Header Logo
Vallibel FD
விளையாட்டு
தொடரின் பாதியில் 7 வீரர்கள் அதிரடி நீக்கம்!

Sep 9, 2026 - 01:52 PM

தொடரின் பாதியில் 7 வீரர்கள் அதிரடி நீக்கம்!
Mobitel Inner 1278

இங்கிலாந்து - பாகிஸ்தான் இடையில் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. முதல் இரண்டு போட்டிகளில் பாகிஸ்தான் படுதோல்வி அடைந்தது. இதனால் பாகிஸ்தான் அணியின் முகமது ரிஸ்வான், இமாம்-உல்-ஹக் உள்ளிட்ட ஏழு வீரர்கள் அதிரடியாக நீக்கப்பட்டனர். 

அத்துடன் தலைமை பயிற்சியாளர் சர்பராஸ் அகமது மற்றும் பந்து வீச்சு பயிற்சியாளர் உமர் குல் ஆகியோரை உடனடியாக நாடு திரும்ப பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் சம்மன் அனுப்பியுள்ளது. 

இந்நிலையில் தொடர் நடந்து கொண்டிருக்கும் போதே, ஏழு வீரர்கள் நீக்கப்பட்டது குறித்து பாகிஸ்தான் அணி தலைவர் பாபர் அசாமிடம் கேள்வி எழுப்பப்பட்டது. 

என்னிடம் இது குறித்து கலந்தாலோசிக்கப்படவில்லை. இது எனக்கும் ஒரு புதிய தகவலாகவே இருந்தது. இவையெல்லாம் பற்றி எனக்கு பின்னர்தான் தெரியவந்தது. முடிவுகளை எடுத்தது பிசிபி (PCB) தான், எனவே அவர்களால் இதை உங்களுக்கு இன்னும் சிறப்பாக விளக்க முடியும். 

இவ்வாறு பாபர் அசாம் கூறினார். 

பாபர் அசாமின் கூற்று உண்மையாக இருந்தால், பிசிபி (PCB) ஒருதலைப்பட்சமான முடிவை எடுத்திருக்கிறது என்று அர்த்தம். மே மாதத்தில் ஷான் மசூத் நீக்கப்பட்ட பிறகு, டெஸ்ட் கேப்டனாக பாபர் அசாம் மேற்கொண்ட இரண்டாவது பதவிக்காலத்திலும் பாகிஸ்தான் அணியின் டெஸ்ட் கிரிக்கெட் செயல்பாடுகளில் பெரிய முன்னேற்றம் ஏற்படவில்லை. 

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான தொடரை பாபர் 1 - 1 என சமன் செய்தார். ஆனால், இங்கிலாந்துக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட தொடரில், அந்த அணி 2 - 0 என்ற கணக்கில் யாராலும் முறியடிக்க முடியாத முன்னிலையைப் பெற்றுள்ளது. வெளிநாடுகளில் விளையாடிய கடந்த 11 டெஸ்ட் போட்டிகளில் பாகிஸ்தான் 10 இல் தோல்வியடைந்துள்ளது. 

லீட்ஸில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் விரல் காயத்தால் பாபர் அசாம் பங்கேற்க முடியவில்லை. அவருக்குப் பதிலாக ஆகா அணியை வழி நடத்தினார். ஆனால் இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான அணியிலிருந்து அவர் நீக்கப்பட்டார். 

இந்தத் தொடரின் நான்கு இன்னிங்ஸ்களிலும் பாகிஸ்தான் அணியால் 200 ஓட்டங்கள் என்ற இலக்கை கூட எட்ட முடியவில்லை. 

லீட்ஸில் ஒரு இன்னிங்ஸ் மற்றும் 103 ஓட்டங்கள் வித்தியாசத்திலும், லார்ட்ஸில் 194 ஓட்டங்கள் வித்தியாசத்திலும் பாகிஸ்தான் அணி தோல்வியடைந்தது.

Disclaimer: All the comments will be moderated by the AD editorial. Abstain from posting comments that are obscene, defamatory or slanderous. Please avoid outside hyperlinks inside the comment and avoid typing all capitalized comments. Help us delete comments that do not follow these guidelines by flagging them (mouse over a comment and click the flag icon on the right side). Do use these forums to voice your opinions and create healthy discourse.

Comments

0
Comments are disabled

Note: Due to legal constraints, the Ada Derana Editorial team has taken a decision to disable comments on all articles concerning ongoing court procedures.


MOST READ

காணொளி
நல்லூரான் அருள்மழையில் நனைந்த மகோற்சவத் தேர்த்திருவிழா!

நல்லூரான் அருள்மழையில் நனைந்த மகோற்சவத் தேர்த்திருவிழா!

இரண்டு வருடங்களில் 50 வீடுகள் தான் வழங்கப்பட்டுள்ளது!

இரண்டு வருடங்களில் 50 வீடுகள் தான் வழங்கப்பட்டுள்ளது!

அராலியில் பெருக்கெடுத்த கிணறுகள்!

அராலியில் பெருக்கெடுத்த கிணறுகள்!

இலங்கையில் டிக்டொக் செயலியைத் தடை செய்ய வேண்டும்!

இலங்கையில் டிக்டொக் செயலியைத் தடை செய்ய வேண்டும்!

எனது மரணம் வரை ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியுடன் தான் பயணிப்பேன்!

எனது மரணம் வரை ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியுடன் தான் பயணிப்பேன்!

பயங்கரவாதத் தடைச்சட்டத்தைப் பற்றி ஏன் இதுவரை பேசவில்லை?

பயங்கரவாதத் தடைச்சட்டத்தைப் பற்றி ஏன் இதுவரை பேசவில்லை?

கடும் நடவடிக்கை எடுக்குமாறு சத்தியலிங்கம் வலியுறுத்தல்!

கடும் நடவடிக்கை எடுக்குமாறு சத்தியலிங்கம் வலியுறுத்தல்!

ஊழல்வாதிகள் யாராக இருந்தாலும் தப்ப முடியாது!

ஊழல்வாதிகள் யாராக இருந்தாலும் தப்ப முடியாது!

கம்பளை பிரதான வீதியின் நிலச்சரிவு!

கம்பளை பிரதான வீதியின் நிலச்சரிவு!

தண்டாயுதபாணி உற்சவம்!

தண்டாயுதபாணி உற்சவம்!

Mobitel 1278