Header Logo
Vallibel FD
Selan Bank
விளையாட்டு
மெஸ்சிக்கு இறுதியாக பிரியாவிடை போட்டி!

Sep 17, 2026 - 05:03 PM

மெஸ்சிக்கு இறுதியாக பிரியாவிடை போட்டி!
Mobitel Inner 1278

அர்ஜென்டினா கால்பந்து அணியின் தலைவர் 39 வயதான லயோனல் மெஸ்சி, தனது 21 ஆண்டு கால சர்வதேச கால்பந்து போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். அர்ஜென்டினா அணிக்காக அதிக கோல் அடித்தவர் (207 ஆட்டங்களில் 125 கோல்), உலகக் கிண்ண கால்பந்தில் அதிக ஆட்டங்களில் விளையாடியவர் (34 ஆட்டம்) இப்படி பல்வேறு சாதனைகளுக்கு சொந்தக்காரரான மெஸ்சி திடீரென ஓய்வை அறிவித்து விட்டதால் அவருக்கு பிரிவுபசார போட்டியை நடத்தும் வாய்ப்பு கிடைக்காமல் போனது. 

இந்த நிலையில் பயிற்சியாளர் லயோனல் ஸ்காலோனி மற்றும் அர்ஜென்டினா கால்பந்து சங்கத்தின் நிர்ப்பந்தத்தின் பேரில் கடைசியாக ஒரு சர்வதேச போட்டியில் உள்ளூர் ரசிகர்கள் முன் விளையாட மெஸ்சி ஒப்புக் கொண்டுள்ளார். 

இதன்படி அடுத்த மாதம் 06 ஆம் திகதி பியூனஸ் அயர்சில் நடைபெறும் ஆப்பிரிக்க நாடான பெனின் அணிக்கு எதிரான நட்புறவு ஆட்டத்தில் அர்ஜென்டினா விளையாடுகிறது. இதற்கான அர்ஜென்டினா அணியில் மெஸ்சியின் பெயரும் இடம் பெற்றுள்ளது. 

அர்ஜென்டினா கால்பந்து சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 

'உலகின் சிறந்த வீரர், எங்களின் அடையாளம், எங்கள் அணி தலைவரை மீண்டும் ஒரு முறை விளையாட வைக்க முடிவு எடுத்துள்ளோம். அவருக்கான பிரியாவிடையை அக்டோபர் 06 ஆம் திகதி அளிக்க இருக்கிறோம். 2022 ஆம் ஆண்டு கட்டாரில் நடந்த உலகக் கிண்ண போட்டியில் அவருடன் இணைந்து விளையாடிய அனைத்து உலக சாம்பியன்களையும், அவர்களது குடும்பத்தினரையும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுக்கிறோம். உலகின் ஆகச்சிறந்த வீரரின் கடைசி ஆட்டத்தை காணவிருக்கும் தேசிய அணியின் ஆதரவாளர்களான அனைத்து அர்ஜென்டினியர்களுக்கும் இது மறக்க முடியாத போட்டியாக இருக்கும்' என தெரிவித்துள்ளது.

Disclaimer: All the comments will be moderated by the AD editorial. Abstain from posting comments that are obscene, defamatory or slanderous. Please avoid outside hyperlinks inside the comment and avoid typing all capitalized comments. Help us delete comments that do not follow these guidelines by flagging them (mouse over a comment and click the flag icon on the right side). Do use these forums to voice your opinions and create healthy discourse.

Comments

0
Comments are disabled

Note: Due to legal constraints, the Ada Derana Editorial team has taken a decision to disable comments on all articles concerning ongoing court procedures.


MOST READ

காணொளி
நாங்கள் அரச திட்டங்களில் தொடர்ந்தும் புறக்கணிக்கப்படுகிறோம்!

நாங்கள் அரச திட்டங்களில் தொடர்ந்தும் புறக்கணிக்கப்படுகிறோம்!

இந்திய நிதியுதவியில் புதிய மருத்துவ கட்டடம்!

இந்திய நிதியுதவியில் புதிய மருத்துவ கட்டடம்!

மன்னார் வைத்தியசாலையில் புதிய விபத்துச் சிகிச்சைப் பிரிவு

மன்னார் வைத்தியசாலையில் புதிய விபத்துச் சிகிச்சைப் பிரிவு

சம்மாந்துறையில் தீவிரமடையும் காட்டு யானைகளின் அட்டகாசம்!

சம்மாந்துறையில் தீவிரமடையும் காட்டு யானைகளின் அட்டகாசம்!

நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு!

நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு!

வௌியான சிசிடிவி காட்சிகள்!

வௌியான சிசிடிவி காட்சிகள்!

3 ஆண்டுகளைக் கடந்தும் ஓயாத போராட்டம்!

3 ஆண்டுகளைக் கடந்தும் ஓயாத போராட்டம்!

சுற்றுலா நகரில் தொடரும் குதிரை விபத்துகள்!

சுற்றுலா நகரில் தொடரும் குதிரை விபத்துகள்!

மீனவக் குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிப்பு!

மீனவக் குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிப்பு!

ஈரோஸ் கட்சித் தலைவர் சாடல்!

ஈரோஸ் கட்சித் தலைவர் சாடல்!

Mobitel 1278