Sep 19, 2026 - 06:13 PM

ஹட்டன் - பொகவந்தலாவ பிரதான வீதியின் நோர்வூட் சென்ஜோன் டிலரி பகுதியில் முச்சக்கர வண்டியொன்று 50 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக நோர்வூட் பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் இன்று (19) காலை 10.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
பொகவந்தலாவ பகுதியிலிருந்து ஹட்டன் நோக்கிப் பயணித்த முச்சக்கர வண்டியே கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி, 50 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
இவ்விபத்தில் எவருக்கும் காயங்கள் எதுவுமே ஏற்படவில்லை எனவும், ஆனால் முச்சக்கர வண்டிக்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் பொலிஸாரின் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
அதிக வேகம் காரணமாகவே சாரதியால் வேகத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் இவ்விபத்து ஏற்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் நோர்வூட் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.





























