Sep 15, 2026 - 02:45 PM

செலான் வங்கி, பயணிகள் மற்றும் வர்த்தக வாகனங்களை கொள்வனவு செய்யும் வாடிக்கையாளர்களுக்கு போட்டித்தன்மை வாய்ந்த நிதித்தீர்வுகளை அதிக வசதி மற்றும் நெறிப்படுத்தப்பட்ட ஒப்புதல் செயல்முறையுடன் இணைத்து, மேம்படுத்தப்பட்ட லீசிங் வசதிகளை வழங்குவதற்காக Toyota Lanka (Private) Limited நிறுவனத்துடன் மூலோபாய ரீதியாக கைகோர்த்துள்ளது.
இப் புரிந்துணர்வு ஒப்பந்தம், நிதிச்சேவைகளில் நிபுணத்துவம் கொண்ட செலான் வங்கியையும் இலங்கையின் வாகனத் துறையில் நீண்டகாலப் பிரசன்னத்தை கொண்ட Toyota Lanka வையும் ஒன்றிணைத்து பிரத்தியேக லீசிங் வசதியை அறிமுகப்படுத்துகிறது. இதன் மூலம் Toyota வாகனங்களை அணுக விரும்பும் தனிநபர்கள் மற்றும் வணிகங்கள், வாடிக்கையாளர்களை மையமாகக் கொண்ட பரந்த நிதித்தீர்வுகளை பெற்றுக் கொள்ளமுடியும்.
இவ் இணைவின் கீழ், தகுதியுடைய வாடிக்கையாளர்கள் செலான் லீசிங் சேவையை போட்டிமிக்க வட்டி வீதங்களுடன் 7 ஆண்டுகள் வரையான நெகிழ்வான திருப்பிச் செலுத்தும் காலங்களுடன் பெற்றுக்கொள்ள முடியும். மேலும், இதன் மூலம் 24 மணித்தியாலங்களுக்குள் அனுமதியைப் பெற்றுக்கொள்ளும் வகையில் விரைவுபடுத்தப்பட்ட அனுமதி செயல்முறையும் வழங்கப்படுகிறது. வாகன உரிமையை மேலும் இலகுவாகவும் அணுகக்கூடியதாகவும் மாற்றுவதுடன், வாடிக்கையாளர்களுக்கு மிகவும் சீரானதும் திறன்மிக்கதுமான லீசிங் அனுபவத்தை வழங்கும் வகையில் இத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், வாடிக்கையாளர்கள் Toyota வாகனங்களை விரைவாகப் பெற்றுக்கொள்ளலாம்.
இக் கூட்டாண்மை ஆனது, இலங்கையின் பொருளாதார நடவடிக்கைகளுடன் இணைந்ததாக, நம்பகமான பயணிகள் மற்றும் வர்த்தகப் போக்குவரத்திற்கான தேவையும் தொடர்ந்து அதிகரித்து வரும் வேளையில் உருவாகியுள்ளது. போட்டி நிறைந்த சூழலில் செயற்படும் வணிகங்களுக்குத் திறமையான மற்றும் பாதுகாப்பான போக்குவரத்திற்கான தேவை அத்தியாவசியமாகி வரும் அதே வேளை தனிநபர்களும் குடும்பங்களும் நம்பகமான பயணத் தீர்வுகளை நாடுகின்றனர். இவ் இணைவின் மூலம் செலான் வங்கி, மாறிவரும் இத் தேவைகளுக்கு ஆதரவளிக்கும் நெகிழ்வான நிதியுதவித் தெரிவுகளை வழங்கவுள்ளது.
இது தொடர்பாக செலான் வங்கியின் தனிநபர் வங்கியியல் - பிரதிப் பொது முகாமையாளர், யூஜின் செனவிரத்ன தெரிவிக்கையில்,“Toyota Lanka உடனான எங்கள் இணைவு ஆனது எமது வாடிக்கையாளர்களின் தேவைகளுக்கு மிகவும் அணுகக்கூடிய மற்றும் பொருத்தமான நிதித்தீர்வுகளை வழங்குவதற்கான செலான் வங்கியின் தொடர்ச்சியான அர்ப்பணிப்பின் மற்றொரு படியை பிரதிபலிக்கிறது. கவர்ச்சிகரமான லீசிங் வசதிகள், நெகிழ்வான திருப்பிச் செலுத்தும் காலங்கள் மற்றும் Toyota Lankaவின் வாகன வழங்கலின் வலிமையுடன் விரைவான ஒப்புதல் செயல்முறை ஆகியவற்றை இணைத்து, வாடிக்கையாளர்கள் அதிக நம்பிக்கையுடனும் இலகுவாகவும் பயணிகள் மற்றும் வர்த்தக வாகனங்களை கொள்வனவு செய்வதற்கான சௌகரியமான பாதையை உருவாக்குகிறோம். என்றார்.
