Sep 18, 2026 - 12:17 PM

John Keells Properties நிறுவனம் தனது புதிய குடியிருப்புச் செயற்திட்டமான Vauxhall DSTRCT-க்கான விற்பனை அரங்கம் மற்றும் மாதிரி அடுக்குமனையை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம், இச்செயற்திட்டத்தை நேரில் அனுபவித்து அறியும் வாய்ப்பு கொள்வனவாளர்களுக்குக் கிடைக்கிறது. இலக்கம் 148, வொக்ஸோல் வீதி, கொழும்பு 02 என்ற முகவரியில் அமைந்துள்ள இந்த புதிய அமைவிடம், கொழும்பின் மிகவும் எதிர்பார்க்கப்படும் குடியிருப்புத் திட்டங்களில் ஒன்றான இதன் வடிவமைப்பு, கட்டமைப்பு மற்றும் வாழ்க்கை முறை அம்சங்கள் குறித்த விரிவான கண்ணோட்டத்தை வழங்குகிறது.
இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து சந்தையில் கிடைத்த சிறப்பான வரவேற்பைத் தொடர்ந்து, Vauxhall DSTRCT குறித்த தூரநோக்குடனான குறிக்கோளை நனவாக்குவதில் இந்த அறிமுகம் ஒரு முக்கிய மைல்கல்லாக அமைந்துள்ளது. இத்திட்டத்தின் சிறப்பம்சங்களான தரம், பயன்பாட்டுத் திறன் மற்றும் நுணுக்கமான வடிவமைப்பு ஆகியவற்றை வெளிப்படுத்தும் வகையில் இந்த மாதிரி அடுக்குமனை கவனமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. நவீன நகர வாழ்க்கைக்கு ஏற்றவாறு ஒவ்வொரு குடியிருப்புப் பகுதியும் எவ்வாறு திட்டமிடப்பட்டுள்ளது என்பதைப் பார்வையாளர்கள் இதன் மூலம் நன்கு புரிந்துகொள்ள முடியும்.
இந்தத் திறப்பு நிகழ்வு குறித்துக் கருத்துத் தெரிவித்த Property Group-இன் தலைமை வணிக அதிகாரி மற்றும் John Keells Holdings-இன் சிரேஷ்ட உப தலைவர் நதீம் ஷம்ஸ் கூறியதாவது: “Vauxhall DSTRCT விற்பனை அரங்கம் மற்றும் மாதிரி அடுக்குமனையின் அறிமுகமானது, கொள்வனவாளர்கள் வெறும் வரைபடங்கள் மற்றும் காட்சிப் படங்களுக்கு அப்பால் இத்திட்டத்தை நேரில் அனுபவித்து அறிய உதவுகிறது. கட்டமைப்பு மற்றும் வடிவமைப்பு முதல், ஒன்றோடொன்று இணைந்த மற்றும் வசதியான வாழ்க்கை முறைக்கு ஒவ்வொரு அம்சமும் எவ்வாறு துணைபுரிகிறது என்பது வரை, நாங்கள் உருவாக்கும் இடங்களுக்குப் பின்னால் உள்ள சிந்தனையை இது உயிர்ப்பிக்கிறது. அத்துடன், வாடிக்கையாளர்கள் தங்கள் கொள்வனவு முடிவுகளை எடுக்கும்போது, இத்திட்டத்தை நேரடியாகப் புரிந்துகொண்டு அதனுடன் தொடர்புபடுத்திக்கொள்ளும் வாய்ப்பையும் இது வழங்குகிறது.
கொழும்பின் வான்பரப்பில் 60 மாடிகள் தலைநிமிர்ந்து, 753 அடுக்குமனை குடியிருப்புகளைக் கொண்டுள்ள Vauxhall DSTRCT, கொழும்பு 02-இன் மையப்பகுதியில் ஒரு அடையாளச் சின்னமான நெடிய சமூகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் மைய அமைவிடம், முக்கிய வணிக, விருந்தோம்பல் மற்றும் வாழ்க்கை முறை இடங்களுக்குத் தடையற்ற இணைப்பை வழங்குகிறது. பல்பொருள் அங்காடிகள், கடைகள், பொழுதுபோக்கு இடங்கள், மருத்துவமனைகள், வங்கிகள், பாடசாலைகள் மற்றும் முக்கிய வணிக மையங்கள் அனைத்தும் எளிதில் சென்றடையும் தூரத்தில் அமைந்துள்ளன. இந்த வளாகத்தில் ஒன்று, இரண்டு, மூன்று மற்றும் நான்கு படுக்கையறை குடியிருப்புகள் உள்ளன. இவை, ஒரு முழுமையான வாழ்க்கை அனுபவத்தை உருவாக்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட அழகுபடுத்தப்பட்ட தோட்டங்கள், பொழுதுபோக்கு இடங்கள் மற்றும் மொட்டை மாடி வசதிகளால் பூர்த்தி செய்யப்படுகின்றன.
