Sep 15, 2026 - 12:26 PM

நிலையான வளர்ச்சி, பொறுப்பான வங்கிச் செயல்பாடு மற்றும் அர்த்தமுள்ள சமூகத் தாக்கம் ஆகியவற்றில் அர்ப்பணிப்புடன் செயல்படும், ஒரு நோக்கத்தை அடிப்படையாகக் கொண்ட நிதி நிறுவனமாகத் தனது நிலையை மீண்டும் உறுதிப்படுத்தும் வகையில், தேசிய வணிகச் சிறப்பு விருதுகளில் வங்கித் துறையின் இரண்டாம் இடத்தைப் பிடித்து SDB வங்கி அங்கீகாரம் பெற்றுள்ளது.
இலங்கை தேசிய வர்த்தக சம்மேளனத்தால் ஏற்பாடு செய்யப்படும் தேசிய வணிகச் சிறப்பு விருதுகள் நிகழ்வானது, வணிகச் செயல்பாடு, நிர்வாகம், நிலைபேற்றியல், புத்தாக்கம் மற்றும் மதிப்பு உருவாக்கம் ஆகியவற்றில் சிறந்து விளங்கும் நிறுவனங்களை அங்கீகரிக்கும் நாட்டின் மிகவும் மதிப்பிற்குரிய தளங்களில் ஒன்றாகும்.
சிறந்த நிதிச் செயல்பாட்டையும் தேசிய மேம்பாட்டிற்கான வலுவான அர்ப்பணிப்பையும் ஒருங்கிணைப்பதில் SDB வங்கி அடைந்துள்ள தொடர்ச்சியான முன்னேற்றத்தை இந்த அங்கீகாரம் பிரதிபலிக்கிறது. தனது செயல்பாடுகள் மூலம், நிதி உள்ளடக்கத்தை மேம்படுத்துதல், பெண்களுக்கு வலுவூட்டுதல், சிறு மற்றும் நடுத்தர அளவிலான தொழில் நிறுவனங்களின் வளர்ச்சி, டிஜிட்டல் அணுகல் மற்றும் இலங்கை முழுவதும் உள்ள சமூகங்களின் முன்னேற்றம் ஆகியவற்றுக்கு இவ்வங்கி தொடர்ந்து ஆதரவளித்து வருகிறது. இந்தச் சாதனை குறித்துக் கருத்து தெரிவித்த SDB வங்கியின் பதில் பிரதம நிறைவேற்று அதிகாரி திரு. மனோஜ் அக்மீமனா, “வங்கித் துறையில் இரண்டாம் இடத்தைப் பிடித்திருப்பது, ஒரு நோக்கத்தால் உந்தப்பட்ட நிதி நிறுவனமாக நாங்கள் தொடர்ந்து அடைந்துவரும் முன்னேற்றத்திற்கான ஒரு முக்கிய அங்கீகாரமாகும். இந்த அங்கீகாரம், எங்கள் ஊழியர்களின் அர்ப்பணிப்பையும், எங்கள் வாடிக்கையாளர்கள், பங்குதாரர்கள், வணிகப் பங்காளிகள் மற்றும் சமூகங்கள் எங்கள் மீது வைத்துள்ள தொடர்ச்சியான நம்பிக்கையையும் பிரதிபலிக்கிறது” என்றார்.
அவர் மேலும் கூறுகையில், “எங்கள் கவனம் நிதிச் செயல்திறனையும் தாண்டி விரிந்துள்ளது. தொழில்முனைவோர், சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள், தனிநபர்கள் மற்றும் சமூகங்களுக்கு ஆதரவளிப்பதன் மூலமும், எங்கள் செயல்பாடுகள் முழுவதும் பொறுப்பான வங்கி நடைமுறைகளை வலுப்படுத்துவதன் மூலமும், நிலையான பொருளாதார மற்றும் சமூக மதிப்பை உருவாக்குவதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்” என்று கூறினார்.
சுற்றுச்சூழல், சமூக மற்றும் நிர்வாகக் கொள்கைகள் SDB வங்கியின் மூலோபாயம் மற்றும் செயல்பாட்டுக் கொள்கையின் மையமாகத் தொடர்கின்றன. நிதிச் சேவைகளுக்கான அணுகலை மேம்படுத்தவும், முறைசார் பொருளாதாரத்தில் பரந்த பங்கேற்பை ஏற்படுத்தவும், வங்கி தனது வாடிக்கையாளர் சார்ந்த தீர்வுகள், டிஜிட்டல் திறன்கள் மற்றும் சமூகம் சார்ந்த முயற்சிகளைத் தொடர்ந்து வலுப்படுத்தி வருகிறது.
இந்த சமீபத்திய அங்கீகாரம், SDB வங்கியை அதன் நிலைபேற்றியல் சார்ந்த செயல்திட்டத்தை ஆழப்படுத்தவும், பங்குதாரர்களின் நம்பிக்கையை வலுப்படுத்தவும், இலங்கையின் நீண்டகால பொருளாதார மற்றும் சமூக முன்னேற்றத்திற்கு தொடர்ந்து பங்களிக்கவும் மேலும் ஊக்குவிக்கும்.
SDB வங்கி தொடர்பான விபரங்கள்
ஒவ்வொரு தனிநபரின் தேவைகளுக்கு ஏற்ப வாடிக்கையாளரை மையமாகக் கொண்ட மற்றும் விரிவான ஆதரவை வழங்குவதில் அர்ப்பணிப்புடன் செயல்படும், எதிர்காலத்திற்குத் தயாரான வங்கியான SDB வங்கி, இலங்கை மத்திய வங்கியால் ஒழுங்குபடுத்தப்பட்ட உரிமம் பெற்ற ஒரு விசேட வங்கியாகும். இது கொழும்பு பங்குச் சந்தையின் பிரதான சபையில் பட்டியலிடப்பட்டுள்ளது மற்றும் Fitch Ratings-ஆல் BB+(lka) எனத் தரமதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. நாடு தழுவிய அதன் 93 கிளைகளின் வலையமைப்பு மூலம், இந்த வங்கி நாடு முழுவதும் உள்ள அதன் தனிநபர், சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள், கூட்டுறவு மற்றும் வணிக வங்கி வாடிக்கையாளர்களுக்கு விரிவான நிதிச் சேவைகளை வழங்குகிறது. சுற்றுச்சூழல், சமூக மற்றும் நிர்வாகம் சார்ந்த கோட்பாடுகள் SDB வங்கியின் நெறிமுறைகளில் ஆழமாக வேரூன்றியுள்ளன. நிலைபேற்றியல் கொண்ட நடைமுறைகள் மூலம் உள்ளூர் சமூகங்களையும் வணிகங்களையும் மேம்படுத்துவதில் உறுதியான கவனம் செலுத்தப்படுகிறது. இலங்கையை புதிய உச்சங்களுக்குக் கொண்டு செல்லும் நோக்கில், பெண்களுக்கு வலுவூட்டுதல், சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் நிலையான வளர்ச்சி மற்றும் டிஜிட்டல் உள்ளடக்கத்தை ஊக்குவிப்பதில் இந்த வங்கி குறிப்பாக அர்ப்பணிப்புடன் உள்ளது.





























