Sep 12, 2026 - 09:35 AM

ஹங்வெல்ல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஜல்தர பகுதியில் களனி கங்கையிலிருந்து அடையாளம் தெரியாத ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
ஹங்வெல்ல பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த தகவலுக்கு அமைய நேற்று (11) மாலை இச்சடலம் மீட்கப்பட்டுள்ளது.
உயிரிழந்தவரின் அடையாளம் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை.
சடலம் தொடர்பான நீதவான் விசாரணை நடாத்தப்படவுள்ளதுடன், ஹங்வெல்ல பொலிஸார் இச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.





























