Header Logo
செய்திகள்
வாகன விபத்துக்களில் பொலிஸ் உத்தியோகத்தர் உட்பட மூவர் உயிரிழப்பு

Sep 6, 2026 - 01:07 PM

வாகன விபத்துக்களில் பொலிஸ் உத்தியோகத்தர் உட்பட மூவர் உயிரிழப்பு
Mobitel Inner 1278
EDEX Inner

நாட்டின் பல பகுதிகளில் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் உட்பட மூவர் உயிரிழந்துள்ளனர். 

தணமல்வில - அம்பேகமுவ வீதியின் அரம்பேகமுவ பகுதியில் இடம்பெற்ற விபத்தொன்றில் 43 வயதுடைய பொலிஸ் சாஜன்ட் ஒருவர் உயிரிழந்துள்ளார். 

தணமல்வில திசையை நோக்கிப் பயணித்த மோட்டார் சைக்கிளொன்று வீதியை விட்டு விலகி கவிழ்ந்ததில் இந்த விபத்து சம்பவித்துள்ளது. 

இவ்வாறு உயிரிழந்தவர் அம்பேகமுவ பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய, காமினிபுர - தணமல்வில பகுதியைச் சேர்ந்த பொலிஸ் சாஜன்ட் ஒருவராவார். 

அதேபோல், கடவத்தை நகரின் வெளிவட்ட வீதியிலுள்ள உடற்பயிற்சி பூங்காவிற்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் நபரொருவர் உயிரிழந்துள்ளார். 

கடவத்தை திசையை நோக்கிப் பயணித்த வேன் ஒன்றும், அதற்கு எதிர்திசையில் வந்த முச்சக்கரவண்டி ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து சம்பவித்துள்ளது. 

விபத்தில் பலத்த காயமடைந்த முச்சக்கரவண்டி சாரதி ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதே உயிரிழந்திருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். 

இவ்வாறு உயிரிழந்தவர் கடவத்தை - கோனஹேன பகுதியைச் சேர்ந்த 58 வயதுடைய நபராவார். 

சம்பவத்துடன் தொடர்புடைய வேனின் சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். 

இதற்கிடையில், மொனராகலை - பதுளை வீதியின் தொலொபோவத்தை பகுதியில் இடம்பெற்ற விபத்தொன்றில் 50 வயதுடைய பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். 

முச்சக்கரவண்டி ஒன்றும் இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பேருந்தான்றும் மோதிக்கொண்டதில் இந்த விபத்து சம்பவித்துள்ளது. 

விபத்தில் முச்சக்கரவண்டியில் பயணித்த நபரொருவரும் பெண்ணொருவரும் பலத்த காயமடைந்து பசறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அங்கு அந்தப் பெண் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

விபத்து தொடர்பில் பேருந்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

Disclaimer: All the comments will be moderated by the AD editorial. Abstain from posting comments that are obscene, defamatory or slanderous. Please avoid outside hyperlinks inside the comment and avoid typing all capitalized comments. Help us delete comments that do not follow these guidelines by flagging them (mouse over a comment and click the flag icon on the right side). Do use these forums to voice your opinions and create healthy discourse.

Comments

0
Comments are disabled

Note: Due to legal constraints, the Ada Derana Editorial team has taken a decision to disable comments on all articles concerning ongoing court procedures.


MOST READ

காணொளி
கச்சத்தீவு என்பது இலங்கைக்குச் சொந்தமானது!

கச்சத்தீவு என்பது இலங்கைக்குச் சொந்தமானது!

கச்சத்தீவு எங்களுடையது!

கச்சத்தீவு எங்களுடையது!

2026 தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை

2026 தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை

விரிவுரையாளர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு கோரி போராட்டம்!

விரிவுரையாளர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு கோரி போராட்டம்!

பதவி விலகிய NPP உறுப்பினர் வழங்கிய  விளக்கம்!

பதவி விலகிய NPP உறுப்பினர் வழங்கிய விளக்கம்!

சிங்கம் சக மகர வாகன உற்சவம்!

சிங்கம் சக மகர வாகன உற்சவம்!

மன்னாரில் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் போராட்டம்!

மன்னாரில் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் போராட்டம்!

நாக வாகன உற்சவம்!

நாக வாகன உற்சவம்!

செல்வச்சந்நிதி முருகன் ஆலயத் தேர் திருவிழா

செல்வச்சந்நிதி முருகன் ஆலயத் தேர் திருவிழா

புனித மீலாதுன் நபி தினம்!

புனித மீலாதுன் நபி தினம்!

Mobitel 1278