Header Logo
SLIC
சினிமா
அனிருத்தின் சம்பளம் இத்தனை கோடியா?

Sep 3, 2026 - 11:56 AM

அனிருத்தின் சம்பளம் இத்தனை கோடியா?
Mobitel Inner 1278
EDEX Inner

அனிருத்திற்குப் பேசப்பட்ட சம்பளம் குறித்த தகவல் வெளியாகி திரையுலகையே ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. 

தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குநராக வலம் வரும் லோகேஷ் கனகராஜ், சமீபத்தில் 'டி.சி.' திரைப்படத்தின் மூலம் நடிகராக அவதாரமெடுத்து கதாநாயகனாகவும் மாபெரும் வெற்றியைப் பெற்றுள்ளார். இப்படத்தின் வெற்றிக்குப் பிறகு, இந்திய அளவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள தனது அடுத்த பிரம்மாண்ட திரைப்படத்தின் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். 

தெலுங்கு திரையுலகின் ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜுன் கதாநாயகனாக நடிக்கும் 'AA23' படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். அல்லு அர்ஜுனின் 23 ஆவது படமாக உருவாகும் இதன் முன் தயாரிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. விரைவில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட உள்ளது. இப்படத்திற்கு ராக்ஸ்டார் அனிருத் இசையமைக்கிறார். 

இந்நிலையில், இப்படத்திற்காக அனிருத்திற்குப் பேசப்பட்ட சம்பளம் குறித்த தகவல் வெளியாகி திரையுலகையே ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. தகவல்களின்படி, அனிருத்துக்கு 20 கோடி ரூபா முதல் 23 கோடி ரூபா வரை சம்பளமாகப் பேசப்பட்டுள்ளதாகக் தெரிவிக்கப்படுகிறது. இது இந்திய அளவில் ஒரு இசையமைப்பாளருக்கு வழங்கப்படும் மிக உயர்ந்த சம்பளங்களில் ஒன்றாகும். 

அனிருத் இசையில் அடுத்ததாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 'ஜெயிலர்-2' திரைப்படம் திரைக்கு வரவுள்ளது. இது தவிர 'அரசன்', 'கிங்', 'பாரடைஸ்' மற்றும் 'தர்மன்' போன்ற பல பிரம்மாண்ட திரைப்படங்களையும் அவர் தனது கைவசம் வைத்துள்ளார். 

அல்லு அர்ஜுன் - லோகேஷ் கனகராஜ் - அனிருத் எனும் மாஸ் கூட்டணி இணைந்துள்ளதால், இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே உச்சத்தை தொட்டுள்ளது.

Disclaimer: All the comments will be moderated by the AD editorial. Abstain from posting comments that are obscene, defamatory or slanderous. Please avoid outside hyperlinks inside the comment and avoid typing all capitalized comments. Help us delete comments that do not follow these guidelines by flagging them (mouse over a comment and click the flag icon on the right side). Do use these forums to voice your opinions and create healthy discourse.

Comments

0
Comments are disabled

Note: Due to legal constraints, the Ada Derana Editorial team has taken a decision to disable comments on all articles concerning ongoing court procedures.


MOST READ

காணொளி
2026 தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை

2026 தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை

விரிவுரையாளர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு கோரி போராட்டம்!

விரிவுரையாளர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு கோரி போராட்டம்!

பதவி விலகிய NPP உறுப்பினர் வழங்கிய  விளக்கம்!

பதவி விலகிய NPP உறுப்பினர் வழங்கிய விளக்கம்!

சிங்கம் சக மகர வாகன உற்சவம்!

சிங்கம் சக மகர வாகன உற்சவம்!

மன்னாரில் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் போராட்டம்!

மன்னாரில் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் போராட்டம்!

நாக வாகன உற்சவம்!

நாக வாகன உற்சவம்!

செல்வச்சந்நிதி முருகன் ஆலயத் தேர் திருவிழா

செல்வச்சந்நிதி முருகன் ஆலயத் தேர் திருவிழா

புனித மீலாதுன் நபி தினம்!

புனித மீலாதுன் நபி தினம்!

மனம் திறந்த அமைச்சர்!

மனம் திறந்த அமைச்சர்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

Mobitel 1278