Header Logo
Vallibel FD
Selan Bank
வணிகம்
இலங்கையின் உடற்பயிற்சி மற்றும் நல்வாழ்வுத் துறையில் மூன்று தசாப்த கால சேவையைத் தொடரும் Quantum Fitness

Sep 15, 2026 - 12:46 PM

இலங்கையின் உடற்பயிற்சி மற்றும் நல்வாழ்வுத் துறையில் மூன்று தசாப்த கால சேவையைத் தொடரும் Quantum Fitness
Mobitel Inner 1278

ஆரோக்கியமான வாழ்க்கைக்கு உடற்பயிற்சி மிகவும் அவசியமானது என்ற விழிப்புணர்வு அதிகரித்து வரும் இந்நாட்களில், குவாண்டம் ஃபிட்னஸ் (Quantum Fitness) நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கான விழிப்புணர்வு, ஆரோக்கியம் மற்றும் எளிதில் பெறக்கூடிய உடற்பயிற்சி தீர்வுகளை வழங்குவதில் தனது கவனத்தை மேலும் வலுப்படுத்தி வருகிறது. இலங்கையின் உடற்பயிற்சித் துறையை மேம்படுத்துவதில் சுமார் முப்பது வருட அனுபவத்தைக் கொண்டு இந்நிறுவனம் இச்சேவையை முன்னெடுத்து வருகிறது. 1998 ஆம் ஆண்டு குவாண்டம் டெலிஷோப்பிங் (Quantum Teleshopping) என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்ட காலத்தில், வீட்டிலிருந்தபடியே உடற்பயிற்சி செய்யும் முறையும் டெலிஷோப்பிங் (Teleshopping) முறையும் இலங்கையில் ஆரம்பக் கட்டத்திலேயே இருந்தன. காலப்போக்கில் வளர்ச்சி கண்ட குவாண்டம் ஃபிட்னஸ் நிறுவனம், வீடுகள், உடற்பயிற்சி கூடங்கள் (gyms) மற்றும் பிற நிறுவனங்களுக்கான உடற்பயிற்சி உபகரணங்களை விநியோகிக்கும் முன்னணி நிறுவனமாக மாறியதோடு, சர்வதேச ரீதியில் புகழ்பெற்ற வர்த்தக நாமங்களையும் தொழில்நுட்பங்களையும் இலங்கை வாடிக்கையாளருக்கு அறிமுகப்படுத்தியது. 

இந்நிறுவனத்தின் வளர்ச்சி நாடு முழுவதிலும் உள்ள அதன் விற்பனையகக் கட்டமைப்பிலும் எதிரொலித்தது. கொழும்பைத் தாண்டி கண்டி, காலி மற்றும் ஜா-எல போன்ற பிரதான நகரங்களுக்கும் தனது காட்சியறையை விரிவுபடுத்தியதன் மூலம், உயர்தரமான உடற்பயிற்சி சாதனங்களையும், விற்பனைக்குப் பிந்தைய சேவைகளையும் நாட்டின் அனைத்துப் பகுதி மக்களுக்கும் எளிதில் கிடைக்கும்படி செய்தது. 

உபகரணங்களை விற்பனை செய்வதோடு நின்றுவிடாமல், நாட்டின் விளையாட்டுத் துறை வளர்ச்சிக்கும் குவாண்டம் ஃபிட்னஸ் நிறுவனம் பங்களிப்புச் செய்துள்ளது. ஃபவுண்டேஷன் ஆஃப் குட்னஸ் (Foundation of Goodness) அமைப்புடன் இணைந்து, கிராமப்புற விளையாட்டு வீரர்களின் திறனை மேம்படுத்துவதற்காக பவர் பிளேட் (Power Plate) உபகரணங்களை வழங்கியமை இதற்குச் சிறந்த சான்றாகும். வணிக நோக்கத்திற்கு அப்பாற்பட்டு, விளையாட்டு மற்றும் உடற்பயிற்சி வாய்ப்புகளை கிராமப்புறங்களுக்கும் கொண்டு சேர்ப்பதில் நிறுவனத்திற்கு உள்ள அக்கறையை இது காட்டுகிறது. இப்பாரம்பரியத்தின் தொடர்ச்சியாக, தற்போது சுகாதாரம் மற்றும் நல்வாழ்வுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. வாடிக்கையாளர்கள் தங்களுக்குப் பொருத்தமான உபகரணங்களைத் தேர்வு செய்யவும், அவற்றை முறையான மற்றும் பாதுகாப்பான வழியில் பயன்படுத்தவும், ஆரோக்கியமான பழக்கவழக்கங்களை ஏற்படுத்திக் கொள்ளவும் குவாண்டம் ஃபிட்னஸ் வாடிக்கையாளர் தொடர்பாடல் திட்டம் (Customer Engagement Programme) வழிவகுக்கிறது. 

