Header Logo
SLIC
வணிகம்
SLT-MOBITEL இலங்கையின் விளையாட்டுத் திறமைக்கு ஆதரவளித்து, சம்பியன் ருமேஷ் தரங்கவை தனது விளம்பரத் தூதராக வரவேற்கிறது

Sep 3, 2026 - 01:09 PM

SLT-MOBITEL இலங்கையின் விளையாட்டுத் திறமைக்கு ஆதரவளித்து, சம்பியன் ருமேஷ் தரங்கவை தனது விளம்பரத் தூதராக வரவேற்கிறது
Mobitel Inner 1278
EDEX Inner

சாதனை படைத்த ஈட்டி எறிதல் சம்பியனுடன் கைகோர்ப்பதன் மூலம், SLT-MOBITEL திறமைகளை வளர்ப்பதற்கும், விளையாட்டுத் திறமையைக் கொண்டாடுவதற்கும், இலங்கையின் எதிர்கால சம்பியன்களுக்கு உத்வேகம் அளிப்பதற்குமான தனது அர்ப்பணிப்பை வலுப்படுத்துகிறது. 

தேசிய தகவல் தொடர்பாடல் மற்றும் தொழில்நுட்ப தீர்வுகள் வழங்குநரான SLT‑MOBITEL, ஈட்டி எறிதலில் சாதனை படைத்த இலங்கை வீரரும் பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளில் தங்கப் பதக்கம் வென்றவருமான ருமேஷ் தரங்க பத்திரகேவை தனது விளம்பரத் தூதராக நியமித்திருப்பதாக, 2026 ஆகஸ்ட் 17 அன்று கொழும்பு, ஷங்கிரிலா ஹோட்டலில் நடைபெற்ற நிகழ்வின் போது அறிவித்தது. 

ருமேஷ் தரங்கவுடனான இந்த இணைவு, SLT-MOBITEL நிறுவனத்திற்கு மிகவும் பொருத்தமானதாக அமைந்துள்ளது. தேசியப் பெருமை, திறமை மற்றும் உலகளாவிய போட்டித்திறன் ஆகியவற்றை பிரதிபலிக்கும் ருமேஷ் தரங்க, சிறந்து விளங்குவதற்கான அர்ப்பணிப்பு மற்றும் ஒழுக்கத்தை உடைய முன்னணி விளையாட்டு வீரர்களின் பண்புகளை வெளிப்படுத்துகிறார். அவரது பயணம், முன்னேற்றம், நம்பகத்தன்மை, தலைமைத்துவம் மற்றும் விசேடத்துவம் ஆகிய தனது விழுமியங்களுக்கான SLT-MOBITEL இன் அர்ப்பணிப்புடனும் நெருக்கமாக ஒத்துப்போகிறது. 

SLT-MOBITEL நிறுவனத்தைப் பொறுத்தவரையில், இக் கூட்டாண்மை ஒரு அனுசரணை ஒப்பந்தத்தையும் தாண்டியதாகும். இவ் இணைவு, இலங்கையின் இளைஞர்களுக்கு உத்வேகம் அளித்து, அவர்களின் கனவுகளை நனவாக்குவதற்கான நம்பிக்கையை ஊக்குவிக்கும் இணைப்பாகவும் அமைகிறது. உயர்ந்த இலக்குகளுடனும் தன்னம்பிக்கையுடனும் உலக அரங்கில் முன்னேறிய ருமேஷ் தரங்கவின் பயணத்தை இது பிரதிபலிக்கிறது. 

முக்கியமாக, தேசியப் பெறுமதியையும் பெருமையையும் வளர்ப்பதில் அர்ப்பணிப்புடன் செயற்படும் தேசிய வர்த்தகநாமமாக SLT-MOBITEL வகிக்கும் பங்களிப்பையும் இக் கூட்டாண்மை எடுத்துக்காட்டுகிறது. 

