Header Logo
Vallibel FD
Selan Bank
வணிகம்
Vietjet வளர்ந்து வரும் வலையமைப்பிற்கு ஆதரவளிக்கும் வகையில் MRO மற்றும் Aviation Technology பங்காண்மைகளை விரிவாக்கம் செய்கின்றது

Sep 22, 2026 - 12:29 PM

Vietjet வளர்ந்து வரும் வலையமைப்பிற்கு ஆதரவளிக்கும் வகையில் MRO மற்றும் Aviation Technology பங்காண்மைகளை விரிவாக்கம் செய்கின்றது
Mobitel Inner 1278

Vietjet தனது பராமரிப்பு, பழுதுபார்ப்பு மற்றும் ஒட்டுமொத்த சீரமைப்பு (MRO), விமான பாகங்களுக்கான உதவி, டிஜிட்டல் விமானப் போக்குவரத்து, AI மற்றும் சைபர் பாதுகாப்பு ஆகியவற்றின் ஊடாக Thales மற்றும் CFM International ஆகிய நிறுவனங்களுடனான தனது மூலோபாயப் பங்காண்மைகளை விரிவுபடுத்தியுள்ளது. 

Vietjet இன் விரிவாக்கமடைந்துவரும் விமானங்களின் எண்ணிக்கை மற்றும் கொழும்புக்கும் Ho Chi Minh City இற்கும் இடையிலான நேரடி சேவை உட்பட அதன் சர்வதேச கட்டமைப்பு வசதிகளுக்கு இந்த உயரிய தொழில்நுட்பத் திறன்கள் வலுவூட்டும். 

வியட்னாமின் பொதுச்செயலாளரும் அதிபருமான தோ லம் பிரான்ஸிற்கு மேற்கொண்ட உத்தியோகபூர்வ விஜயத்தின் போது பாரிஸில் இவ்வொப்பந்தங்கள் அறிவிக்கப்பட்டன. இந்நடவடிக்கை Vietjet மற்றும் இரு முக்கிய சர்வதேச ஆகாய விமான தொழில்நுட்பப் பங்காளர்களுக்கு இடையிலான ஒத்துழைப்பை ஆழப்படுத்துவதுடன், வியட்னாம் - பிரான்ஸ் நாடுகளுக்கு இடையிலான பரந்த பொருளாதார மற்றும் தொழில்நுட்ப உறவுகளுக்கும் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்குகிறது. 

விமான MRO, AI மற்றும் சைபர் பாதுகாப்பு தொடர்பில் Thales நிறுவனத்துடனான ஒத்துழைப்பை விரிவுபடுத்துதல் 

செப்டம்பர் 10 ஆம் திகதி வியட்நாமிய தூதுக்குழு பிரான்ஸிற்கு மேற்கொண்ட விஜயத்தின் போது, Vietjet மற்றும் Thales ஆகிய நிறுவனங்கள் ஒரு முக்கிய MRO ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. இந்த மூலோபாய Repair-By-The-Hour (RBTH) ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, Vietjet இன் கொழும்பு வழித்தடத்தில் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ள அதே Airbus குடும்பத்தைச் சேர்ந்த A320/A321, A321neo/A321XLR, A330 மற்றும் A330neo விமானங்கள் உள்ளடங்கலாக, Vietjet இன் முழுமையான Airbus விமானங்களுக்கான விரிவான பாகங்கள் பராமரிப்புச் சேவைகளை Thales நிறுவனம் வழங்கவுள்ளது. 

இப்பங்காண்மை, செலவினங்களை உகந்ததாக்குவதுடன், செயற்பாட்டுத் திறனையும் மேம்படுத்தி, தொழில்நுட்ப நம்பகத்தன்மையையும் விமானப் படகுகளின் கிடைக்கும் தன்மையையும் மேலும் வலுப்படுத்தும். 

Vietjet மற்றும் Thales ஆகிய நிறுவனங்கள் டிஜிட்டல் விமானப் போக்குவரத்து, avionics, இணையப் பாதுகாப்பு மற்றும் AI திறன்சார் விமானச் செயல்பாடுகள் தொடர்பிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்திலும் கையெழுத்திட்டுள்ளன. இப்பங்காண்மை, பாதுகாப்பான கிளவுட் தீர்வுகள், முன்னறிவிப்பு பகுப்பாய்வு மற்றும் விமான நிறுவனத்தின் செயல்பாடுகளுக்கான முடிவெடுக்கும் உதவித் தொழில்நுட்பங்கள் ஆகியவை குறித்து ஆராயவுள்ளது. 

