Sep 16, 2026 - 02:54 PM

சமையலுக்கு நவீன தொழில்நுட்ப முறைகளைப் பயன்படுத்துவதற்கு முன்பாக, ஆசிய பிராந்தியத்தின் பல நாடுகளில் உணவு சமைப்பதற்காக மண் அடுப்புகளே (தந்தூர்) பயன்படுத்தப்பட்டன. நூற்றுக்கணக்கான ஆண்டுகள் பழமையான, உருளை வடிவத்தைக் கொண்ட இந்த மண் அடுப்பு, உணவை மிகச் சுவையாகத் தயாரிக்கும் திறன் காரணமாகவே இன்றும் அப்பிராந்தியங்களின் உணவுப் கலாச்சாரத்தில் முக்கிய அங்கமாகத் திகழ்கிறது. சமீபத்தில் இலங்கையில் ஆரம்பிக்கப்பட்ட Charcoal Tandoor Fire Grill உணவகத்தில், இந்த மண் அடுப்பைப் பயன்படுத்தியே உணவுகள் சமைக்கப்படுகின்றன. இதனால் சுவைமிக்க உணவை உண்ணும் வாய்ப்பு இப்போது இலங்கையர்களுக்குக் கிடைத்துள்ளது.
பாரம்பரிய மண் அடுப்பானது அதன் அடியில் கரிகளை எரிய வைப்பதன் மூலம் சூடாக்கப்படுகிறது. நெருப்பு சிறுகச் சிறுக மேலே எழும்பும்போது, அதன் தடித்த களிமண் சுவர்கள் வெப்பத்தை உறிஞ்சித் தக்க வைத்துக் கொள்கின்றன. இதனால் அடுப்பு அதிக வெப்பநிலையைக் கொண்ட சமையல் இடமாக மாறுகிறது. இங்கு உணவானது ஒரே நேரத்தில் பல வெப்ப முறைகளுக்கு உட்படுத்தப்படுகிறது. இறைச்சி, மீன் மற்றும் காய்கறிகள் களிமண் சுவர்களிலிருந்து வெளிப்படும் வெப்பம், அறை முழுவதும் சுழலும் சூடான காற்று மற்றும் அடியிலுள்ள கரியிலிருந்து நேரடியாக எழும் வெப்பம் ஆகியவற்றின் மூலம் நன்றாகச் சமைக்கப்படுகின்றன. ரொட்டி வகைகளைச் தயாரிக்கும் போது, அவை அடுப்பின் சுவர்களில் ஒட்டப்படுகின்றன. சூடான களிமண் சுவருடன் தொடர்புகொள்வதன் மூலம், அவற்றின் விளிம்புகளும் மேற்பரப்பும் லேசாகக் கருகி, உட்பகுதி மிகவும் மென்மையாக மாறுவதுடன் சிறந்த சுவையையும் பெறுகின்றன.
இந்த செய்முறைகளின் சேர்க்கை காரணமாக, சாதாரண அவன்களிலோ அல்லது சாதாரண கிரில்லிலோ பெற முடியாத ஒரு தனித்துவமான சுவையையும் முடிவையும் உணவுக்கு வழங்க முடிகிறது. இங்குள்ள அதிக வெப்பநிலை காரணமாக, உணவின் வெளிப்புற பகுதி மிக விரைவாக பொன்னிறமாகி லேசாகக் கருகுகிறது. குறைந்த நேரத்தில் சமைக்கப்படுவதால் உணவின் உட்பகுதியில் உள்ள ஈரப்பதம் அப்படியே பாதுகாக்கப்படுகிறது. மேலும், கரிப் புகையிலிருந்து கிடைக்கும் நறுமணம் ஒவ்வொரு உணவுக்கும் ஒரு தனித்துவமான மணத்தையும் சுவையையும் இயல்பாகவே சேர்க்கிறது.
இருப்பினும், உண்மையான தந்தூர் சமையல் கலை என்பது வெறும் நெருப்பின் மேல் உணவை வைப்பது மட்டுமல்ல. இங்கு வெப்பநிலையை அளவிடவோ அல்லது தானாகவே கட்டுப்படுத்தவோ சாதனங்கள் எதுவும் இல்லாததால், கரியின் நிலை, களிமண் சுவர்களில் உள்ள வெப்பம் மற்றும் அடுப்புக்குள் காற்றின் சுழற்சி குறித்து சமையல்கலைஞர்களே தீர்மானிக்க வேண்டும். மேலும், அவர்கள் ஒவ்வொரு மூலப்பொருளின் அளவு, அதன் மென்மைத்ன்மை, இறைச்சியைப் பதப்படுத்தப் பயன்படுத்திய பாத்திரத்தின் தன்மை மற்றும் கம்பியின் (skewer) சரியான நிலை குறித்தும் கவனமாக இருக்க வேண்டும். நேரம் அல்லது வெப்பநிலையில் ஏற்படும் மிகச்சிறிய மாற்றம் கூட உணவின் மென்மை, நிறம் மற்றும் சுவையை மாற்றக்கூடும்.
