Header Logo
Vallibel FD
Selan Bank
வணிகம்
யூரோமனி விருதுகள் 2026 இல் இலங்கையின் சிறந்த வங்கி மற்றும் சிறந்த ESG வங்கி ஆகிய இரு விருதுகளை கொமர்ஷல் வங்கியானது வென்றுள்ளது

Sep 22, 2026 - 12:57 PM

யூரோமனி விருதுகள் 2026 இல் இலங்கையின் சிறந்த வங்கி மற்றும்  சிறந்த ESG வங்கி ஆகிய இரு விருதுகளை கொமர்ஷல் வங்கியானது வென்றுள்ளது
Mobitel Inner 1278

இலங்கையின் வங்கித்துறையில் தனது நிகரற்ற தலைமையை மீண்டும் உறுதியாக நிலைநிறுத்தியுள்ள கொமர்ஷல் வங்கியானது, மதிப்புமிக்க யூரோமனி சிறப்பு விருதுகள் 2026 (Euromoney Awards for Excellence 2026) நிகழ்வில் இலங்கையின் சிறந்த வங்கி மற்றும் இலங்கையின் சிறந்த ESG வங்கி (Best ESG Bank in Sri Lanka) ஆகிய இரு உயரிய விருதுகளை வென்று இரட்டை வரலாற்றுச் சாதனையைப் படைத்துள்ளது. வங்கியில் ஆழமாக வேரூன்றிய சுற்றுச்சூழல், சமூகம் மற்றும் ஆளுமை (ESG) கோட்பாடுகளின் வெளிப்பாடாகவே இந்த வெற்றி அமைந்துள்ளது. 

பொருளாதார மீட்சி காணப்பட்ட ஒரு ஆண்டில், தனது அளப்பரிய பரிமாணம், இலாபத்தன்மை மற்றும் நிதித்துறைசார் தாக்கம் ஆகியவற்றை ஒன்றிணைத்துச் செயற்படும் வங்கியின் திறனைச் சுட்டிக்காட்டிய யூரோமனி, நோக்கமறிந்த ESG அர்ப்பணிப்புகள் வங்கியின் நிதிசார் நிலையை வலுவாக இயக்குகின்றன என்பதை உறுதிப்படுத்தியுள்ளது. 

இவ்வங்கீகாரத்தை மெய்ப்பிக்கும் வகையில், வங்கியின் கடன் வழங்கல்கள் 2.028 ட்ரில்லியன் ரூபாயைக் கடந்துள்ளதுடன், அதன் மொத்த சொத்துக்கள் 16.8% ஆல் வளர்ச்சியடைந்து விதிவிலக்கான சந்தைத் தலைமையை வெளிப்படுத்தியுள்ளது. மேலும், ESG அடிப்படையிலான செயல்பாடுகள் முதலீட்டாளர்களின் நம்பிக்கையைத் தொடர்ச்சியாக வலுப்படுத்தியதன் மூலம், 1 பில்லியன் அமெரிக்க டொலருக்கும் அதிகமான சந்தை மூலதனமாக்கலை எட்டிய இலங்கையின் முதலாவது வங்கி என்ற பெருமையையும் கொமர்ஷல் வங்கி பெற்றுள்ளது. 

டிஜிட்டல் கண்டுபிடிப்புகளில் முன்னணியில் திகழும் இவ்வங்கி, இலங்கையின் முதலாவது Google Pay சேவை மற்றும் AI அடிப்படையிலான SME கடன் மதிப்பீட்டு முறைமை (AI-powered SME credit underwriting) ஆகியவற்றை அறிமுகப்படுத்தியதுடன், துபாயின் DIFC இல் பிரதிநிதித்துவ அலுவலகம் ஒன்றை அமைத்து சர்வதேச ரீதியிலும் தனது தடத்தைப் பதித்துள்ளது. சிறு மற்றும் நடுத்தர தொழில்முயற்சி (SME) நிதியளிப்பு, சொத்துக்களின் தரம் மற்றும் செயல்பாட்டுத் திறன் ஆகியவற்றில் வங்கியின் முன்னணி நிலை, அதன் ESG முதன்மை உத்தி யின் வெற்றியை மேலும் உறுதிப்படுத்தியுள்ளது. 

