Sep 18, 2026 - 01:22 PM

யாழ்ப்பாணம் திருவள்ளுவர் கலாச்சார மன்றத்தை நம்பிக்கை நிதியப் பொறுப்பு சபை நிர்வகிப்பதற்கான ஒப்பந்தம் இன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது.
இது தொடர்பான நிகழ்வு இன்று யாழ்ப்பாணம் திருவள்ளுவர் கலாச்சார மன்றத்தில் இன்று (18) முற்பகல் இடம்பெற்றது.
இதன்போது நம்பிக்கை நிதியப் பொறுப்பு சபையில் அங்கம் வகிக்கும் 9 உறுப்பினர்களும் கலந்துகொண்டு, குறித்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
மாகாண சபை ஆட்சி இல்லாத காரணத்தால், வடமாகாண ஆளுநர் நா.வேதநாயகன், யாழ்.மாநகர சபை ஆணையாளர் ஏ.சி.அரவிந்தராஜ்,கலாச்சார அமைச்சின் செயலாளர் வர்ணகுல சூரிய பிறின்ஸ் சேனாதீர யாழ் மாநகர முதல்வர் வி.மதிவதனி இலங்கைக்கான இந்திய துணை தூதுவர் சிறிமான் சாய் முரளி, மாகாண சபை அவைத் தலைவர் சீ.வி.கே.சிவஞானம் ஆகியோர் அதில் கைச்சாத்திட்டனர்.
அதேநேரம், சட்டவிரிவுரையாளர் கோசலை மதன், யாழ் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் சிறி சற்குணராஜா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
எதிர்வரும் 2 வருட காலத்திற்கு யாழ்ப்பாணம் திருவள்ளுவர் கலாச்சார மன்றத்தின் பராமரிப்பு மற்றும் சேவைகள் தொடர்பான விடயங்களை நம்பிக்கை நிதியப் பொறுப்பு சபை கையாளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.





























