Sep 6, 2026 - 11:20 AM

தலைமன்னார் கிராமத்தை அண்மித்த கடல் பகுதியில், இலங்கை கடற்பரப்பிற்குள் சுமார் 9 கிலோமீட்டர் தொலைவில் இந்திய விசைப்படகுகள் அத்துமீறி மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக அப்பகுதி உள்ளூர் மீனவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இச்சம்பவம் நேற்று சனிக்கிழமை (5) இடம்பெற்றுள்ளது.
இந்திய விசைப்படகுகளின் இந்த அத்துமீறல் காரணமாக, இலங்கை மீனவர்களின் சுமார் 6 இலட்சம் ரூபாய் பெறுமதியான மீன்பிடி வலைகள் சேதப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அல்லது திருடப்பட்டுள்ளதாகவும் பாதிக்கப்பட்ட மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும், இவ்விவகாரம் தொடர்பாக தலைமன்னார் கடற்படையினர் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் மீனவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
எனவே, இந்திய விசைப்படகுகளின் அத்துமீறல்களைத் தடுத்து நிறுத்தவும், இலங்கை மீனவர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கவும் அதிகாரிகள் உடனடியாகத் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என உள்ளூர் மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



