Nguyen Thanh Son, CEO of Vietjet இன் பிரதம நிறைவேற்று அதிகாரி குயேன் தான்ஹ் சன் கருத்துத் தெரிவிக்கையில்,: “Thales நிறுவனத்துடனான எமது பங்காண்மை, Vietjet விமானங்களின் நம்பகத்தன்மை, பாதுகாப்பு மற்றும் செயல்பாட்டுத் திறனை மேம்படுத்துவது மட்டுமன்றி, டிஜிட்டல் தொழில்நுட்பம், AI மற்றும் சைபர் பாதுகாப்பு ஆகியவற்றில் புதிய ஒத்துழைப்புக்கான வாய்ப்புகளையும் ஏற்படுத்தும். முன்னணி பிரெஞ்சுப் பங்காளர்களுடன் இணைந்து, தொழில்நுட்ப நிபுணத்துவத்தை ஒரு துடிப்பான விமானப் போக்குவரத்துச் சந்தையுடன் இணைப்பதையும், வியட்நாம் மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளுக்கு இடையே வலுவான வர்த்தகம், முதலீடு மற்றும் உறவுகளுக்குப் பங்களிப்பதையும் நாம் எதிர்நோக்கியுள்ளோம்.” என்றார். 

இந்தம ஒப்பந்தங்கள் Vietjet மற்றும் Thales ஆகிய நிறுவனங்களுக்கு இடையிலான பங்காண்மையில் ஒரு புதிய மைல்கல்லைக் குறிப்பதுடன், இரு நாடுகளுக்குமிடையிலான விரிவான மூலோபாயக் கூட்டாண்மையின் கீழ் வியட்னாம் மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளுக்கு இடையிலான பொருளாதாரம், தொழில்நுட்பம் மற்றும் தொழில்துறை ஒத்துழைப்புக்கு நடைமுறைச் முக்கியத்துவத்தையும் வழங்குகின்றன. 

CFM International நிறுவனத்துடன் இணைந்து அடுத்த தலைமுறை LEAP எஞ்சின் MRO திறன்களை ஆராய்தல் 

Vietjet மற்றும் CFM International ஆகிய நிறுவனங்களின் பிரதிநிதிகள், புதிய தலைமுறை எஞ்சின்களுக்கான MRO திறன்களை ஆராய்வதற்காக LOI ஐ பரிமாறிக் கொண்டனர். Vietjet மற்றும் CFM International ஆகிய நிறுவனங்கள், வியட்னாமில் LEAP எஞ்சின் பராமரிப்பு, பழுதுபார்ப்பு மற்றும் ஒட்டுமொத்த சீரமைப்பு (MRO) திறன்களுக்காக Vietjet தனது சொந்த தீர்வை உருவாக்குவதற்கான சாத்தியக்கூறுகளை மதிப்பிடுவதற்காக LOI இல் கையெழுத்திட்டுள்ளன. LOI இன் நிபந்தனைகளின்படி, வியட்னாமில் உள்ளூர் பராமரிப்புத் தீர்வை அமைப்பது தொடர்பிலான எஞ்சின் MRO தேவைகள், திறன்கள், உள்கட்டமைப்பு, மனிதவளம் மற்றும் தொழில்துறை சார்ந்த காரணிகளை மதிப்பிடுவது குறித்த ஆலோசனைகளை Vietjet நிறுவனத்திற்கு வழங்குவதற்கான ஆலோசனை ஒப்பந்தம் ஒன்றை CFM முன்மொழியும். இம்முயற்சி Vietjet நிறுவனம் தனது பிரமாண்டமான புதிய தலைமுறை விமானங்களை விரிவுபடுத்தி வரும் சூழலில் எடுக்கப்பட்டுள்ளது. எதிர்கால LEAP எஞ்சின் MRO திறனானது, நிறுவனத்தின் நீண்டகாலச் செயல்பாடுகளுக்கு ஆதரவளிப்பதுடன், வியட்னாம் உயர் மதிப்புமிக்க ஆகாய சேவைகளை உருவாக்கவும், சர்வதேச தகுதிவாய்ந்த பொறியாளர்களை உருவாக்கவும், உலகளாவிய விமானப் போக்குவரத்து விநியோகச் சங்கிலியில் தனது பங்கை வலுப்படுத்தவும் உதவும். 

