Sep 10, 2026 - 12:32 PM

நீண்ட வாரயிறுதி விடுமுறைகள் என்பது நண்பர்களுடன் இணைந்து வழக்கமான தேனீர் சந்திப்புகளுக்கு அப்பாற்பட்டு, சுவாரஸ்யமான மற்றும் புதுமையான அனுபவங்களைப் பகிர்வதற்குக் கிடைக்கும் மிகச்சிறந்த வாய்ப்பாகும். புதிய இடங்களை ஆராய்வது, சமூக ஊடகங்களில் பிரபலமாகும் Trending சமையல் குறிப்புகளை முயற்சிப்பது, கைவினைப் பொருட்களை உருவாக்குவது அல்லது நண்பர்களுடன் இணைந்து வீட்டை விட்டு வெளியேறி பொழுதைக் கழிப்பது என அனைத்து வகையான திட்டங்களுக்கும் உத்வேகம் அளிக்கும் தளமாக TikTok உருவெடுத்துள்ளது.
உலகளாவிய ரீதியில் ட்ரெண்டாகும் யோசனைகள் முதல், இலங்கையின் உள்ளூர் படைப்பாளர்களால் உருவாக்கப்படும் அழகிய காணொளிகள் வரை அனைத்தையும் உள்ளடக்கிய TikTok, நண்பர்களுடன் எங்கு செல்வது, என்ன செய்வது என்பதற்கான முக்கிய வழிகாட்டியாக மாறியுள்ளது. நாம் தினமும் பார்க்கும் காணொளிகளில் இங்குச் செல்ல வேண்டும் அல்லது இதைச் செய்ய வேண்டும் என்று சேமித்து வைக்கும் யோசனைகள் ஏராளம். வரவிருக்கும் ஆகஸ்ட் மாத நீண்ட வார இறுதி விடுமுறையில், அத்தகைய யோசனைகளை நிஜ வாழ்க்கைத் திட்டங்களாக மாற்றுவதற்குச் சில எளிய மற்றும் சுவாரஸ்யமான வழிகளை TikTok வழங்குகிறது.
TikTok இல் தோன்றும் சில ட்ரெண்ட்கள் சில வாரங்களில் மறைந்துவிடக்கூடும். ஆனால், அவற்றின் மூலம் நண்பர்களுடன் உருவாக்கப்படும் நினைவுகள் காலம் முழுதும் நிலைத்திருக்கும். வெறுமனே காணொளிகளைப் பார்த்து ரசிப்பதோடு நிறுத்தாமல், அவற்றில் நீங்களும் நேரடியாகப் பங்கேற்கலாம். பல வருடங்களுக்கு முன்பு நண்பர்களுடன் எடுத்த பழைய புகைப்படங்களை மீண்டும் அதே கோணத்தில் மறுஉருவாக்கம் செய்து படம் பிடிப்பது, Get Ready with Me (GRWM) காணொளிகள் எடுப்பது அல்லது அன்றாடச் சம்பவங்களைப் பதிவு செய்யும் வ்லாக் (Vlog) உருவாக்குவது எனப் பல வழிகளில் உங்கள் நட்பின் தருணங்களைப் பதிவு செய்யலாம். #FriendTok, #BestFriends மற்றும் #BestieGRWM போன்ற Hashtags குறிச்சொற்களைப் பயன்படுத்தி உங்களுக்கான புதிய யோசனைகளைப் பெறலாம்.
FoodTok சமூகத்தின் பரிந்துரைகள் மூலம் உங்கள் நண்பர்களுடன் ஒரு சிறந்த உணவுப் பயணத்தைத் திட்டமிடலாம். எப்போதும் செல்லும் வழக்கமான உணவகங்களைத் தவிர்த்து, உள்ளூர் படைப்பாளர்களால் பரிந்துரைக்கப்படும் புதிய உணவகங்கள், கஃபேக்கள் மற்றும் இனிப்பகங்களைத் தேடிச் செல்லலாம். இலங்கையில் கொழும்பு, காலி, கண்டி மற்றும் எல்லே போன்ற பகுதிகளில் உள்ள மறைக்கப்பட்ட அழகிய உணவகங்களையும், சிறப்பு உணவுகளையும் கண்டறிய #SriLankaCafe, #ColomboFood, #GalleFood மற்றும் #ExploreSriLanka போன்ற குறிச்சொற்கள் பெரிதும் உதவுகின்றன.
