Header Logo
செய்திகள்
போலி Gov Pay இணையதளம் மூலம் நிதி மோசடி: பொலிஸார் எச்சரிக்கை!

Sep 6, 2026 - 07:30 AM

போலி Gov Pay இணையதளம் மூலம் நிதி மோசடி: பொலிஸார் எச்சரிக்கை!
Mobitel Inner 1278
EDEX Inner

போக்குவரத்து விதிமீறல்களுக்கான அபராதக் கட்டணங்களை இணைய வழியில் செலுத்துவதற்காக அறிமுகப்படுத்தப்பட்ட 'Gov Pay' அமைப்பைப் போன்ற போலி இணையதளத்தை உருவாக்கி, பொதுமக்களின் பணம் மற்றும் முக்கியமான தகவல்களைத் திருடும் மோசடியொன்று இடம்பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

'Gov Pay' மூலம் பணத்தைச் செலுத்துவதற்கு வேறு எந்த இணையதளமும் கிடையாது என்பதால், இத்தகைய நிதி மோசடிகளில் சிக்கி ஏமாற வேண்டாம் என்று பொலிஸார் அறிவுறுத்துகின்றனர். 

பொதுமக்களின் சேவையை இலகுபடுத்தும் நோக்கிலும், நிதி மோசடிகளைக் குறைக்கும் நோக்கிலும் போக்குவரத்து விதிமீறல்களுக்கான அபராதங்களை 'Gov Pay' முறைமையின் மூலம் செலுத்தும் நடைமுறை இந்த ஆண்டின் தொடக்கத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. 

இருப்பினும், 'Gov Pay' அமைப்பைப் போன்ற போலி இணையதளத்தை உருவாக்கி, பொதுமக்களின் பணம் மற்றும் ரகசியத் தரவுகளை தந்திரமாகத் திருடும் மோசடி இடம்பெற்று வருவதாக பொலிஸார் சுட்டிக்காட்டுகின்றனர். 

இந்த போலி இணையதளத்தின் இணைப்புகள் (Links), குறுஞ்செய்திகள் (SMS) மற்றும் வாட்ஸ்அப் (WhatsApp) செய்திகள் மூலமாக கையடக்க தொலைபேசிகளுக்கு அனுப்பப்பட்டு, பொதுமக்களின் பணம் இவ்வாறு திருடும் மோசடி இடம்பெறுவதாக குறிப்பிடப்படுகிறது. 

'Gov Pay' மூலம் பணத்தைச் செலுத்துவதற்கு வேறு எந்த இணையதளமும் இல்லாததால், இவ்வாறான போலி நிதி மோசடிகளில் சிக்க வேண்டாம் என போக்குவரத்துப் பிரிவுக்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ்மா அதிபர் டபிள்யூ. பி. ஜே. சேனாதீர, பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

Disclaimer: All the comments will be moderated by the AD editorial. Abstain from posting comments that are obscene, defamatory or slanderous. Please avoid outside hyperlinks inside the comment and avoid typing all capitalized comments. Help us delete comments that do not follow these guidelines by flagging them (mouse over a comment and click the flag icon on the right side). Do use these forums to voice your opinions and create healthy discourse.

Comments

0
Comments are disabled

Note: Due to legal constraints, the Ada Derana Editorial team has taken a decision to disable comments on all articles concerning ongoing court procedures.


MOST READ

காணொளி
கச்சத்தீவு என்பது இலங்கைக்குச் சொந்தமானது!

கச்சத்தீவு என்பது இலங்கைக்குச் சொந்தமானது!

கச்சத்தீவு எங்களுடையது!

கச்சத்தீவு எங்களுடையது!

2026 தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை

2026 தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை

விரிவுரையாளர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு கோரி போராட்டம்!

விரிவுரையாளர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு கோரி போராட்டம்!

பதவி விலகிய NPP உறுப்பினர் வழங்கிய  விளக்கம்!

பதவி விலகிய NPP உறுப்பினர் வழங்கிய விளக்கம்!

சிங்கம் சக மகர வாகன உற்சவம்!

சிங்கம் சக மகர வாகன உற்சவம்!

மன்னாரில் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் போராட்டம்!

மன்னாரில் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் போராட்டம்!

நாக வாகன உற்சவம்!

நாக வாகன உற்சவம்!

செல்வச்சந்நிதி முருகன் ஆலயத் தேர் திருவிழா

செல்வச்சந்நிதி முருகன் ஆலயத் தேர் திருவிழா

புனித மீலாதுன் நபி தினம்!

புனித மீலாதுன் நபி தினம்!

Mobitel 1278