இது தொடர்பாகக் கருத்துத் தெரிவித்த Charcoal நிறுவனத்தின் நிறுவனர் திரு. ரோஹித் சச்தேவ், “Charcoal Tandoor Fire Grill இன் மண் அடுப்பு மிகவும் சிறப்பு வாய்ந்தது. அதை சமையலறையின் மிக முக்கியமான காரணியாகக் கூறலாம். பாரம்பரிய மண் அடுப்பில் பணியாற்றுவதற்குப் பொறுமை, அறிவு மற்றும் நெருப்பைப் பற்றிய புரிதல் அவசியமாகும். இங்கு வெப்பநிலையைக் கட்டுப்படுத்த பொத்தான்களோ அல்லது வெப்பம் சரியாக உள்ளதா என்பதைக் கூற டிஜிட்டல் திரைகளோ இல்லாததால், சமையல்கலைஞரின் இயல்பான அறிவு மற்றும் அனுபவம் மிகவும் முக்கியமானது. எங்கள் சமையல்கலைஞர்கள் அந்த நெருப்பைச் சரியாகக் கட்டுப்படுத்தி, உணவின் தனித்துவமான மணத்துடனும் சிறந்த சுவையுடனும் சுவையான உணவை வாடிக்கையாளர்களுக்கு வழங்க அர்ப்பணிப்புடன் செயல்படுகிறார்கள்.” எனக் குறிப்பிட்டார்.
2014ஆம் ஆண்டு பெங்கொக்கில் ஆரம்பிக்கப்பட்ட Charcoal, வடஇந்திய தந்தூர் பாரம்பரியங்கள், முகலாய உணவுக்கலை மற்றும் வரலாற்று சிறப்புமிக்க நறுமணப் பாதை (Spice Route) சுவைகளின் அடிப்படையில் தனது அடையாளத்தை உருவாக்கியுள்ளது. சமீபத்தில் கொழும்பு கெபிடல் ட்வின் பீக்ஸின் (Capitol Twin Peaks) 50ஆவது மாடியில் ஆரம்பிக்கப்பட்ட புதிய Charcoal உணவகத்தின் கிளை, சர்வதேச சுவைகளை அனுபவிக்கும் வாய்ப்பை இலங்கையர்களுக்கு வழங்கி, அந்த தனித்துவமான உணவுக் கலாச்சாரத்தைக் கொண்டுவருவதில் வெற்றியடைந்துள்ளது.
Charcoal Tandoor Fire Grill இன் உள்ளூர் பங்காளராகச் செயல்படும் பிரபல பாடகர் திரு. பாத்திய ஜயகொடி கருத்துத் தெரிவிக்கையில், “உண்மையான கைவினைத் திறமையுடன் கூடிய உயர்தர அனுபவத்தை வாடிக்கையாளர்களுக்கு வழங்க இந்த பாரம்பரிய சமையல் முறையை அப்படியே பேணிப் பாதுகாப்பது அவசியம் என்றார். மேலும் கருத்துத் தெரிவித்த அவர், 'கொழும்பில் உள்ள நமது வாடிக்கையாளர்கள் தங்கள் உணவு எவ்வாறு தயாரிக்கப்படுகிறது என்பதையும், உண்மையான பாரம்பரிய அனுபவத்தைப் பெறுவதையும் அறிய ஆர்வமாக உள்ளனர். தலைமுறைகளின் அறிவோடு, நவீன உணவகத்தின் சரியான தரம் மற்றும் உயர் மட்டத்துடன் கூடிய பாரம்பரிய தந்தூர் கலாச்சாரத்தை அனுபவிக்க இதன் மூலம் அவர்களுக்கு வாய்ப்பு கிடைக்கிறது.” என்றும் கூறினார்.
இங்கு கருத்துப் பகிர்ந்த திரு. சந்தோஷ் வீரமன், “Charcoal Tandoor Fire Grill இன் மூலப்பொருட்கள் எளிமையாகத் தோன்றினாலும், புகையின் மணம், மென்மை மற்றும் லேசான கருகலுக்கு இடையே சரியான சமநிலையைப் பெற நிபுணத்துவம் தேவை என்றார். Charcoal இல் அத்தகைய திறமையான சமையல்கலைஞர்கள் உள்ளனர் என்பதும், அவர்களின் உணவுப் பட்டியலிலிருந்து (Menu) அதை தெளிவாகக் காண முடிகிறது என்பதும் அவரது கூற்றாகும். கொழும்பு வாடிக்கையாளர்களுக்கு வழங்க விரும்பும் உண்மையான அனுபவத்தின் முக்கிய அங்கமாக இந்த பாரம்பரிய மண் அடுப்பே திகழ்கிறது.” என்றும் அவர் தெரிவித்தார்.
உண்மையான கரியைப் பயன்படுத்தி அதன் நெருப்பில் உணவைச் சமைக்கும் தந்தூரி கலையின் தனித்துவமான அனுபவமான Charcoal Tandoor Fire Grill இன் உண்மையான உணவுச் சுவையை மனதார அனுபவிக்கும் அதே வேளையில், கொழும்பு நகரின் கவர்ச்சிகரமான காட்சிகளைக் காணும் அரிய வாய்ப்பையும் வாடிக்கையாளர்கள் பெறலாம்.
இந்த சுவையான அனுபவத்தைப் பெற உங்கள் இடத்தை முன்பதிவு செய்து கொள்ள இன்றே 0112 123456 என்ற தொலைபேசி இலக்கத்தை அழைக்கவும்.





























