Sep 16, 2026 - 03:08 PM

2026 அரச சேவை தேசிய மட்ட வலைப்பந்தாட்டப் போட்டிகள் இன்று (16) மட்டுவில் வளர்மதி விளையாட்டுக் கழகத்தில் ஆரம்பமானது.
இலங்கை அரச சேவைகளை பிரதிநிதித்துவப்படுத்திய 20 பெண்கள் அணிகள் போட்டிகளில் பங்கேற்றது.
எதிர்வரும் 19 ஆம் திகதி இறுதிப் போட்டியும், விருது வழங்கும் வைபவமும் இடம்பெறும், குறித்த நிகழ்வில் பிரதம விருந்தினராக யாழ். மாவட்ட மேலதிக செயலாளர் கைலாசப்பிள்ளை சிவகரன், சிறப்பு விருந்தினர்களாக அரச சேவை வலைப்பந்துப் போட்டியின் தலைவர் ரிக்ஷி நனயகரா, மணிக் அமரசேஹரா ஐக்கிய இராச்சிய இலங்கைப் பள்ளி வலைப்பந்து சங்கம், சத்தியசோதி பிரதேச செயலாளர் சாவகச்சேரி, எஸ். இராஜமல்லிகை வட மாகாண தொழிலாளர் அலுவலகம் ஆகியோர் கலந்து கொண்டனர்.





























