Header Logo
செய்திகள்
ஆப்பிரிக்காவின் உண்மையான அளவைக் காட்டும் புதிய உலக வரைபடம் விரைவில்

Sep 5, 2026 - 01:55 PM

ஆப்பிரிக்காவின் உண்மையான அளவைக் காட்டும் புதிய உலக வரைபடம் விரைவில்
Mobitel Inner 1278
EDEX Inner

ஆப்பிரிக்கக் கண்டத்தின் உண்மையான நிலப்பரப்பை மிகவும் துல்லியமாகப் பிரதிபலிக்கும் வகையில் தயாரிக்கப்பட்ட புதிய உலக வரைபடத்தைப் பயன்படுத்துவதற்கான பிரேரணை ஒன்று ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

 

டோகோ (Togo) நாடு சமர்ப்பித்த இந்தப் பிரேரணைக்கு ஆப்பிரிக்க ஒன்றியம் முழு ஆதரவை வழங்கியதுடன், பிரான்ஸ் மற்றும் பிரித்தானியா உட்பட 164 நாடுகள் இதற்கு ஆதரவாக வாக்களித்துள்ளன.

 

இந்தப் பிரேரணைக்கு எதிராக வாக்களித்த ஒரே நாடு அமெரிக்கா மட்டுமே என்பதுடன், மேலும் 6 நாடுகள் வாக்களிப்பில் பங்கேற்காமல் விலகியிருந்தன.

 

1569ஆம் ஆண்டு ஃபிளெமிஷ் (Flemish) வரைபடக் கலைஞர் ஜெரார்டஸ் மெர்கேட்டர் (Gerardus Mercator) என்பவரால் உருவாக்கப்பட்ட பாரம்பரிய 'மெர்கேட்டர் வரைபடம்' (Mercator map) நூற்றுக்கணக்கான ஆண்டுகளாகப் பயன்படுத்தப்பட்டு வந்தபோதிலும், அதனால் ஆப்பிரிக்காவின் உண்மையான அளவு சிதைத்துக் காட்டப்படுவதாக நீண்டகாலமாகக் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.

 

அந்த வரைபடத்தின் மூலம் கிரீன்லாந்தும் ஆப்பிரிக்காவும் ஒரே அளவில் காட்டப்பட்ட போதிலும், உண்மையில் ஆப்பிரிக்கா கிரீன்லாந்தை விட 14 மடங்கு பெரியதாகும்.

 

கோள வடிவ பூமியின் மேற்பரப்பை இரு பரிமாண (2D) வரைபடத்தில் வரையும்போது இந்தச் சிதைவு ஏற்படுவதாக விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.

 

இந்த வேறுபாட்டைச் சரிசெய்யும் நடவடிக்கையாக, 2018ஆம் ஆண்டு வரைபட விஞ்ஞானிகள் குழுவினால் 'Equal Earth' எனப்படும் புதிய வரைபட வீழ்ப்பு (Map Projection) உருவாக்கப்பட்டது.

 

கடந்த பெப்ரவரி மாதம் ஆப்பிரிக்க ஒன்றியத்தின் உறுப்பு நாடுகளான 54 நாடுகளினால் இது உத்தியோகபூர்வமாக ஏற்றுக்கொள்ளப்பட்டதுடன், ஆப்பிரிக்காவின் உண்மையான புவியியல் அளவைப் புரிந்துகொள்வதற்கு இதுவே மிகவும் பொருத்தமானது என்றும் சுட்டிக்காட்டப்பட்டது.

 

அமெரிக்கா, சீனா, இந்தியா, ஜப்பான், மெக்சிகோ மற்றும் ஐரோப்பாவின் பெரும்பகுதியை ஒன்றிணைத்தாலும், ஆப்பிரிக்கக் கண்டம் அதைவிடப் பெரியது என்பது புள்ளிவிவரத் தரவுகள் மூலம் உறுதிப்படுத்தப்படுவதாக இணையவழி பிரச்சாரக் குழுவொன்று தெரிவிக்கிறது.

 

ஐக்கிய நாடுகள் சபையின் இந்தத் தீர்மானம் சட்டப்பூர்வமாக பிணைக்கப்படவில்லை என்றாலும், உலகெங்கிலும் உள்ள பல்வேறு நிறுவனங்கள், கல்வித் துறை மற்றும் ஊடகங்கள் பயன்படுத்தும் வரைபடங்கள் எதிர்காலத்தில் மாறுவதற்கு இது ஒரு அடித்தளமாக அமையும்.

 

நியாயமான உலகத்தை உருவாக்க சரியான வரைபடம் அவசியமானது என்றும், வரைபடம் என்பது வெறும் புவியியல் வரைபடம் மட்டுமல்ல, அது அரசியல் மற்றும் பொருளாதாரப் பிம்பத்தைத் தீர்மானிக்கும் ஒரு கருவி என்றும் ஆப்பிரிக்கத் தலைவர்களும் புவியியலாளர்களும் சுட்டிக்காட்டுகின்றனர்.

Disclaimer: All the comments will be moderated by the AD editorial. Abstain from posting comments that are obscene, defamatory or slanderous. Please avoid outside hyperlinks inside the comment and avoid typing all capitalized comments. Help us delete comments that do not follow these guidelines by flagging them (mouse over a comment and click the flag icon on the right side). Do use these forums to voice your opinions and create healthy discourse.

Comments

0
Comments are disabled

Note: Due to legal constraints, the Ada Derana Editorial team has taken a decision to disable comments on all articles concerning ongoing court procedures.


MOST READ

காணொளி
கச்சத்தீவு என்பது இலங்கைக்குச் சொந்தமானது!

கச்சத்தீவு என்பது இலங்கைக்குச் சொந்தமானது!

கச்சத்தீவு எங்களுடையது!

கச்சத்தீவு எங்களுடையது!

2026 தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை

2026 தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை

விரிவுரையாளர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு கோரி போராட்டம்!

விரிவுரையாளர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு கோரி போராட்டம்!

பதவி விலகிய NPP உறுப்பினர் வழங்கிய  விளக்கம்!

பதவி விலகிய NPP உறுப்பினர் வழங்கிய விளக்கம்!

சிங்கம் சக மகர வாகன உற்சவம்!

சிங்கம் சக மகர வாகன உற்சவம்!

மன்னாரில் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் போராட்டம்!

மன்னாரில் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் போராட்டம்!

நாக வாகன உற்சவம்!

நாக வாகன உற்சவம்!

செல்வச்சந்நிதி முருகன் ஆலயத் தேர் திருவிழா

செல்வச்சந்நிதி முருகன் ஆலயத் தேர் திருவிழா

புனித மீலாதுன் நபி தினம்!

புனித மீலாதுன் நபி தினம்!

Mobitel 1278