Header Logo
Vallibel FD
Selan Bank
வணிகம்
புதிய குருணாகல் மையத்தின் மூலம் Bosch Diesel சேவை வலையமைப்பை விரிவுபடுத்தும் DIMO

Sep 10, 2026 - 12:10 PM

புதிய குருணாகல் மையத்தின் மூலம் Bosch Diesel சேவை வலையமைப்பை விரிவுபடுத்தும் DIMO
Mobitel Inner 1278

DIMO நிறுவனம் தனது பிரத்தியேக விற்பனைக்குப் பிந்தைய சேவை வலையமைப்பை விரிவுபடுத்தும் வகையில் குருணாகலில் புதிய DIMO Diesel Lab கிளையொன்றைத் திறந்து வைத்துள்ளது. இதன் மூலம், Bosch Diesel சேவை வலையமைப்பின் எரிபொருள் செலுத்தல் பம்பி (fuel injection pump) பழுதுபார்ப்பு மற்றும் பிரச்சினை கண்டறிதல் சேவைகளை, வடமேல் மாகாணம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பிராந்தியங்களைச் சேர்ந்த வாடிக்கையாளர்களுக்கு மிக அருகில் கொண்டு சேர்க்கிறது. 

Bosch சோதனை உபகரணங்கள், அசல் உதிரிப்பாகங்கள் மற்றும் சர்வதேச ரீதியில் அங்கீகரிக்கப்பட்ட பழுதுபார்ப்பு தொடர்பான தரங்களைப் பயன்படுத்தி, இந்த புதிய மையமானது, Bosch Diesel சேவைப் பணிமனை வலையமைப்பின் ஒரு அங்கமாக இயங்குகிறது. இது டீசல் எரிபொருள் செலுத்தல் பம்பி பழுதுபார்ப்புகள் மற்றும் டீசல் இன்ஜெக்டர் பழுதுபார்ப்பு சேவைகளை வழங்குகிறது. டீசல் மூலம் இயங்கும் வாகனங்கள் மற்றும் உபகரணங்களுக்கு துல்லியமான பரிசோதனைகள் மற்றும் நம்பகமான பழுதுபார்ப்புத் தீர்வுகளை வழங்கக்கூடிய பயிற்சி பெற்ற தொழில்நுட்ப வல்லுநர்களை இந்த பணிமனை கொண்டுள்ளது. 

இந்த விரிவாக்கம் குறித்து DIMO நிறுவனத்தின் Automotive Engineering Solutions பிரதம செயற்பாட்டு அதிகாரி மஹேஷ் கருணாரத்ன கருத்துத் தெரிவிக்கையில், "நாம், எமது வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் மதிப்பின் மிக முக்கியமான அம்சம் விற்பனைக்குப் பிந்தைய சேவையாகும். குருணாகலில் DIMO Diesel Lab ஆரம்பிக்கப்பட்டிருப்பது எமது நாடளாவிய சேவை வலையமைப்பை விரிவுபடுத்துவதுடன், இந்த முக்கிய பொருளாதார பிராந்தியத்தில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு Bosch இன் உலகளாவிய தரநிலைகளின் ஆதரவுடன் கூடிய பிரத்தியேக டீசல் எரிபொருள் பம்பி தொடர்பான அறிவிற்கான விரைவான அணுகலை வழங்குகிறது. உலகத் தரம் வாய்ந்த டீசல் எரிபொருள் பம்பி பழுதுபார்ப்புத் தீர்வுகளை மேலும் இலகுவாக அணுகக்கூடியதாக மாற்றுவதன் மூலம், வாடிக்கையாளர்கள் தமது செயற்பாடுகளை திறன்பட முன்னெடுக்க உதவுவதுடன், நம்பகமான போக்குவரத்து, விவசாயம் மற்றும் தொழில்துறை இயந்திரங்களை நம்பியிருக்கும் சமூகங்கள் மற்றும் வணிக நிறுவனங்களின் கனவுகள் மற்றும் இலட்சியங்களை நாம் வலுவூட்டுகிறோம்." என்றார். 

இது குறித்து, Bosch Sri Lanka நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளரும் நேபாளம், பூட்டான் மற்றும் மாலைதீவுக்கான நாட்டின் முகாமையாளருமான சந்தீப் காமத் தெரிவிக்கையில், "DIMO நிறுவனத்துடனான எமது கூட்டணி காரணமாக Bosch இன் உலகளாவிய டீசல் சேவைத் தரநிலைகள் இலங்கை முழுவதும் மிகவும் பரவலாகக் கிடைக்கின்றன. டீசல் எரிபொருள் பம்பி கட்டமைப்புகளின் செயல்திறன், நம்பகத்தன்மை மற்றும் ஆயுட்காலத்தை அதிகரிக்கும் வகையிலான உயர் தரமான பழுதுபார்ப்பு சேவைகளை வழங்குவதற்காக, புதிய குருணாகல் பணிமனையானது அதிநவீன பரிசோதனை தொழில்நுட்பம், அசல் Bosch உதிரிப்பாகங்கள் மற்றும் அனுபவமிக்க தொழில்நுட்ப நிபுணத்துவம் ஆகியவற்றை ஒரே இடத்தில் ஒன்றிணைக்கிறது." என்றார். 

