Header Logo
Vallibel FD
Selan Bank
நிகழ்வுகள்
கௌரவிப்பு!

Sep 22, 2026 - 05:37 PM

கௌரவிப்பு!
Mobitel Inner 1278

அகில இலங்கை தேசிய மட்ட தமிழ்மொழித்தினப் போட்டி 2026 மற்றும் அகில இலங்கைப் பாடசாலைகளுக்கு இடையிலான தேசியமட்ட விளையாட்டுப் போட்டி போன்றவற்றில் கலந்துகொண்ட யாழ். வட்டு இந்துக் கல்லூரி மாணவர்கள் நான்கு பதக்கங்களை தம்வசம் சுவீகரித்துள்ளனர். 

கடந்த 19 ஆம் திகதி மற்றும் 20 ஆம் திகதி ஆகிய இரு தினங்கள் கொழும்பு, பம்பலப்பிட்டி இந்துக் கல்லூரியில் அகில இலங்கை தேசிய மட்ட தமிழ்மொழித்தினப் போட்டியும், பொலன்னறுவை றோயல் கல்லூரியில் 40 ஆவது தேசிய விளையாட்டுப் போட்டியும் இடம்பெற்றது. குறித்த போட்டிகளில் கலந்துகொண்ட மாணவர்களே நான்கு பதக்கங்களை தம்வசம் சுவீகரித்துக் கொண்டுள்ளனர். 

அகில இலங்கை தேசிய மட்ட தமிழ்மொழித்தினப் போட்டி 2026 இல் அறிவிப்பாளர் போட்டியில் அருந்தவன் சரண்யா, இரண்டாம் இடத்தை பெற்று வெள்ளிப் பதக்கத்தையும் தேசிய மட்ட விவாதப் போட்டியில் மூன்றாம் இடத்தை அ.சரணியா, ஆ.றுஜிதா, ச.ஷைந்தவி ஆகியோர் பெற்று வெண்கல பதக்கத்தையும் சுவீகரித்துக் கொண்டுள்ளனர். 

இதேவேளை, அகில இலங்கைப் பாடசாலைகளுக்கு இடையிலான தேசியமட்ட விளையாட்டுப் போட்டியில் பளுதூக்கல் நிகழ்வில் 17 வயது ஆண்கள் பிரிவில் 96 கிலோ கிராம் எடையில் அ.அற்புதன் இரண்டாம் இடத்தினைப் பெற்று வெள்ளிப் பதக்கத்தையும், 17 வயது பெண்கள் பிரிவில் 71 கிலோ கிராம் இடையில் கே.சாத்விகா மூன்றாவது இடத்தை பெற்று வெண்கல பதக்கத்தையும் சுவீகரித்துக் கொண்டுள்ளனர். 

பதக்கங்களை பெற்றுக் கொண்டுள்ள மாணவர்களுக்கான கௌரவிப்பு நிகழ்வு இன்று (22) யாழ்.வாட்டு இந்து கல்லூரி மைதான திறந்தவெளி அரங்கில் முன்னெடுக்கப்பட்டிருந்தது. 

கல்லூரியின் அதிபர் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் கல்லூரியின் பழைய மாணவர்கள் வெற்றி பெற்ற மாணவர்களுக்கான பதக்கங்களை வழங்கி வைத்ததோடு தேசிய மட்ட போட்டியில் பெற்றுக்கொண்ட பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்கள் என்பவற்றை கல்லூரியின் அதிபர், பிரதி அதிபர் ஆகியோரினால் மாணவர்களுக்கு வழங்கி வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Disclaimer: All the comments will be moderated by the AD editorial. Abstain from posting comments that are obscene, defamatory or slanderous. Please avoid outside hyperlinks inside the comment and avoid typing all capitalized comments. Help us delete comments that do not follow these guidelines by flagging them (mouse over a comment and click the flag icon on the right side). Do use these forums to voice your opinions and create healthy discourse.

Comments

0
Comments are disabled

Note: Due to legal constraints, the Ada Derana Editorial team has taken a decision to disable comments on all articles concerning ongoing court procedures.


MOST READ

காணொளி
இராஜதந்திர ரீதியிலான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்!

இராஜதந்திர ரீதியிலான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்!

அனோஜனின் இந்த நிலையைக் கண்டு நாங்கள் அனைவரும் வேதனையடைகிறோம்!

அனோஜனின் இந்த நிலையைக் கண்டு நாங்கள் அனைவரும் வேதனையடைகிறோம்!

பாராளுமன்றத்தில் கோடீஸ்வரன் விடுத்த கோரிக்கை!

பாராளுமன்றத்தில் கோடீஸ்வரன் விடுத்த கோரிக்கை!

அனோஜனின் வீட்டிற்கு பத்தரமுல்லே சீலரத்ன தேரர் விஜயம்!

அனோஜனின் வீட்டிற்கு பத்தரமுல்லே சீலரத்ன தேரர் விஜயம்!

அனோஜனை காப்பற்றுவதே எமது இலக்கு!

அனோஜனை காப்பற்றுவதே எமது இலக்கு!

அனோஜனை விடுதலை செய்யுமாறு கோரி போராட்டம்!

அனோஜனை விடுதலை செய்யுமாறு கோரி போராட்டம்!

நீதித்துறை இன்று சுதந்திரமாக செயல்படுகிறது!

நீதித்துறை இன்று சுதந்திரமாக செயல்படுகிறது!

அனோஜனைக் காப்பாற்றக் குரல்கொடுக்கும் யாழ்ப்பாணம்!

அனோஜனைக் காப்பாற்றக் குரல்கொடுக்கும் யாழ்ப்பாணம்!

லிந்துலையில் குளவி தாக்கி ஒருவர் பலி!

லிந்துலையில் குளவி தாக்கி ஒருவர் பலி!

அனோஜனின் குடும்பத்தினரை சந்தித்த ஜனாதிபதி!

அனோஜனின் குடும்பத்தினரை சந்தித்த ஜனாதிபதி!

Mobitel 1278