Sep 3, 2026 - 12:44 PM

மும்பை இந்தியன்ஸ் அணியிலிருந்து தற்போதைய நிலையில், ஹர்திக் பாண்டியா வெளியேற வாய்ப்பில்லை என தகவல் வெளியாகியுள்ளது.
மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக உள்ள ஹர்திக் பாண்டியா, அணியிலிருந்து வெளியேற விரும்பியதாகக் கூறப்பட்டது. இதையடுத்து அவருக்குப் பதில் வேறு வீரரை வாங்க மும்பை அணி நிர்வாகம் முயற்சித்தது.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் எவ்வித முன்னேற்றமும் இல்லாத நிலையில் 2027 ஆம் ஆண்டும் ஹர்திக் பாண்டியா மும்பை அணியிலேயே நீடிப்பார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
அதேநேரத்தில், அவருக்கு கேப்டன் பதவி வழங்கப்படாது என்றும் புதிய கேப்டனை ரோஹித் சர்மா தேர்வு செய்வார் எனவும் கூறப்படுகிறது.
திலக் வர்மா அல்லது ஜஸ்பிரீத் பும்ரா ஆகியோரில் ஒருவருக்கு மும்பை இந்தியன்ஸ் கேப்டன் பொறுப்பு வழங்கப்படலாம் என்றும் தெரிகிறது. இதனிடையே 2026 ஆம் ஆண்டில் மிக மோசமாக விளையாடிய சூர்ய குமார் யாதவ், மும்பை அணியில் நீடிப்பார் என்றும் கூறப்படுகிறது.



























