Header Logo
Vallibel FD
Vallibel LE
MOSTREAD
காணொளி
அரச ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்!

அரச ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்!

உலகளாவிய ரீதியில் சுற்றுலாத்துறையில் முன்னேறிவரும் இலங்கை!

உலகளாவிய ரீதியில் சுற்றுலாத்துறையில் முன்னேறிவரும் இலங்கை!

புனரமைப்பு!

புனரமைப்பு!

இந்திய நிதியுதவி இருந்தும் பலாலி, காங்கேசன்துறை அபிவிருத்தியில் இலங்கை அரசு பாராமுகம்

இந்திய நிதியுதவி இருந்தும் பலாலி, காங்கேசன்துறை அபிவிருத்தியில் இலங்கை அரசு பாராமுகம்

 யாழ் மத்திய பேருந்து நிலையக் காணியை அபகரிக்கும் நடவடிக்கையைக் கைவிட வேண்டும்

யாழ் மத்திய பேருந்து நிலையக் காணியை அபகரிக்கும் நடவடிக்கையைக் கைவிட வேண்டும்

மட்டக்களப்பில் மாணவி மாயமாகி 26 நாட்கள்!

மட்டக்களப்பில் மாணவி மாயமாகி 26 நாட்கள்!

ஹட்டனில் சேலை உதவியுடன் நகை உற்பத்தி நிலையத்தில் கைவரிசை

ஹட்டனில் சேலை உதவியுடன் நகை உற்பத்தி நிலையத்தில் கைவரிசை

 'கார்த்திகை வாசம்' மலர் கண்காட்சி!

'கார்த்திகை வாசம்' மலர் கண்காட்சி!

நாட்டை மீட்டெடுப்பது முக்கிய நோக்கமாகும்!

நாட்டை மீட்டெடுப்பது முக்கிய நோக்கமாகும்!

இம்ரான் கான் எங்களின் ஹீரோ!

இம்ரான் கான் எங்களின் ஹீரோ!

நான் அபிவிருத்திகளுக்குத் தடையாக இருந்ததில்லை

நான் அபிவிருத்திகளுக்குத் தடையாக இருந்ததில்லை

அந்த அறிக்கை நீதிமன்ற நடவடிக்கைகளை பாதிக்காது!

அந்த அறிக்கை நீதிமன்ற நடவடிக்கைகளை பாதிக்காது!

நீதிபதிகளின் பெயர்களைப் பயன்படுத்துகிறார்கள்!

நீதிபதிகளின் பெயர்களைப் பயன்படுத்துகிறார்கள்!

அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்க வேண்டும்!

அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்க வேண்டும்!

சர்வதேச விசாரணைக்கு பயப்படுகிறீர்களா?

சர்வதேச விசாரணைக்கு பயப்படுகிறீர்களா?

    Mobitel Inner 1278

    தென்னிந்திய சினிமாவில் டாப் நடிகைகளாக ராதா மற்றும் அம்பிகா இருவரும் திகழ்ந்து வந்தனர். தற்போது சென்னை பொலிஸ் ஆணையர் அலுவலகத்தில் ராதா தன்னுடைய சகோதரி அம்பிகா மற்றும் சகோதரர் மல்லிகார்ஜுனா மீது மோசடி புகாரளித்து இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. 

    இதனையடுத்து, ராதா அளித்த அந்த புகார் மனுவில், தன்னுடைய பழைய வங்கி செக்கை திருடி சுமார் 46 கோடி ரூபா அளவுக்கு முறைகேடு நடந்திருப்பதாக குற்றம்சாட்டியுள்ளார். இதுகுறித்து பத்திரிக்கையாளர் பயில்வான் ரங்கநாதன், சில அதிர்ச்சிகரமான தகவல்களை பகிர்ந்துள்ளார். 

    அதில், ராதா, அம்பிகா இருவரும் ARS Garden-ஐ இணைந்து வாங்கினார்கள். அந்த இடத்தின் முன் பகுதி அம்பிகாவுக்கும், பின் பகுதியில் இருந்த வீடு ராதாவுக்கும் ஒதுக்கப்பட்டது. திருமணத்திற்கு பின் ராதா வெளியூருக்கு சென்றுவிட்ட நிலை, ராதா தன் கணவரின் நட்சத்திர ஓட்டல்களை கவனித்துக்கொள்ள வேண்டியிருந்ததால், இந்த ஏ ஆர் எஸ் கார்டனை நிர்வகிக்கும் பொறுப்பை அம்பிகா கவனித்து வந்தார். 

    இச்சூழலில்தான் தற்போது ராதா, அம்பிகா மீது மோசடி தொடர்பான குற்றச்சாட்டுகள் முன்வைத்து இருக்கிறார். செக் மற்றும் பண பரிவர்த்தனை தொடர்பான விஷயங்களில் பிரச்சனை ஏற்படக்கூடும் என்பது தெரிந்ததுதான். அம்பிகா இந்த வேலையை செய்து இருக்கிறார். தன்னைவிட தன் தங்கை வசதியாக இருப்பதை அவரால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. 

    கடந்த சில மாதமாகவே அம்பிகா, யூடியூப் சேனலில் தேவையில்லாத கருத்துக்களை பேசி வருகிறார். 

    ராதா, அம்பிகாவை பற்றி பலருக்கும் தெரியாது, ஆனால் எனக்கு இருவரைப் பற்றி அக்குவேர் ஆணிவேறாக தெரியும். நான் ராதாவுடனும் அம்பிகாவுடனும் நடித்திருக்கிறேன். நான் அம்பிகாவுடன் முத்துக்கள் மூன்று படத்தில் நடித்தபோது ஒரு சண்டைக்காட்சி படமாக்கப்பட்டது. 

    நான் பத்திரிக்கையில் அம்பிகா பற்றி எழுதுவதால் என்மீது ஆத்திரத்தில் இருந்த அம்பிகா, கேமராமிடம், இன்று ரங்கநாதன் ஒளிந்தான், சண்டை காட்சியில் காலை வைத்து அவன் கழுத்தில் மிதிக்கிறேன் என்று கூறினார். அந்த கேமராமேன் எனக்கு தெரிந்தவர் என்பதால், இந்த விஷயத்தை என்னிடம் சொல்லிவிட்டார். 

    பின் சண்டைக்காட்சி படமாக்கப்பட்டபோது அம்பிகா காலைத் தூக்கி கழுத்தில் மிதிக்க வந்தார். தான் அந்த காலை புரட்டியதால் அம்பிகா கீழே விழுந்து தலையில் அடிபட்டுவிட்டது. 

    அச்சம்பவத்தின்போது தான் சற்று கவனமாக இருந்தேன், இல்லை என்றால் அம்பிகா கழுத்தில் மிதித்திருப்பார். அம்பிகாவை பற்றி எழுதியதால், என்னை கொலை செய்யும் எண்ணமே அவருக்கு வந்துவிட்டதாக பயில்வான் ரங்கநாதன் வெளிப்படையாக பேசியிருக்கிறார்.