மேலும், செலான் லீசிங் வசதி ஊடாக வீட்டிற்கே வருகை தந்து உதவி மற்றும் இலவச ஆலோசனை உட்பட்ட தனிப்பயனாக்கப்பட்ட வழிகாட்டுதலை வழங்கும் அர்ப்பணிப்புள்ள லீசிங் நிபுணர்கள், லீசிங் விண்ணப்ப செயல்முறை முழுவதும் ஆதரவளிப்பர். செலான் வங்கியின் நாடளாவிய கிளை வலையமைப்பின் ஊடாக வாடிக்கையாளர்கள் ஆவணங்கள், விண்ணப்ப நடைமுறைகள் மற்றும் அங்கீகாரத்திற்குப் பிந்தைய சேவைகள் ஆகியவற்றிற்கான ஆதரவுடன் ஆரம்ப விசாரணை தொடக்கம் நிறைவு வரை தடையற்ற அனுபவத்தைப் பெற்றுக்கொள்ளலாம்.
Toyota Lanka (Private) Limited நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர்/பிரதம நிறைவேற்று அதிகாரி திரு. மனோகர அதுகோரள கருத்துத் தெரிவிக்கையில், “செலான் வங்கியுடன் இணைந்து, Toyota Lanka இன் ‘Mobility for All’ என்ற தொலைநோக்குப் பார்வைக்கு ஆதரவளிக்கும் வகையில் இலங்கை முழுவதும் உள்ள மக்களுக்காக போக்குவரத்து வசதியை மேலும் அணுகக்கூடியதாக மாற்றும் இந்த முயற்சியில் இணைவதில் நாம் மகிழ்ச்சியடைகிறோம். Toyota பயணிகள் மற்றும் வர்த்தக வாகனங்களுக்கான நிதி வசதிகளை மேலும் இலகுவாகப் பெற்றுக்கொள்ளும் வாய்ப்பை ஏற்படுத்துவதன் மூலம், தனிநபர்கள், குடும்பங்கள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் தங்களது வாழ்க்கை, தொழில் மற்றும் வளர்ச்சிக்குத் தேவையான போக்குவரத்து வசதியைப் பெற்றுக்கொள்ள வலுவூட்ட முடியும் என நம்புகிறோம். வாடிக்கையாளர்களின் வசதியை மேம்படுத்துவதிலும், நாட்டின் பல்வேறு சமூகங்களுக்கு போக்குவரத்து வசதிகளின் நன்மைகளை விரிவுபடுத்துவதிலும் எமக்கிடையேயுள்ள ஒருமித்த அர்ப்பணிப்பை இக் கூட்டாண்மை பிரதிபலிக்கிறது.” என்றார்.
நிதிசார் நெகிழ்வுத்தன்மை, தனிப்பயனாக்கப்பட்ட வாடிக்கையாளர் சேவை மற்றும் கவர்ச்சிகரமான விற்பனைக்குப் பிந்திய நன்மைகள் ஆகியவற்றை ஒருங்கிணைப்பதன் மூலம் நம்பகமான போக்குவரத்துத் தீர்வுகளை எதிர்பார்க்கும் வாடிக்கையாளர்களுக்கு முழுமையான பெறுமதி வாய்ந்த தீர்வை இக் கூட்டாண்மை வழங்குகிறது. அத்துடன், மாறிவரும் வாடிக்கையாளர் தேவைகளுக்கு ஏற்ற வகையில் புத்தாக்கமான நிதித்தீர்வுகளை வழங்குவதன் மூலம், நாட்டின் பயணிகள் மற்றும் வர்த்தக வாகனத் தேவைகளுக்கு ஆதரவளிப்பதில் செலான் வங்கி கொண்டுள்ள அர்ப்பணிப்பையும் இது மேலும் வலுப்படுத்துகிறது.
இவ் இணைவு மூலம் கிடைக்கும் செலான் லீசிங் வசதிகள் பற்றி மேலும் அறிய ஆர்வமுள்ள வாடிக்கையாளர்கள், 011-200 88 88 என்ற செலான் வங்கியின் விசேட தொலைபேசி இலக்கத்தை தொடர்புகொள்ளவும்.





