சுற்றுச்சூழல் மற்றும் பொறுப்புணர்வமிக்க வங்கிச் சேவைக்கான கொமர்ஷல் வங்கியின் விரிவான மற்றும் ஆழமான அணுகுமுறையை அங்கீகரிக்கும் வகையில், இலங்கையின் சிறந்த ESG வங்கி க்கான விருது வழங்கப்பட்டுள்ளது. 

புதுப்பிக்கத்தக்க ஆற்றல், பசுமைக் கட்டிடங்கள் மற்றும் நிலைபெறுதகு போக்குவரத்துத் திட்டங்களுக்கு நிதியளிப்பதற்காக, இலங்கையின் மிகப்பெரிய பசுமைப் பிணைப்பத்திரமான (Green Bond) 15 பில்லியன் ரூபாய் மதிப்பிலான பிணைப்பத்திரத்தை வெளியிட்டமை உட்பட, பசுமை நிதியியலில் வங்கியின் தலைமைத்துவத்தை யூரோமனி பாராட்டியுள்ளது. 

வங்கியின் நிதிச் சேர்க்கை (Financial Inclusion), SME அபிவிருத்தி மற்றும் கிராமிய சமூகங்களைச் சென்றடையும் திட்டங்கள் ஆகியவை அதன் ESG தகுதிகளையும் நிறுவன வலிமையையும் மேலும் பலப்படுத்துகின்றன. SME கடன் வழங்கலில் 20% சந்தைப் பங்கைக் கொண்டுள்ள இவ்வங்கி, 2025 ஆம் ஆண்டில் இத்துறைக்கு 335 பில்லியன் ரூபாய்க்கும் அதிகமான தொகையை வழங்கியுள்ளது. 

அத்துடன், மகளிரை வலுவூட்டுவதிலும் உள்ளடக்கிய வங்கிச் சேவையிலும் தீவிர கவனம் செலுத்தும் வங்கி, தனது அணகி வர்த்தக நாமத்தின் கீழ் சிறப்புத் தயாரிப்புகளை வழங்குவதுடன், நிதி அறிவுறுத்தல், திறன் மேம்பாடு மற்றும் சுகாதாரத் திட்டங்கள் மூலம் ஆயிரக்கணக்கான பெண்களுக்கு ஆதரவளித்து வருகின்றது. கல்வி, சுகாதாரம், காலநிலைச் செயல்பாடு மற்றும் பேரிடர் நிவாரணம் ஆகியவற்றை உள்ளடக்கிய நிறுவன சமூகப் பொறுப்புணர்வு (CSR), சுற்றாடல் பாதுகாப்பு மற்றும் சமூக மேம்பாட்டு முதலீடுகளிலும் வங்கி அதிக கவனம் செலுத்தி வருகின்றது. குறிப்பாக, வங்கியின் Trees for Tomorrow காடழிப்பு எதிர்ப்புத் திட்டத்தின் கீழ் 2025 ஆம் ஆண்டில் 12,500 க்கும் மேற்பட்ட மரங்கள் நடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

கொமர்ஷல் வங்கியானது, இலங்கையில் அமெரிக்க டொலர் 1 பில்லியனுக்கும் அதிகமான சந்தை மூலதனத்தைக் கொண்ட முதலாவது வங்கியாகவும், ஐக்கிய இராச்சியத்தின் மதிப்பிற்குரிய The Banker சஞ்சிகையால் வெளியிடப்பட்ட 2026 ஆம் ஆண்டிற்கான Top 1000 World Banks தரவரிசையில், முதலிடம் பெற்ற இலங்கையின் வங்கியாகவும் திகழ்கின்றது. கொமர்ஷல் வங்கியானது, இலங்கை வங்கித் துறையில் அதிக சந்தை மூலதனத்தைக் கொண்டுள்ளதுடன், மிகப்பெரிய தனியார் துறை கடன் வழங்குநராகவும், SME துறைக்கு மிகப்பெரிய கடன் வழங்குநராகவும் உள்ளது. 

Business Today இதழின் Top 40 தரவரிசையில் முதலிடம் பெற்றுள்ள கொமர்ஷல் வங்கியானது, இலங்கையில் மிகவும் மதிப்பிற்குரிய வங்கியாக அங்கீகரிக்கப்பட்டுள்ளதுடன், அதிக விருதுகளை வென்ற வங்கியாகவும் திகழ்கின்றது. மேலும், டிஜிட்டல் புத்தாக்கங்களில் முன்னணியும் வகிக்கும் கொமர்ஷல் வங்கியானது, இலங்கையின் முதலாவது 100%  கார்பன்-நடுநிலை பேணும் வங்கியுமாகும். 

