Please avoid outside hyperlinks inside the comment and avoid typing all capitalized comments. Help us delete comments that do not follow these guidelines by flagging them (mouse over a comment and click the flag icon on the right side). Do use these forums to voice your opinions and create healthy discourse.

Comments

0
Comments are disabled

Note: Due to legal constraints, the Ada Derana Editorial team has taken a decision to disable comments on all articles concerning ongoing court procedures.


MOST READ

காணொளி
2026 தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை

2026 தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை

விரிவுரையாளர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு கோரி போராட்டம்!

விரிவுரையாளர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு கோரி போராட்டம்!

பதவி விலகிய NPP உறுப்பினர் வழங்கிய  விளக்கம்!

பதவி விலகிய NPP உறுப்பினர் வழங்கிய விளக்கம்!

சிங்கம் சக மகர வாகன உற்சவம்!

சிங்கம் சக மகர வாகன உற்சவம்!

மன்னாரில் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் போராட்டம்!

மன்னாரில் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் போராட்டம்!

நாக வாகன உற்சவம்!

நாக வாகன உற்சவம்!

செல்வச்சந்நிதி முருகன் ஆலயத் தேர் திருவிழா

செல்வச்சந்நிதி முருகன் ஆலயத் தேர் திருவிழா

புனித மீலாதுன் நபி தினம்!

புனித மீலாதுன் நபி தினம்!

மனம் திறந்த அமைச்சர்!

மனம் திறந்த அமைச்சர்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

Mobitel 1278