2014 ஆம் ஆண்டில் CFM56 எஞ்சினைக் கொண்ட தனது முதலாவது Airbus A320ceo விமானத்தை Vietjet பொறுப்பேற்றது முதல், அந்நிறுவனத்தின் வளர்ச்சிக்கு CFM தொடர்ந்து வலுச்சேர்த்து வருகிறது. விமான நிறுவனம் தற்போது CFM56 எஞ்சின்களால் இயங்கும் 50 A320ceo மற்றும் A321ceo விமானங்களை இயக்கி வருகிறது. இந்நிலையியல், CFM LEAP-1B எஞ்சின்களால் இயங்கும் 737-8 மற்றும் 737-8-200 விமானங்கள் அடங்கிய Vietjet இன் சமீபத்திய 200 Boeing 737-8 விமானங்களுக்கான ஓடர் மூலம் இப்பங்காண்மை ஒரு புதிய நிலையை எய்தியுள்ளது. 

Vietjet இன் உலகளாவிய வளர்ச்சியின் பின்னணியில் உள்ள திறன்களை கட்டியெழுப்புதல் 

ஒன்றிணைந்து பார்க்கும் போது, CFM International மற்றும் Thales ஆகிய நிறுவனங்களுடனான இக்கூட்டாண்மைகள் எஞ்சின் மற்றும் விமானப் பாகங்கள் MRO, டிஜிட்டல் விமானப் போக்குவரத்து, AI மற்றும் சைபர் பாதுகாப்பு ஆகியவற்றில் Vietjet இன் திறன்களை வலுப்படுத்துவதுடன், அதன் தொடர்ச்சியான விமான மற்றும் சர்வதேசக் வலைப்பின்னல் விரிவாக்கத்திற்கும் உறுதுணையாக அமைகின்றன. 

இவ்வளர்ச்சியில் இலங்கையும் ஒரு அங்கமாகவே உள்ளது. 2026 ஆகஸ்ட் 18 அன்று Vietjet நிறுவனம் கொழும்பு மற்றும் Ho Chi Minh City இடையே நேரடி விமானச் சேவைகளைத் தொடங்கியதில் இருந்து, இவ்வழித்தடமானது இரு நாடுகளுக்கும் இடையிலான ஒரு முக்கிய இணைப்பாக மாறியுள்ளது. உலகளாவிய ரீதியில் Vietjet இன் விமானங்களை வலுப்படுத்தும் Thales MRO இன் விரிவுபடுத்தப்பட்ட ஆதரவு மற்றும் CFM பொறியியல் கூட்டாண்மை ஆகியவற்றின் மூலமான பலன்களைப் பெறும் ஒன்றாக இவ்வழித்தடமும் விளங்குகிறது. விமான நிறுவனம் ஆசிய-பசிபிக் பிராந்தியம் முழுவதும் தனது சேவைகளை விரிவுபடுத்தி, இந்த ஒக்டோபரில் தனது முதலாவது ஐரோப்பியச் சேவையைத் தொடங்கவுள்ள நிலையில், இம்முதலீடுகள் தொழில்நுட்பம், திறமை மற்றும் செயல்பாட்டுத் திறன் ஆகியவற்றின் மீதான அதன் நீண்டகாலக் கவனத்தை மேலும் உறுதிப்படுத்துகின்றன — இத்திறனை இலங்கைப் பயணிகள் இப்போது ஒவ்வொரு கொழும்புப் பயணத்தின்போதும் நேரடியாக அனுபவிக்கின்றனர். 

Vietjet பற்றி: 

புதுயுக விமானச் சேவை நிறுவனமான Vietjet, வியட்நாமின் வான்வழித் துறையில் புரட்சியை ஏற்படுத்தியுள்ளதுடன், பிராந்திய அளவிலும் உலகளாவிய ரீதியிலும் ஒரு முன்னோடி விமானச் சேவையாகத் திகழ்ந்து வருகின்றது. இந்நிறுவனம் தற்போது 135 விமானங்களைக் கொண்ட கட்டமைப்பை இயக்கி வருவதுடன், பரந்த மற்றும் குறுகிய உடல் அமைப்பைக் கொண்ட இருவகை விமானங்களையும் உள்ளடக்கியதாக கிட்டத்தட்ட 600 புதிய விமானங்களுக்கான கொள்வனவுப் பதிவுகளையும் மேற்கொண்டுள்ளது. செலவின முகாமைத்துவத் திறன், பயனுள்ள செயல்பாடுகள் மற்றும் செயற்திறன் ஆகியவற்றில் கவனம் செலுத்துவதுடன், அனைத்து நடவடிக்கைகளிலும் அதிநவீன தொழில்நுட்பத்தைப் புகுத்தி புதிய போக்குகளுக்குத் தலைமை வகிக்கும் Vietjet, வாடிக்கையாளர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காகப் பலதரப்பட்ட சேவைகளுடன் கூடிய கட்டணச் சேமிப்பு மற்றும் நெகிழ்வுத்தன்மை மிக்க வான்வழிப் பயண வாய்ப்புகளை வழங்குகின்றது. 