அத்துடன், குவாண்டம் ஃபிட்னஸ் ஹெல்த் அகாடமி (Quantum Fitness Health Academy) மூலம் தகுதிவாய்ந்த நிபுணர்களைக் கொண்டு இணைய வழிக் கருத்தரங்குகளை நடத்தி வருகிறது. இதன் மூலம் உடற்பயிற்சி, வீட்டில் செய்யும் பயிற்சிகள், ஊட்டச்சத்து, தூக்கம் மற்றும் தொற்றா நோய்களைத் தடுத்தல் போன்ற விழிப்புணர்வை மக்களுக்கு வழங்கி வருகிறது. 

இது குறித்து குவாண்டம் ஃபிட்னஸ் நிறுவனத்தின் நிறுவனரும், தலைவருமான நோமல் விஜேயரட்ன கருத்து தெரிவிக்கையில். “கடந்த சில ஆண்டுகளில் இலங்கையர்களிடையே உடற்பயிற்சி குறித்த பார்வையில் மிகப் பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளதை காண்கிறோம். வாடிக்கையாளர்களின் தேவைகளுக்கு ஏற்ப எங்களை மாற்றியமைத்துக் கொள்வதே எங்களது பயணத்தின் வெற்றியாகும். இன்று மக்களுக்கு வெறும் உபகரணங்கள் மட்டும் போதாது. ஆரோக்கியமான வாழ்க்கையை வாழத் தேவையான அறிவும் சரியான வழிகாட்டுதலும் தேவைப்படுகின்றன. அந்த இடத்திலேயே எங்களது பணி தொடர்கிறது.” என்றார். 

கிட்டத்தட்ட மூன்று தசாப்த கால நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டு, இலங்கையர்களின் அன்றாட வாழ்க்கைக்கு ஏற்ற எளிய மற்றும் பயனுள்ள உடற்பயிற்சி தீர்வுகளை வழங்குவதில் குவாண்டம் ஃபிட்னஸ் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறது. 

குவாண்டம் ஃபிட்னஸ் நிறுவனத்தின் தயாரிப்புகள் பற்றிய மேலதிக தகவல்களுக்கு, நாடு முழுவதும் உள்ள காட்சியறைகளுக்குச் விஜயம் செய்யவும். 0115964964 என்ற இலக்கத்தைத் தொடர்புகொள்ளவும் அல்லது www.quantum.lk என்ற இணையதளத்தைப் பார்வையிடவும்.

Disclaimer: All the comments will be moderated by the AD editorial. Abstain from posting comments that are obscene, defamatory or slanderous. Please avoid outside hyperlinks inside the comment and avoid typing all capitalized comments. Help us delete comments that do not follow these guidelines by flagging them (mouse over a comment and click the flag icon on the right side). Do use these forums to voice your opinions and create healthy discourse.

Comments

0
Comments are disabled

Note: Due to legal constraints, the Ada Derana Editorial team has taken a decision to disable comments on all articles concerning ongoing court procedures.


MOST READ

காணொளி
சுற்றுலா நகரில் தொடரும் குதிரை விபத்துகள்!

சுற்றுலா நகரில் தொடரும் குதிரை விபத்துகள்!

மீனவக் குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிப்பு!

மீனவக் குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிப்பு!

ஈரோஸ் கட்சித் தலைவர் சாடல்!

ஈரோஸ் கட்சித் தலைவர் சாடல்!

எங்கள் மீதும் தப்பு உள்ளது!

எங்கள் மீதும் தப்பு உள்ளது!

மீனவர்களுக்கு அடித்த அதிர்ஷ்டம்

மீனவர்களுக்கு அடித்த அதிர்ஷ்டம்

22 ஐ நாங்களும் எதிர்க்கின்றோம்!

22 ஐ நாங்களும் எதிர்க்கின்றோம்!

முழு நாட்டிற்கும் முக்கியமானதொன்று!

முழு நாட்டிற்கும் முக்கியமானதொன்று!

பாராளுமன்றில் ஜீவன் - கலைச்செல்வி காரசாரமான விவாதம்!

பாராளுமன்றில் ஜீவன் - கலைச்செல்வி காரசாரமான விவாதம்!

மாணவி தற்கொலைக்கு முயற்சி செய்தது தொடர்பில் விசாரணை மேற்கொள்ள வேண்டும்!

மாணவி தற்கொலைக்கு முயற்சி செய்தது தொடர்பில் விசாரணை மேற்கொள்ள வேண்டும்!

நல்லூர் கொடியிறக்கம்!

நல்லூர் கொடியிறக்கம்!

Mobitel 1278