Header Logo
Vallibel FD
Selan Bank
விளையாட்டு
புதிய சாதனை படைத்த மெஸ்ஸி!

Sep 17, 2026 - 02:18 PM

புதிய சாதனை படைத்த மெஸ்ஸி!
Mobitel Inner 1278

சாம்பியன்ஸ் கிண்ண இறுதிப் போட்டியில் இன்டர் மியாமி அணி, குரூஸ் அஸுல் அணியை 2 - 0 என்ற கோல் கணக்கில் வென்றது. 

இந்தப் போட்டியில் ஒரு கோல் அடித்தும், மற்றொரு கோலுக்கு உதவியும் மெஸ்ஸி அணியின் வெற்றிக்கு முக்கியப் பங்காற்றினார். 

ஆட்டத்தின் 24 ஆவது நிமிடத்தில், சக வீரர் லூயிஸ் சுவாரஸ் கொடுத்த கிராஸ் பந்தை, அவர் ஒரு அற்புதமான டைவிங் ஹெடர் மூலம் கோலாக மாற்றினார். இது இன்டர் மியாமி அணிக்காக அவர் அடித்த 100 ஆவது கோலாகும். 

வெறும் 115 போட்டிகளிலேயே இந்தச் சாதனையை நிகழ்த்தியதன் மூலம், 'மேஜர் லீக் சாக்கர்' (MLS) வரலாற்றில் ஒரு கிளப்பிற்காக 100 கோல்களை அடித்த அதிவேக வீரர் என்ற சாதனையை மெஸ்ஸி படைத்துள்ளார். 

மெஸ்ஸி இதுவரை மியாமி அணிக்காக 100 கோல்களை அடித்ததோடு மட்டுமில்லாமல் 55 கோல்களை அடிக்க உதவியும் உள்ளார். 

கடந்த ஆட்டத்திலும் 81 ஆவது நிமிடத்தில், மெஸ்ஸி கொடுத்த கார்னர் கிக்கை காசிமிரோ தலையால் முட்டி கோலாக்கி, அணியின் முன்னிலையை 2 - 0 என உயர்த்தினார். 

இந்த வெற்றியின் மூலம், இன்டர் மியாமி தனது வரலாற்றில் முதல் முறையாக சாம்பியன்ஸ் கிண்ணத்தை வென்றது. 

இந்தப் போட்டி, அமெரிக்காவின் MLS கிண்ண வெற்றியாளருக்கும் மெக்சிகோவின் லிகா MX வெற்றியாளருக்கும் இடையே ஆண்டுதோறும் நடத்தப்படுகறது. 

கடந்த மூன்று சீசன்களாக மெக்சிகன் அணிகள் இந்தக் கிண்ணத்தை வென்று வந்த நிலையில், மியாமி அவர்களின் ஆதிக்கத்தை முறியடித்தது. 

இது புதிய தலைமைப் பயிற்சியாளர் கிறிஸ்டியன் கோன்சாலெஸின் முதல் போட்டியாகும். அவர் தனது முதல் போட்டியிலேயே அணிக்கு கிண்ணத்தை பெற்றுத் தந்ததள்ளார். 

2023 இல் இன்டர் மியாமியில் இணைந்தார் மெஸ்ஸி. 39 வயதிலும் சிறப்பான பார்மில் இருக்கும் மெஸ்ஸி, தனது வருகைக்குப் பிறகு லீக்ஸ் கிண்ணம், சப்போர்ட்டர்ஸ் ஷீல்ட் மற்றும் MLS கிண்ணம் போன்ற பல பட்டங்களை அணிக்குப் பெற்றுத் தந்துள்ளார்.

Disclaimer: All the comments will be moderated by the AD editorial. Abstain from posting comments that are obscene, defamatory or slanderous. Please avoid outside hyperlinks inside the comment and avoid typing all capitalized comments. Help us delete comments that do not follow these guidelines by flagging them (mouse over a comment and click the flag icon on the right side). Do use these forums to voice your opinions and create healthy discourse.

Comments

0
Comments are disabled

Note: Due to legal constraints, the Ada Derana Editorial team has taken a decision to disable comments on all articles concerning ongoing court procedures.


MOST READ

காணொளி
நாங்கள் அரச திட்டங்களில் தொடர்ந்தும் புறக்கணிக்கப்படுகிறோம்!

நாங்கள் அரச திட்டங்களில் தொடர்ந்தும் புறக்கணிக்கப்படுகிறோம்!

இந்திய நிதியுதவியில் புதிய மருத்துவ கட்டடம்!

இந்திய நிதியுதவியில் புதிய மருத்துவ கட்டடம்!

மன்னார் வைத்தியசாலையில் புதிய விபத்துச் சிகிச்சைப் பிரிவு

மன்னார் வைத்தியசாலையில் புதிய விபத்துச் சிகிச்சைப் பிரிவு

சம்மாந்துறையில் தீவிரமடையும் காட்டு யானைகளின் அட்டகாசம்!

சம்மாந்துறையில் தீவிரமடையும் காட்டு யானைகளின் அட்டகாசம்!

நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு!

நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு!

வௌியான சிசிடிவி காட்சிகள்!

வௌியான சிசிடிவி காட்சிகள்!

3 ஆண்டுகளைக் கடந்தும் ஓயாத போராட்டம்!

3 ஆண்டுகளைக் கடந்தும் ஓயாத போராட்டம்!

சுற்றுலா நகரில் தொடரும் குதிரை விபத்துகள்!

சுற்றுலா நகரில் தொடரும் குதிரை விபத்துகள்!

மீனவக் குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிப்பு!

மீனவக் குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிப்பு!

ஈரோஸ் கட்சித் தலைவர் சாடல்!

ஈரோஸ் கட்சித் தலைவர் சாடல்!

Mobitel 1278