ருமேஷ் தரங்க பத்திரகே, இலங்கையின் மிகவும் பாராட்டப்படும் விளையாட்டு வீரர்களில் ஒருவராகவும், சர்வதேச தடகளத் துறையில் வேகமாக வளர்ந்து வரும் முன்னணி வீரராகவும் தன்னை நிலைநிறுத்தியுள்ளார். கிரிக்கெட் வேகப்பந்து வீச்சாளராக தனது பயணத்தைத் தொடங்கிய அவர், இன்று உலகத் தரம் வாய்ந்த ஈட்டி எறிதல் வீரராக உயர்ந்துள்ளார். இப் பயணம் அவரது விடாமுயற்சி, ஒழுக்கம் மற்றும் இலட்சியத்தை வெளிப்படுத்துவதுடன், தொழில்நுட்பம் மற்றும் இணைப்புத்திறன் மூலம் இலங்கையர்களை இணைத்து அவர்களுக்கு வலுச்சேர்க்கும் SLT- MOBITELஇன் நோக்கத்துடனும் ஒத்துப்போகிறது. 

SLT-MOBITEL, அவர் இலங்கை விளையாட்டுத்துறையின் எதிர்காலத்தை பிரதிநிதித்துவப்படுத்துகிறார் என நம்புகிறது. அவரது சாதனைகள், எல்லைகளைத் தாண்டி மேலும் உயரங்களை எட்ட அனைவருக்கும் உத்வேகம் அளிக்கின்றன. இது இலங்கையின் இணைப்புத்திறனை தொடர்ந்து மேம்படுத்தி, இலங்கையர்களை உலகத்துடன் மேலும் நெருக்கமாக இணைப்பதில் SLT-MOBITEL முன்னெடுத்து வரும் பயணத்துடன் ஒத்துப்போகிறது. இக் கூட்டாண்மை, இலங்கையின் அடுத்த தலைமுறையினருக்கு உத்வேகம் அளிப்பதுடன், SLT-MOBITEL இன் வர்த்தகநாம அடையாளத்தை மேலும் வலுப்படுத்தவும், விளையாட்டுச் சிறப்பை கொண்டாடுவதில் நிறுவனத்தின் தொடர்ச்சியான அர்ப்பணிப்பையும் வெளிப்படுத்துகிறது.

Disclaimer: All the comments will be moderated by the AD editorial. Abstain from posting comments that are obscene, defamatory or slanderous. Please avoid outside hyperlinks inside the comment and avoid typing all capitalized comments. Help us delete comments that do not follow these guidelines by flagging them (mouse over a comment and click the flag icon on the right side). Do use these forums to voice your opinions and create healthy discourse.

Comments

0
Comments are disabled

Note: Due to legal constraints, the Ada Derana Editorial team has taken a decision to disable comments on all articles concerning ongoing court procedures.


MOST READ

காணொளி
2026 தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை

2026 தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை

விரிவுரையாளர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு கோரி போராட்டம்!

விரிவுரையாளர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு கோரி போராட்டம்!

பதவி விலகிய NPP உறுப்பினர் வழங்கிய  விளக்கம்!

பதவி விலகிய NPP உறுப்பினர் வழங்கிய விளக்கம்!

சிங்கம் சக மகர வாகன உற்சவம்!

சிங்கம் சக மகர வாகன உற்சவம்!

மன்னாரில் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் போராட்டம்!

மன்னாரில் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் போராட்டம்!

நாக வாகன உற்சவம்!

நாக வாகன உற்சவம்!

செல்வச்சந்நிதி முருகன் ஆலயத் தேர் திருவிழா

செல்வச்சந்நிதி முருகன் ஆலயத் தேர் திருவிழா

புனித மீலாதுன் நபி தினம்!

புனித மீலாதுன் நபி தினம்!

மனம் திறந்த அமைச்சர்!

மனம் திறந்த அமைச்சர்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

Mobitel 1278