Header Logo
SLIC
சினிமா
பழைய ஆளுன்னு பார்க்க மறுத்து அசிங்கப்படுத்திய இயக்குநர்!

Sep 4, 2026 - 01:22 PM

பழைய ஆளுன்னு பார்க்க மறுத்து அசிங்கப்படுத்திய இயக்குநர்!
Mobitel Inner 1278
EDEX Inner

சினிமாவில் 10, 20 ஆண்டுகளாக பணியாற்றி பிரபலமான நடிகர் வையாபுரி, ஒரு இயக்குநர், நீங்கள் பழைய ஆள் இப்போ இன்ஸ்டாகிராமில் புதியதாக பல பேர் இருக்கிறார்கள் என்று கூறி தன்னை சந்திக்கக்கூட மறுத்துவிட்டதாக தெரிவித்தது பலரது கவனத்தையும் ஈர்த்திருக்கிறது. 

ஒரு பிரடொக்ஷன் மேனேஜர் கூப்பிட்டதால் அந்த இயக்குநரை சந்திக்க வையாபுரி சென்றுள்ளார். சினிமாவில் இத்தனை ஆண்டுகள் நடித்த ஒருவர் என்பதால் வழக்கம்போல் கதை கேட்கும் வாய்ப்பு கிடைக்கும் என்று நினைத்துள்ளார், ஆனால் அங்கே நடந்தது வேறு. 

இவரை பார்த்ததும் அந்த இயக்குநர் இவரை எதுக்கு இங்கே வர சொன்னீங்க? இவர் பழைய ஆள், இப்போ இன்ஸ்டாகிராமில் புதுசா நிறைய பேர் இருக்காங்க, அவங்கள போட்டாத்தான் ரசிகர்கள் ரசிப்பாங்க, இவரை எல்லோரும் மறந்திருப்பாங்க, அதனால நான் இல்லன்னு சொல்லிருங்க என்று அந்த இயக்குநர் சொல்லி இருக்கிறாராம். 

உடனே அந்த மேனேஜர், வையாபுரியிடம் மன்னிப்பு கேட்டுவிட்டு அவர் உங்களை சந்திக்க விரும்பவில்லை சார், நீங்க போயிட்டு வாங்க என்று சொன்னாராம். அதைக்கேட்ட வையாபுரிக்கு ரொம்பவும் வருத்தமக இருந்ததாம். 

ஒரு வாய்ப்பு கிடைக்கவில்லை என்றால் கூட பரவாயில்லை, ஆனால் பழைய ஆள் என்று ஒதுக்குவது என்பது பல ஆண்டுகள் சினிமாவில் உழைத்த ஒருவருக்கு எவ்வளவு வலித்திருக்கும் என்று வையாபுரி உருக்கமாக ஒரு பேட்டியில் பகிர்ந்துள்ளார். 

அதனால் தான் நான் இப்போது இன்ஸ்டாகிராம் ஆரம்பித்து பேசி வருகிறேன். இத்தனை பேர் என் மீது எவ்வளவு அன்பு வைத்திருக்கிறீர்கள், என்னை எவ்வள நேசிக்கிறீர்கள், இது போதும் எனக்கு என்று கண்ணீருடன் உருக்கமாக பேசியிருக்கிறார் வையாபுரி. தற்போது வரை அவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தை 2 லட்சத்திற்கும் அதிகமானோர் ஃபாலோ செய்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Disclaimer: All the comments will be moderated by the AD editorial. Abstain from posting comments that are obscene, defamatory or slanderous. Please avoid outside hyperlinks inside the comment and avoid typing all capitalized comments. Help us delete comments that do not follow these guidelines by flagging them (mouse over a comment and click the flag icon on the right side). Do use these forums to voice your opinions and create healthy discourse.

Comments

0
Comments are disabled

Note: Due to legal constraints, the Ada Derana Editorial team has taken a decision to disable comments on all articles concerning ongoing court procedures.


MOST READ

காணொளி
கச்சத்தீவு எங்களுடையது!

கச்சத்தீவு எங்களுடையது!

2026 தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை

2026 தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை

விரிவுரையாளர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு கோரி போராட்டம்!

விரிவுரையாளர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு கோரி போராட்டம்!

பதவி விலகிய NPP உறுப்பினர் வழங்கிய  விளக்கம்!

பதவி விலகிய NPP உறுப்பினர் வழங்கிய விளக்கம்!

சிங்கம் சக மகர வாகன உற்சவம்!

சிங்கம் சக மகர வாகன உற்சவம்!

மன்னாரில் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் போராட்டம்!

மன்னாரில் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் போராட்டம்!

நாக வாகன உற்சவம்!

நாக வாகன உற்சவம்!

செல்வச்சந்நிதி முருகன் ஆலயத் தேர் திருவிழா

செல்வச்சந்நிதி முருகன் ஆலயத் தேர் திருவிழா

புனித மீலாதுன் நபி தினம்!

புனித மீலாதுன் நபி தினம்!

மனம் திறந்த அமைச்சர்!

மனம் திறந்த அமைச்சர்!

Mobitel 1278