Header Logo
Vallibel FD
Selan Bank
செய்திகள்
கொட்டாஞ்சேனையில் 18 வயது இளைஞன் குத்திக் கொலை

Sep 15, 2026 - 08:13 AM

கொட்டாஞ்சேனையில் 18 வயது இளைஞன் குத்திக் கொலை
Mobitel Inner 1278

கொட்டாஞ்சேனை நகரில் கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டதில் பலத்த காயமடைந்த இளைஞர் ஒருவர், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார். 

நேற்று (14) இரவு இந்தக்கொலை சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன், கொட்டாஞ்சேனை பொலிஸ் நிலையத்திற்குக் கிடைத்த தகவலுக்கு அமைய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. 

உயிரிழந்தவர் வெல்லம்பிட்டியைச் சேர்ந்த 18 வயதுடைய இளைஞர் என தெரியவந்துள்ளது. 

தனிப்பட்ட தகராறு முற்றியதால் இரண்டு நபர்களால் இக்கொலை செய்யப்பட்டுள்ளமை இதுவரை மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. 

சந்தேகநபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவர்களைக் கைது செய்வதற்காகக் கொட்டாஞ்சேனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 

இதனிடையே, யக்கலமுல்ல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மொரகெட்டிய பகுதியில் நபர் ஒருவர் கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக யக்கலமுல்ல பொலிஸ் நிலையத்திற்குக் கிடைத்த தகவலுக்கு அமைய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. 

இவ்வாறு கொலை செய்யப்பட்டவர் யக்கலமுல்ல பகுதியைச் சேர்ந்த 54 வயதுடையவராவார். 

பழைய பகை காரணமாக ஏற்பட்ட வாய்த்தர்க்கம் முற்றியதில் கூர்மையான ஆயுதத்தால் தாக்கி இக்கொலை செய்யப்பட்டுள்ளமை இதுவரை மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. 

27 வயதுடைய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், யக்கலமுல்ல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Disclaimer: All the comments will be moderated by the AD editorial. Abstain from posting comments that are obscene, defamatory or slanderous. Please avoid outside hyperlinks inside the comment and avoid typing all capitalized comments. Help us delete comments that do not follow these guidelines by flagging them (mouse over a comment and click the flag icon on the right side). Do use these forums to voice your opinions and create healthy discourse.

Comments

0
Comments are disabled

Note: Due to legal constraints, the Ada Derana Editorial team has taken a decision to disable comments on all articles concerning ongoing court procedures.


MOST READ

காணொளி
ஈரோஸ் கட்சித் தலைவர் சாடல்!

ஈரோஸ் கட்சித் தலைவர் சாடல்!

எங்கள் மீதும் தப்பு உள்ளது!

எங்கள் மீதும் தப்பு உள்ளது!

மீனவர்களுக்கு அடித்த அதிர்ஷ்டம்

மீனவர்களுக்கு அடித்த அதிர்ஷ்டம்

22 ஐ நாங்களும் எதிர்க்கின்றோம்!

22 ஐ நாங்களும் எதிர்க்கின்றோம்!

முழு நாட்டிற்கும் முக்கியமானதொன்று!

முழு நாட்டிற்கும் முக்கியமானதொன்று!

பாராளுமன்றில் ஜீவன் - கலைச்செல்வி காரசாரமான விவாதம்!

பாராளுமன்றில் ஜீவன் - கலைச்செல்வி காரசாரமான விவாதம்!

மாணவி தற்கொலைக்கு முயற்சி செய்தது தொடர்பில் விசாரணை மேற்கொள்ள வேண்டும்!

மாணவி தற்கொலைக்கு முயற்சி செய்தது தொடர்பில் விசாரணை மேற்கொள்ள வேண்டும்!

நல்லூர் கொடியிறக்கம்!

நல்லூர் கொடியிறக்கம்!

பொய்களைக் கூறி மக்களின் காணிகளை அபகரிக்க முயற்சி செய்கின்றனர்!

பொய்களைக் கூறி மக்களின் காணிகளை அபகரிக்க முயற்சி செய்கின்றனர்!

குறிஞ்சித் தமிழ் வித்தியாலயத்தை மீளத் திறக்கக் கோரி போராட்டம்!

குறிஞ்சித் தமிழ் வித்தியாலயத்தை மீளத் திறக்கக் கோரி போராட்டம்!

Mobitel 1278