Sep 15, 2026 - 03:49 PM

முதல் பாகம் வெற்றியடைந்தால் இரண்டாவது பாகம் வருவது வழக்கம்.
அப்படி நடிகர் கார்த்தி நடிப்பில் கடந்த 2022 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் சர்தார், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. முதல் பாக வெற்றியால் இரண்டாம் பாகம் தயாரானது.
இதில் அப்பா - மகன் என இரட்டை வேடத்தில் கார்த்தி நடித்திருந்தார். மேலும் எஸ்.ஜே.சூர்யா, மாளவிகா மோகனன், ஆஷிகா ரங்கநாத், ரஜிஷா விஜயன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
பெரிய எதிர்ப்பார்ப்பில் கார்த்தியின் சர்தார் 2 திரைப்படம் வெளியாகி இருந்தது.
ஆனால் படம் எதிர்ப்பார்த்த அளவு வசூல் வேட்டை செய்யவில்லை, சாதாரண வசூல் கூட வரலில்லை. 100 கோடி ரூபா பட்ஜெட்டில் தயாரான இப்படத்தின் வசூல் அதள பாதாளத்தில் உள்ளது.
தற்போது படத்திற்கான Theatrical Share சிங்கிள் Digit இல் வந்துள்ளதாக கூறப்படுகிறது. இது கார்த்தியின் திரைப்பயணத்தில் மோசமான கலெக்ஷன் செய்த படு தோல்விப் படமாக அமைந்துவிட்டது குறிப்பிடத்தக்கது.





























