Sep 5, 2026 - 07:17 PM

யாழ்ப்பாணம், பலாலி அந்தோனிபுரம் பகுதியில் கிணறு ஒன்றைத் துப்பரவு செய்யும் போது பெருமளவான வெடிபொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
இது குறித்துப் பலாலி பொலிஸாருக்குத் தகவல் வழங்கப்பட்டதை அடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் ஆரம்ப விசாரணைகளை மேற்கொண்டனர்.
தொடர்ந்து, கிணற்றுக்குள் காணப்படும் வெடிபொருட்களைப் பாதுகாப்பாக மீட்பதற்காக மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தின் அனுமதியைப் பெறும் நடவடிக்கைகளில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.



