DIMO நிறுவனத்தின் குழும முகாமைத்துவ பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான கஹநாத் பண்டிதகே மற்றும் Bosch நிறுவனத்தின் பிரதிநிதிகள், DIMO நிறுவனத்தின் முகாமைத்துவ குழுவினர் மற்றும் ஊழியர்களின் பங்கேற்புடன் இந்த புதிய மையம், உத்தியோகபூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டது. குருணாகல் கிளையானது, இலங்கையின் முக்கிய வணிக மற்றும் போக்குவரத்து மையங்களில் ஒன்றிற்குள் அமைந்துள்ளதைக் கருத்தில் கொண்டு, வர்த்தக வாகனங்கள், விவசாய இயந்திரங்கள், கட்டுமான உபகரணங்கள் மற்றும் தொழில்துறை வாகனங்கள் அதிகளவில் செறிந்துள்ள பகுதிக்குச் சேவையாற்ற உகந்ததாக அமைந்துள்ளது. இந்த புதிய மையமானது பிராந்தியத்தில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு மிகவும் நெருக்கமாக சென்று, பிரத்தியேகமான டீசல் பழுதுபார்ப்புச் சேவைகளை வழங்குவதன் மூலம், சேவைக்காக அதிக தூரம் செல்வதை குறைத்து, உபகரணங்கள் செயற்பாடற்ற வகையில் இருக்கும் நேரத்தை குறைப்பதுடன், அவற்றின் செயற்பாட்டுத் திறனையும் அதிகரிக்கிறது. 

குருணாகல் கிளை திறந்து வைக்கப்பட்டமையானது, தமது நாடளாவிய விற்பனைக்குப் பிந்தைய சேவை வலையமைப்பை விரிவுபடுத்துவதற்கான DIMO நிறுவனத்தின் தொடர்ச்சியான முயற்சிகளின் மற்றுமொரு படியாகும். இது வாடிக்கையாளர்கள் டீசலில் இயங்கும் தமது வாகனங்கள் மற்றும் உபகரணங்களின் சரியான செயல்திறனைப் பராமரிக்க உதவுவதுடன், Bosch Diesel சேவை வலையமைப்பின் கீழ் எரிபொருள் செலுத்தல் பம்பி பழுதுபார்ப்புச் சேவைகளுக்கான அணுகலை இலகுபடுத்துகிறது. வாகனத் துறையில் 85 வருடங்களுக்கும் மேலான சிறந்த அனுபவத்தின் ஆதரவுடன், இலங்கை முழுவதும் உள்ள வாடிக்கையாளர்களுக்கு உலகத் தரம் வாய்ந்த விற்பனைக்குப் பிந்தைய தீர்வுகளை நெருக்கமாக வழங்குவதற்கும், தாம் சேவையாற்றும் சமூகங்களின் கனவுகள் மற்றும் இலட்சியங்களுக்கு வலுவூட்டுவதற்குமான DIMO நிறுவனத்தின் தொடர்ச்சியான அர்ப்பணிப்பை இந்த விரிவாக்கமானது பிரதிபலிக்கிறது.

Disclaimer: All the comments will be moderated by the AD editorial. Abstain from posting comments that are obscene, defamatory or slanderous. Please avoid outside hyperlinks inside the comment and avoid typing all capitalized comments. Help us delete comments that do not follow these guidelines by flagging them (mouse over a comment and click the flag icon on the right side). Do use these forums to voice your opinions and create healthy discourse.

Comments

0
Comments are disabled

Note: Due to legal constraints, the Ada Derana Editorial team has taken a decision to disable comments on all articles concerning ongoing court procedures.


MOST READ

காணொளி
தீர்த்த திருவிழா!

தீர்த்த திருவிழா!

சிங்காரவத்தை தோட்டத்தில் சிறுத்தை நடமாட்டம்!

சிங்காரவத்தை தோட்டத்தில் சிறுத்தை நடமாட்டம்!

பெருந்தோட்ட நிறுவனத்திடம் நீங்கள் விலை போய்விட்டீர்கள்!

பெருந்தோட்ட நிறுவனத்திடம் நீங்கள் விலை போய்விட்டீர்கள்!

அழிக்கப்பட்ட இனத்தின் அலறல் குரல் இன்று கர்மாவாக உருவெடுத்துள்ளது!

அழிக்கப்பட்ட இனத்தின் அலறல் குரல் இன்று கர்மாவாக உருவெடுத்துள்ளது!

நல்லூரான் அருள்மழையில் நனைந்த மகோற்சவத் தேர்த்திருவிழா!

நல்லூரான் அருள்மழையில் நனைந்த மகோற்சவத் தேர்த்திருவிழா!

இரண்டு வருடங்களில் 50 வீடுகள் தான் வழங்கப்பட்டுள்ளது!

இரண்டு வருடங்களில் 50 வீடுகள் தான் வழங்கப்பட்டுள்ளது!

அராலியில் பெருக்கெடுத்த கிணறுகள்!

அராலியில் பெருக்கெடுத்த கிணறுகள்!

இலங்கையில் டிக்டொக் செயலியைத் தடை செய்ய வேண்டும்!

இலங்கையில் டிக்டொக் செயலியைத் தடை செய்ய வேண்டும்!

எனது மரணம் வரை ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியுடன் தான் பயணிப்பேன்!

எனது மரணம் வரை ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியுடன் தான் பயணிப்பேன்!

பயங்கரவாதத் தடைச்சட்டத்தைப் பற்றி ஏன் இதுவரை பேசவில்லை?

பயங்கரவாதத் தடைச்சட்டத்தைப் பற்றி ஏன் இதுவரை பேசவில்லை?

Mobitel 1278