Header Logo
Vallibel FD
Selan Bank
செய்திகள்
அஸ்வெசும பயனாளர் எண்ணிக்கை 12 இலட்சமாக வீழ்ச்சி

Sep 11, 2026 - 12:25 PM

அஸ்வெசும பயனாளர் எண்ணிக்கை 12 இலட்சமாக வீழ்ச்சி
Mobitel Inner 1278

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு அரசாங்கத்தினால் நிவாரணமாக வழங்கப்பட்ட அஸ்வெசும பயனாளிகளின் எண்ணிக்கை கடந்த 2025ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் இவ்வருடம் பாதியாகக் குறைந்துள்ளமை தொடர்பில் இன்று (11) பாராளுமன்றத்தில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. 

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எழுப்பிய கேள்விக்கு நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் அளித்த பதிலுக்கமைய இது இடம்பெற்றுள்ளது. 

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு அரசாங்கம் வழங்கும் அஸ்வெசும நிவாரணத்தை நீக்குமாறு உலக வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியம் வழங்கிய ஆலோசனைகளுக்கு அமைய இது மேற்கொள்ளப்பட்டதா என எதிர்க்கட்சித் தலைவர் இதன்போது அரசாங்கத்திடம் கேள்வி எழுப்பினார். 

இதற்குப் பதிலளித்த நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் கலாநிதி அனில் ஜயந்த பெர்னாண்டோ, கடந்த 2023 ஆம் ஆண்டில் அஸ்வெசும வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டதாகவும், அந்த வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படும் போதே அதில் மீள் ஆய்வொன்று மேற்கொள்ளப்பட வேண்டும் எனச் சட்டத்தின் ஊடாகவே அறிவிக்கப்பட்டிருந்ததாகவும் தெரிவித்தார். 

இதற்கமைய, முதலாம் மற்றும் இரண்டாம் கட்டங்களில் கிடைக்கப்பெற்ற விண்ணப்பங்கள் தற்போது உறுதிப்படுத்தப்பட்டு வருவதாகத் தெரிவித்த அமைச்சர், அதனை இம்மாதத்திற்குள் நிறைவு செய்ய எதிர்பார்ப்பதாகவும் குறிப்பிட்டார். 

இந்த வேலைத்திட்டம் கடந்த 2023 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட போது 1,773,445 பயனாளிகள் இருந்ததாகவும், எனினும் 2024 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஆகும் போது அது 1,761,116 ஆகப் பதிவாகியிருந்ததாகவும் பிரதி அமைச்சர் தெரிவித்தார். 

மேலும், கடந்த 2025 ஆம் ஆண்டில் பயனாளிகளின் எண்ணிக்கை 2,439,917 ஆகப் பதிவாகியிருந்த போதிலும், இவ்வருடம் ஒகஸ்ட் மாதம் ஆகும் போது பயனாளிகளின் எண்ணிக்கை 1,251,522 ஆகக் குறைந்துள்ளதாகவும், இதற்குப் பல காரணிகள் செல்வாக்குச் செலுத்தியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். 

அதற்கமைய, அதிவறிய, வறிய, பாதிப்படையக்கூடிய மற்றும் இடைக்கால ஆகிய 4 பிரிவுகளின் கீழ் அஸ்வெசும நன்மைகள் வழங்கப்பட்டதாகத் தெரிவித்த அமைச்சர், இடைக்காலப் பிரிவினருக்காகச் செய்யப்பட்ட கொடுப்பனவுகள் கடந்த டிசம்பர் மாதத்திலும், பாதிப்படையக்கூடிய பிரிவினருக்கான கொடுப்பனவுகள் கடந்த ஜூன் மாதத்திலும் நிறைவடைந்ததாகக் குறிப்பிட்டார். 

இதற்கமைய, தற்போது அதிக வறிய மற்றும் வறிய ஆகிய இரண்டு பிரிவுகளுக்கு மாத்திரம் அஸ்வெசும கொடுப்பனவுகளைச் செலுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாகத் தெரிவித்த அமைச்சர், அதற்கு மத்தியில் மீள் ஆய்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் மேலும் குறிப்பிட்டார்.

Disclaimer: All the comments will be moderated by the AD editorial. Abstain from posting comments that are obscene, defamatory or slanderous. Please avoid outside hyperlinks inside the comment and avoid typing all capitalized comments. Help us delete comments that do not follow these guidelines by flagging them (mouse over a comment and click the flag icon on the right side). Do use these forums to voice your opinions and create healthy discourse.

Comments

0
Comments are disabled

Note: Due to legal constraints, the Ada Derana Editorial team has taken a decision to disable comments on all articles concerning ongoing court procedures.


MOST READ

காணொளி
பொய்களைக் கூறி மக்களின் காணிகளை அபகரிக்க முயற்சி செய்கின்றனர்!

பொய்களைக் கூறி மக்களின் காணிகளை அபகரிக்க முயற்சி செய்கின்றனர்!

குறிஞ்சித் தமிழ் வித்தியாலயத்தை மீளத் திறக்கக் கோரி போராட்டம்!

குறிஞ்சித் தமிழ் வித்தியாலயத்தை மீளத் திறக்கக் கோரி போராட்டம்!

சீதா அம்மன் ஆலயத்தில் இந்திய பாதுகாப்பு அமைச்சர்!

சீதா அம்மன் ஆலயத்தில் இந்திய பாதுகாப்பு அமைச்சர்!

கொழும்பில் இருந்துகொண்டு குறைகளைச் சொல்கிறார்கள்!

கொழும்பில் இருந்துகொண்டு குறைகளைச் சொல்கிறார்கள்!

ஹிஸ்புல்லா கோரிக்கை!

ஹிஸ்புல்லா கோரிக்கை!

முஸ்லிம் பெண்கள் கல்வியில் முன்னேற்றம் அடைந்து வருகின்றனர்!

முஸ்லிம் பெண்கள் கல்வியில் முன்னேற்றம் அடைந்து வருகின்றனர்!

செப்சிஸ் அறிகுறிகளை இவ்வாறு இனம் காண முடியும்!

செப்சிஸ் அறிகுறிகளை இவ்வாறு இனம் காண முடியும்!

தீர்த்த திருவிழா!

தீர்த்த திருவிழா!

சிங்காரவத்தை தோட்டத்தில் சிறுத்தை நடமாட்டம்!

சிங்காரவத்தை தோட்டத்தில் சிறுத்தை நடமாட்டம்!

பெருந்தோட்ட நிறுவனத்திடம் நீங்கள் விலை போய்விட்டீர்கள்!

பெருந்தோட்ட நிறுவனத்திடம் நீங்கள் விலை போய்விட்டீர்கள்!

Mobitel 1278