Vietjet நிறுவனம், சர்வதேச வான்வழிப் போக்குவரத்து சங்கத்தின் (IATA) செயற்பாட்டு பாதுகாப்பு கணக்காய்வு (IOSA) சான்றிதழைப் பெற்ற ஒரு முழு அளவிலான அங்கத்துவ நிறுவனமாகும். வியட்நாமின் மிகப்பெரிய தனியார் விமானச் சேவை நிறுவனமான இதற்கு, உலகின் ஒரே ஒரு பாதுகாப்பு மற்றும் தயாரிப்பு மதிப்பீட்டு இணையத்தளமான airlineratings.com நிறுவனத்தினால் பாதுகாப்பிற்கான மிக உயர்ந்த 7 நட்சத்திர அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதுடன், Airfinance Journal இனால் தொடர்ந்து பல வருடங்களாக ஆரோக்கியமான நிதிநிலை மற்றும் செயல்பாடுகளைக் கொண்ட உலகின் சிறந்த 50 விமானச் சேவை நிறுவனங்களில் ஒன்றாகவும் பட்டியலிடப்பட்டுள்ளது. அத்துடன், Skytrax, CAPA, Airline Ratings போன்ற புகழ்பெற்ற சர்வதேச அமைப்புகளினால் உலகின் சிறந்த குறைந்த கட்டண விமானச் சேவை நிறுவனம் எனவும் Vietjet பலமுறை பெயரிடப்பட்டுள்ளது. 

மேலதிக தகவல்களுக்கு பார்க்கவும் www.vietjetair.com.

Disclaimer: All the comments will be moderated by the AD editorial. Abstain from posting comments that are obscene, defamatory or slanderous. Please avoid outside hyperlinks inside the comment and avoid typing all capitalized comments. Help us delete comments that do not follow these guidelines by flagging them (mouse over a comment and click the flag icon on the right side). Do use these forums to voice your opinions and create healthy discourse.

Comments

0
Comments are disabled

Note: Due to legal constraints, the Ada Derana Editorial team has taken a decision to disable comments on all articles concerning ongoing court procedures.


MOST READ

காணொளி
அனோஜனை விடுதலை செய்யுமாறு கோரி போராட்டம்!

அனோஜனை விடுதலை செய்யுமாறு கோரி போராட்டம்!

நீதித்துறை இன்று சுதந்திரமாக செயல்படுகிறது!

நீதித்துறை இன்று சுதந்திரமாக செயல்படுகிறது!

அனோஜனைக் காப்பாற்றக் குரல்கொடுக்கும் யாழ்ப்பாணம்!

அனோஜனைக் காப்பாற்றக் குரல்கொடுக்கும் யாழ்ப்பாணம்!

லிந்துலையில் குளவி தாக்கி ஒருவர் பலி!

லிந்துலையில் குளவி தாக்கி ஒருவர் பலி!

அனோஜனின் குடும்பத்தினரை சந்தித்த ஜனாதிபதி!

அனோஜனின் குடும்பத்தினரை சந்தித்த ஜனாதிபதி!

இன்னொரு உயிரை இழக்கத் தயாரில்லை!

இன்னொரு உயிரை இழக்கத் தயாரில்லை!

மகனை மன்னித்து விடுதலை செய்யுங்கள்!

மகனை மன்னித்து விடுதலை செய்யுங்கள்!

பாடசாலை நோக்கிய மாணவர்களின் படையெடுப்பு!

பாடசாலை நோக்கிய மாணவர்களின் படையெடுப்பு!

சாவகச்சேரியில் பட்டப்பகலில் இடம்பெற்ற துணிகர திருட்டு!

சாவகச்சேரியில் பட்டப்பகலில் இடம்பெற்ற துணிகர திருட்டு!

யாழில் பட்டதாரிகள் நூதன போராட்டம்!

யாழில் பட்டதாரிகள் நூதன போராட்டம்!

Mobitel 1278