Sep 21, 2026 - 07:43 PM

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளராக இந்திய அணியின் முன்னாள் வேகப் பந்துவீச்சாளர் சகீர் கான் நியமிக்கப்பட்டுள்ளார்.
கடந்த 18 ஆண்டுகளாக சென்னை சூப்பர் கிங்ஸின் தலைமைப் பயிற்சியாளராக செயல்பட்டு வந்த ஸ்டீஃபன் பிளெமிங் அண்மையில் அவரது பயிற்சியாளர் பொறுப்பிலிருந்து விலகினார்.
இதனையடுத்து, சென்னை சூப்பர் கிங்ஸின் புதிய தலைமைப் பயிற்சியாளராக யார் நியமிக்கப்படுவார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்திருந்தது.
இந்த நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸின் தலைமைப் பயிற்றுவிப்பாளராக இந்திய அணியின் முன்னாள் வீரர் சகீர் கான் நியமிக்கப்பட்டுள்ளமை முக்கியத்துவம் பெற்றுள்ளது.
இது தொடர்பாக சென்னை சூப்பர் கிங்ஸ் அதன் எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: இடதுகை வேகப் பந்துவீச்சாளர் சிஎஸ்கேவின் புதிய தலைமைப் பயிற்சியாளராக பொறுப்பேற்றுக் கொள்கிறார்.
சகீர் கானை சென்னை சூப்பர் கிங்ஸின் தலைமைப் பயிற்சியாளராக வரவேற்கிறோம் எனப் பதிவிடப்பட்டுள்ளது.





























