Sep 17, 2026 - 10:46 PM

சுற்றுலா இலங்கை அணிக்கும் இங்கிலாந்து அணிக்கும் இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட இருபதுக்கு 20 தொடரின் இரண்டாவது போட்டி இன்று (17) இடம்பெறவுள்ளது.
Cardiffயில் இடம்பெறும் இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற இங்கிலாந்து அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளது.
இதன்படி, இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடவுள்ளது.
இந்த தொடரின் முதலாவது போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றிப்பெற்றுள்ளதால் இலங்கை அணிக்கு இன்றைய போட்டி தீர்மானமிக்கதாக அமையவுள்ளது.





