மேலும், Vauxhall DSTRCT திட்டமானது, John Keells Properties நிறுவனத்தின் அறிவார்ந்த, இணைக்கப்பட்ட நகர வாழ்க்கை மீதான கவனத்தையும் அடிப்படையாகக் கொண்டுள்ளது. TRI-ZEN திட்டத்தில் அறிவார்ந்த தொழில்நுட்பத்துடன் கூடிய வாழ்க்கை அறிமுகப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, இந்த வளாகமும் அறிவார்ந்த தொழில்நுட்பத்தை குடியிருப்பு அனுபவத்தில் மேலும் ஒருங்கிணைத்து, அன்றாட வாழ்வில் அதிக வசதி, இணைப்பு மற்றும் செயல்பாட்டைக் கொண்டுவருகிறது. இந்த அணுகுமுறை, நவீன நகர வாழ்க்கையில் தொழில்நுட்பத்தின் வளர்ந்து வரும் பங்கைப் பிரதிபலிப்பதோடு, குடியிருப்பாளர்கள் இந்த வளாகத்திற்குள் மிகவும் பின்னிப்பிணைந்த வாழ்க்கை முறையை அனுபவிக்கவும் அனுமதிக்கிறது.
விற்பனைக் கூடம் மற்றும் மாதிரி குடியிருப்பு ஆகியவை, வருங்கால கொள்வனவாளர்களுக்கு இந்த அம்சங்களை நேரடியாக அனுபவிப்பதற்கும், இடங்கள், தொழில்நுட்பம் மற்றும் நுட்பமான வடிவமைப்பு ஆகியவை எவ்வாறு ஒன்றிணைந்து Vauxhall DSTRCT வாழ்க்கை அனுபவத்தை உருவாக்குகின்றன என்பதைத் தெளிவாகப் புரிந்துகொள்வதற்கும் ஒரு வாய்ப்பை வழங்குகின்றன.
Vauxhall DSTRCT - வேறு எங்கும் செல்ல வேண்டிய அவசியம் கிடையாது கடந்த இரண்டு தசாப்தங்களில், John Keells Properties நிறுவனம், கொழும்பின் வானுயரக் கட்டிடங்களை கட்டியெழுப்புவதிலும், இலங்கையின் நவீன குடியிருப்பு நிலப்பரப்பை வடிவமைப்பதிலும் ஒரு முக்கிய பங்காற்றியுள்ளது. Crescat City-இல் உள்ள Emperor மற்றும் Monarch, OnThree20, 7th Sense, TRI-ZEN, City of Dreams Sri Lanka – Cinnamon Life, Viman, போன்ற நாட்டின் மிக முக்கியமான சில கட்டுமானத் திட்டங்களையும், கண்டியில் உள்ள Victoria Golf Resort-இல் பிரத்தியேகமான ஆதனத் திட்டங்களையும் இந்நிறுவனம் வழங்கியுள்ளது. இந்த முக்கியத்துவம் வாய்ந்த திட்டங்களின் மூலம், இந்நிறுவனம் வடிவமைப்பு, வாழ்க்கை முறை ஒருங்கிணைப்பு மற்றும் சமகால நகர்ப்புற வாழ்க்கை ஆகியவற்றில் தொடர்ந்து புதிய அளவுகோல்களை அறிமுகப்படுத்தி, இலங்கையில் உயர்தர குடியிருப்புத் திட்டங்களுக்கான தரத்தை நிர்ணயித்துள்ளது.
Vauxhall DSTRCT பற்றிய மேலும் தகவல்களுக்கு, www.johnkeellsproperties.com என்ற இணையத்தளத்தைப் பார்வையிடவும் அல்லது +94 711 638 638 என்ற தொலைபேசி இலக்கத்தினூடாக John Keells Properties நிறுவனத்தைத் தொடர்பு கொள்ளவும்.





























