Sep 3, 2026 - 01:12 PM

JXG (ஜனசக்தி குழுமம்) நிறுவனத்தின் துணை நிறுவனமான ஜனசக்தி பைனான்ஸ் பிஎல்சி, வாடிக்கையாளர் சௌகரியத்தை மேம்படுத்தவும் சிறந்த சேவை அனுபவத்தை வழங்கவும் மேற்கொண்டு வரும் தொடர் முயற்சிகளின் ஒரு பகுதியாக, தனது கண்டி கிளையை, வாடிக்கையாளர்களுக்கு எளிதில் அணுகக்கூடிய, நட்புறவான இடமான இல.40, குறுக்குத் தெரு, கண்டி என்னும் முகவரிக்கு இடமாற்றியுள்ளது.
புதிய கிளை வளாகம், மேம்படுத்தப்பட்ட அணுகல்தன்மை மற்றும் வசதிகளை வழங்கி, ஜனசக்தி பைனான்ஸின் பல்வேறு நிதித்தீர்வுகளை வாடிக்கையாளர்கள் மிகவும் சௌகரியமான மற்றும் வினைத்திறனான முறையில் பெற்றுக் கொள்ள வழிவகுக்கிறது. இந்த இடமாற்றம் ஆனது தனது சேவைகளை வாடிக்கையாளர்களுக்கு மேலும் நெருக்கமாகக் கொண்டு வருவதிலும், ஒட்டுமொத்த கிளை அனுபவத்தை வலுப்படுத்துவதிலும் நிறுவனம் கொண்டுள்ள கவனத்தைப் பிரதிபலிக்கிறது.
கண்டி கிளையானது வைப்புத்தொகை, சேமிப்புக் கணக்குகள், லீசிங், தங்கக் கடன்கள், மாற்று நிதித்தீர்வுகள், நிறுவன மற்றும் SME நிதியுதவி மற்றும் தனிநபர் மற்றும் வணிகத் தேவைகளுக்கு ஆதரவாக வடிவமைக்கப்பட்ட பிற நிதிச்சேவைகள் உள்ளிட்ட நிதித்தீர்வுகளின் விரிவான தொகுப்பைத் தொடர்ந்து வழங்குகிறது.
புதிய இடத்தின் ஊடாக ஜனசக்தி பைனான்ஸ் கண்டியில் தனது பிரசன்னத்தை தொடர்ந்து வலுப்படுத்தி வரும் அதே வேளையில் வாடிக்கையாளர்களின் வளர்ந்து வரும் தேவைகளுக்கு ஏற்ப அதிக சௌகரியம், பொறுப்புணர்வுடன் கூடிய சேவையையும் வாடிக்கையாளர் அனுபவத்தையும் வழங்குவதில் கவனம் செலுத்துகிறது.
ஜனசக்தி பைனான்ஸ் பற்றி
ஜனசக்தி பைனான்ஸ் வாடிக்கையாளர்களின் தேவைகளை நிவர்த்தி செய்யக்கூடிய பரந்தளவு நிதிச்சேவைகளை வழங்குகிறது. அதில், வைப்புகள், சேமிப்புக் கணக்குகள், லீசிங், தங்கக் கடன்கள், மாற்று நிதித்தீர்வுகள், கூட்டாண்மை நிதிவசதியளிப்புகள் மற்றும் பல சேவைகள் அடங்கியுள்ளன. நிறுவனம் 45 வருட கால உறுதித்தன்மை, வலிமை, நம்பகத்தன்மை மற்றும் நிபுணத்துவம் ஆகியவற்றை நிதித்துறையில் கொண்டுள்ளது.
வாடிக்கையாளரை நோக்காகக் கொண்ட நிதிச்சேவைகள் வழங்குனராக ஜனசக்தி பைனான்ஸ் பிஎல்சி தன்னை நிலைநிறுத்தியுள்ளதுடன், புத்தாக்கத்துக்கு முக்கியத்துவமளித்து, சிறந்த தீர்வுகள் மற்றும் வாடிக்கையாளர் சேவையை வழங்குகிறது. ஜனசக்தி பைனான்ஸ் ஒரு JXG (ஜனசக்தி குழும கம்பனி) என்பதுடன், இலங்கை மத்திய வங்கியின் அனுமதி மற்றும் LRA இடமிருந்து BB+ (Positive Outlook) தரப்படுத்தலை பெற்றுக் கொண்டுள்ள நிறுவனமாகும்.
ஜனசக்தி பைனான்ஸ் பிஎல்சி : https://www.janashakthifinance.lk/



























