Sep 6, 2026 - 06:52 AM

தற்போதைய ஆட்சியின் கீழ் நாட்டின் தொழிலாளர் சட்ட அமைப்பை புதுப்பிக்கும் பணிகள் விரைவாக நடைபெற்று வருவதாக தொழிலாளர் அமைச்சர் கலாநிதி அனில் ஜயந்த தெரிவித்துள்ளார்.
தெற்காசியாவில் தொழிலாளர் சட்ட மறுசீரமைப்பு தொடர்பான பிராந்திய தொழிற்சங்க பரிமாற்ற இருநாள் பயிலரங்கில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
இப்பயிலரங்கு அண்மையில் தொழிலாளர் அமைச்சர் கலாநிதி அனில் ஜயந்த தலைமையில் ஆரம்பமானது.
இதில் இந்தியா, பங்களாதேஷ், நேபாளம் மற்றும் இலங்கை ஆகிய நாடுகளைப் பிரதிநிதித்துவப்படுத்தி ஏராளமான தொழிற்சங்க தலைவர்கள் கலந்துகொண்டனர்.
இதன்போது, அந்தந்த நாடுகளின் தொழிலாளர் சட்டங்களின் தற்போதைய நிலைமை மற்றும் மறுசீரமைப்பு குறித்து விரிவாகக் கலந்தாலோசிக்கப்பட்டது.



