வழக்கமான பளபளப்பான சுற்றுலா வழிகாட்டிகளுக்குப் பதிலாக, உண்மையான மனிதர்களின் நேரடி அனுபவங்களை TikTok வெளிப்படுத்துகிறது. அழகான மலைப் பகுதிகள், இயற்கை நீர்வீழ்ச்சிகள், அமைதியான கடற்கரைகள் மற்றும் அழகிய புத்தகக் கடைகள் வரை பல இடங்களை TikTok தளத்தின் மூலம் கண்டறியலாம். #TravelTok மற்றும் #HiddenGemSriLanka போன்ற குறிச்சொற்களைப் பயன்படுத்தி, இதுவரை நீங்கள் சென்றிராத ஒரு இடத்தைத் தேர்ந்தெடுத்து, நண்பர்களுடன் ஒரு நாள் முழுமையான சுற்றுலாவை மேற்கொள்ளலாம்.
நாம் இதை நிச்சயமாகச் செய்ய வேண்டும் என்று TikTok இல் Save செய்த சமையல் காணொளிகளை நிஜத்தில் உங்கள் வீட்டுச் சமையலறையில் முயற்சித்துப் பார்க்கும் நேரம் இது. புதிய வகை பாஸ்தா, கொரியன் கோர்ன் டோக்ஸ்; அல்லது சிறப்பு இனிப்புகள் என எதுவாக இருந்தாலும், நண்பர்களுடன் இணைந்து சமைப்பது ஒரு தனித்துவமான மகிழ்ச்சியைத் தரும். #FoodTok, #SriLankaRecipes மற்றும் #CookWithMe போன்ற குறிச்சொற்களைப் பயன்படுத்தி, புதிய உணவுகளைச் சமைத்து மகிழலாம். இதில் தவறுகள் நிகழ்ந்து சமையல் சொதப்பினாலும், அதுவே வாழ்நாளின் சிறந்த சிரிப்புத் தருணங்களாக அமையும்.
கடைகளில் விற்கும் சாதாரணப் பொருட்களுக்குப் பதிலாக, TikTok இல் உள்ள படைப்புத் திறன்களைப் பயன்படுத்தி நண்பர்களுக்குத் தனித்துவமான பரிசுகளை வழங்கலாம். #DIYGift> #CraftTok மற்றும் #ScrapbookTok போன்ற குறிச்சொற்கள் மூலம் உங்கள் நட்பின் நினைவுகளைப் புகைப்படப் புத்தகமாக (Scrapbook) மாற்றுவது அல்லது கையால் வரையப்பட்ட பைகளை உருவாக்குவது போன்ற பல யோசனைகளைப் பெற முடியும். இது கடைகளில் வாங்கும் பரிசுகளை விட அதிக அன்பையும் மதிப்பையும் வெளிப்படுத்தும்.
TikTok மூலம் புதிய இடங்களையும், சேவைகளையும் கண்டறிவது மட்டுமல்லாமல், உள்ளூர் படைப்பாளர்கள், சிறு வணிகர்கள் மற்றும் உணவக உரிமையாளர்களுக்கு ஆதரவளிக்கவும் முடிகிறது. ஒரு உள்ளூர் படைப்பாளர் பரிந்துரைக்கும் சிறு உணவகத்திற்குச் செல்வது அல்லது உள்ளூர் கலைஞர்களிடமிருந்து கைவினைப் பொருட்களை வாங்குவது, அவர்களின் வளர்ச்சிக்கு மிகப்பெரிய ஊக்கமாக அமையும்.
இனி எங்குச் செல்வது என்ற குழப்பம் ஏற்படும் போது ExploreSriLanka, #CafeTok, #TravelTok அல்லது உங்கள் நகரத்தின் பெயரைக் கொண்டு TikToK இல் தேடிப் பாருங்கள். சிறந்த திட்டங்கள் எப்போதுமே பெரிய முன்பதிவுகளிலிருந்தோ அல்லது ஷொப்பிங் பட்டியல்களிலிருந்தோ தொடங்குவதில்லை. அவை ஆர்வம் மற்றும் படைப்பாற்றலிலிருந்தே தொடங்குகின்றன. எனவே, அடுத்த முறை வுமைவுழம இல் ஒரு சுவாரஸ்யமான காணொளியைப் பார்க்கும்போது, அதை வெறுமனே save செய்வதோடு நிறுத்தாமல் உங்கள் நண்பர்களுக்குப் பகிர்ந்து, ஒரு சிறந்த நாளைத் திட்டமிடுங்கள். ஏனெனில் TikToK வழங்கும் மிகப்பெரிய பரிசு மற்றொரு காணொளி அல்ல. அன்பானவர்களுடன் செலவழிக்கும் மறக்கமுடியாத தருணங்களே ஆகும்.





























