Sep 6, 2026 - 01:33 PM

இவ்வாண்டில் இதுவரையான காலப்பகுதியில் டெங்கு நோயினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 73 ஆக உயர்ந்துள்ளது.
அத்துடன், நாடு முழுவதிலும் இதுவரை மொத்தம் 96,228 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக டெங்கு ஒழிப்புப் பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.
செப்டெம்பர் மாதத்தின் முதல் 04 நாட்களில் மட்டும் 737 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.
குறிப்பிட்ட தரவுகளின்படி, ஜூலை மாதத்திலேயே அதிகளவிலான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதுடன், அவ்வெண்ணிக்கை 29,964 ஆகும்.
இதற்கு மேலதிகமாக, ஜூன் மாதத்தில் 21,533 நோயாளர்களும், ஓகஸ்ட் மாதத்தில் 10,155 நோயாளர்களும், மே மாதத்தில் 8,590 நோயாளர்களும், ஜனவரி மாதத்தில் 7,866 நோயாளர்களும் பதிவாகியுள்ளனர்.
மாகாண மட்டத்தில் அவதானிக்கும் போது, மேல் மாகாணமே அதிகளவிலான பாதிப்பைச் சந்தித்துள்ளதுடன், மொத்த நோயாளர்களில் 52.84% அதாவது 50,851 நோயாளர்கள் அங்கிருந்தே பதிவாகியுள்ளனர்.
அதேபோல், தென் மாகாணத்தில் 13,950 நோயாளர்களும், மத்திய மாகாணத்தில் 8,818 நோயாளர்களும், சபரகமுவ மாகாணத்தில் 7,925 நோயாளர்களும் பதிவாகியுள்ளனர்.



























