Sep 6, 2026 - 06:36 PM

மாதம்பே பகுதியில் உள்ள தென்னை மரம் சார்ந்த உற்பத்தி நிறுவனமொன்றில் தீவிபத்து ஏற்பட்டுள்ளது.
மாதம்பே பகுதியில் இயங்கி வரும் குறித்த உற்பத்தி நிறுவனத்தில் இன்று (06) மாலை இந்த திடீர் தீவிபத்து ஏற்பட்டுள்ளது.
தீயைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருவதற்காக சிலாபம் நகர சபையின் தீயணைப்புப் பிரிவினரும் பிரதேசமக்களும் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.



