கொமர்ஷல் வங்கியானது நாடு முழுவதும் தந்திரோபாயரீதியாக அமைக்கப்பட்ட கிளைகள் மற்றும் தானியங்கி இயந்திரங்களின் வலையமைப்பைச் செயற்படுத்திவருகின்றது. மேலும், பங்களாதேஷில் 20 கிளைகள், மாலைதீவில் பெரும்பான்மையான பங்குகளைக் கொண்ட ஒரு முழுமையான Tier I வங்கி, மியான்மாரில் ஒரு நுண்நிதி நிறுவனம் என சர்வதேச ரீதியில் பரந்தளவில் தடம் பதித்த இலங்கையின் வங்கியாகத் தன்னை நிலைநிறுத்தியுள்ளது. துபாய் சர்வதேச நிதியியல் மையத்தில் (DIFC)  ஒரு பிரதிநிதி அலுவலகத்தை நிறுவுவதற்கு துபாய் சர்வதேச நிதியியல் சேவைகள் அதிகாரசபையிடமிருந்து அனுமதிபெற்றதுடன் இவ் மைல்கல்லை எட்டிய இலங்கையின் முதல் வங்கியாகத் தன்னைப் பதிவுசெய்துள்ளது. மேலும்,வங்கியின் முழுமையான உரித்துடைய துணை நிறுவனங்களான CBC Finance Ltd மற்றும் Commercial Insurance Brokers (Pvt) Limited ஆகியவையும் தங்கள் சொந்த கிளை வலையமைப்புகள் மூலம் பல்வேறு நிதிச் சேவைகளை வழங்குகின்றன.

Disclaimer: All the comments will be moderated by the AD editorial. Abstain from posting comments that are obscene, defamatory or slanderous. Please avoid outside hyperlinks inside the comment and avoid typing all capitalized comments. Help us delete comments that do not follow these guidelines by flagging them (mouse over a comment and click the flag icon on the right side). Do use these forums to voice your opinions and create healthy discourse.

Comments

0
Comments are disabled

Note: Due to legal constraints, the Ada Derana Editorial team has taken a decision to disable comments on all articles concerning ongoing court procedures.


MOST READ

காணொளி
அனோஜனை விடுதலை செய்யுமாறு கோரி போராட்டம்!

அனோஜனை விடுதலை செய்யுமாறு கோரி போராட்டம்!

நீதித்துறை இன்று சுதந்திரமாக செயல்படுகிறது!

நீதித்துறை இன்று சுதந்திரமாக செயல்படுகிறது!

அனோஜனைக் காப்பாற்றக் குரல்கொடுக்கும் யாழ்ப்பாணம்!

அனோஜனைக் காப்பாற்றக் குரல்கொடுக்கும் யாழ்ப்பாணம்!

லிந்துலையில் குளவி தாக்கி ஒருவர் பலி!

லிந்துலையில் குளவி தாக்கி ஒருவர் பலி!

அனோஜனின் குடும்பத்தினரை சந்தித்த ஜனாதிபதி!

அனோஜனின் குடும்பத்தினரை சந்தித்த ஜனாதிபதி!

இன்னொரு உயிரை இழக்கத் தயாரில்லை!

இன்னொரு உயிரை இழக்கத் தயாரில்லை!

மகனை மன்னித்து விடுதலை செய்யுங்கள்!

மகனை மன்னித்து விடுதலை செய்யுங்கள்!

பாடசாலை நோக்கிய மாணவர்களின் படையெடுப்பு!

பாடசாலை நோக்கிய மாணவர்களின் படையெடுப்பு!

சாவகச்சேரியில் பட்டப்பகலில் இடம்பெற்ற துணிகர திருட்டு!

சாவகச்சேரியில் பட்டப்பகலில் இடம்பெற்ற துணிகர திருட்டு!

யாழில் பட்டதாரிகள் நூதன போராட்டம்!

யாழில் பட்டதாரிகள் நூதன போராட்டம்!

Mobitel 1278