Sep 8, 2026 - 07:36 AM

மேற்குக்கரையில் உள்ள இஸ்ரேலிய குடியிருப்புகளுக்கு வர்த்தகத் தடைகளை விதிக்க பிரித்தானியா தீர்மானித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்தத் தீர்மானம் குறித்த அறிவிப்பை பிரதமர் எண்டி பர்னம் இன்று (08) வெளியிடவுள்ளதாக 'நியூயோர்க் டைம்ஸ்' செய்தி வெளியிட்டுள்ளது.
கடந்த ஜூலை மாதம் அதிகாரத்திற்கு வந்த பின்னர், பிரதமர் தலையிடும் மிகப்பெரிய வெளிநாட்டுக் கொள்கை தீர்மானமாக இது அமையும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தத் தீர்மானத்திற்கு அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகளிடமிருந்து பலத்த எதிர்ப்புகள் கிளம்பக்கூடும் என அரசியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.



























