Header Logo
Vallibel FD
Selan Bank
செய்திகள்
இலங்கைக்கு சர்வதேச நாணய நிதியம் வைத்த கோரிக்கை

Sep 23, 2026 - 11:06 AM

இலங்கைக்கு சர்வதேச நாணய நிதியம் வைத்த கோரிக்கை
Mobitel Inner 1278

மத்திய கிழக்கில் நிலவும் போர் சூழல், உலகளாவிய வர்த்தகக் கொள்கைகளில் நிலவும் நிச்சயமற்ற தன்மை மற்றும் எல் நினோ (El Niño) தாக்கத்தின் விளைவாக இலங்கை தொடர்ந்து பொருளாதார அபாயங்களை எதிர்நோக்கி வருவதால், சீரான பொருளாதாரக் கொள்கைகளைப் பேணுமாறும் கட்டமைப்புச் சீர்திருத்தங்களை விரைவுபடுத்துமாறும் சர்வதேச நாணய நிதியம் கோரிக்கை விடுத்துள்ளது.

 

எவான் பாபஜார்ஜியோ தலைமையிலான IMF குழுவொன்று, 2026 செப்டம்பர் 10 முதல் 23 வரை இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டு, சமீபத்திய மேக்ரோ பொருளாதாரம் முன்னேற்றங்கள், நீடிக்கப்பட்ட நிதியமைப்பின் (EFF) கீழ் அடைந்துள்ள முன்னேற்றம் மற்றும் 2026 ஆம் ஆண்டிற்கான கொள்கை முன்னுரிமைகள் குறித்து மதிப்பாய்வு செய்தது.

 

இந்த விஜயத்தின் முடிவில் அறிக்கையொன்றை வெளியிட்ட பாபஜார்ஜியோ, தொடர்ச்சியான பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியிலும் இலங்கையின் பொருளாதாரம் உறுதியுடன் இயங்கி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். 

 

மேலும், 2026 ஆம் ஆண்டின் இரண்டாவது காலாண்டில் நாட்டின் பொருளாதாரம் 4.2% வளர்ச்சியடைந்துள்ளதுடன், இது தொடர்ந்து 11 காலாண்டுகளாகப் பதிவு செய்யப்பட்ட வலுவான வளர்ச்சியைப் பிரதிபலிக்கிறது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

 

இருப்பினும், உலகளாவிய எரிபொருள் விலை உயர்வின் காரணமாக ஓகஸ்ட் மாதத்தில் பணவீக்கம் 8% ஆக அதிகரித்துள்ளது.

 

இருந்தபோதிலும், பணவீக்க எதிர்பார்ப்புகள் ஓரளவுக்கு நிலைப்படுத்தப்பட்டுள்ளதாகவும், ஓகஸ்ட் மாத இறுதிக்குள் நாட்டின் உத்தியோகபூர்வ வெளிநாட்டு கையிருப்பு 6.9 பில்லியன் அமெரிக்க டொலர்களாக உயர்ந்துள்ளதாகவும் IMF சுட்டிக்காட்டியுள்ளது.

 

அத்துடன், இலங்கையின் வங்கிகள் வலுவான மூலதனத்துடனும் இலாபகரமாகவும் இயங்கி வருவதாகவும், 2026 ஆம் ஆண்டின் முதற்பாதியில் நிதிச் செயல்பாடு வலுவாக இருந்ததாகவும், கடன் மறுசீரமைப்புப் பணிகள் பெரும்பாலும் நிறைவடைந்துள்ளதாகவும் IMF தெரிவித்துள்ளது.

Disclaimer: All the comments will be moderated by the AD editorial. Abstain from posting comments that are obscene, defamatory or slanderous. Please avoid outside hyperlinks inside the comment and avoid typing all capitalized comments. Help us delete comments that do not follow these guidelines by flagging them (mouse over a comment and click the flag icon on the right side). Do use these forums to voice your opinions and create healthy discourse.

Comments

0
Comments are disabled

Note: Due to legal constraints, the Ada Derana Editorial team has taken a decision to disable comments on all articles concerning ongoing court procedures.


MOST READ

காணொளி
மயிலத்தமடு - மாதவனை பற்றி பேசி பேசி களைத்துவிட்டோம்!

மயிலத்தமடு - மாதவனை பற்றி பேசி பேசி களைத்துவிட்டோம்!

அடிக்கடி மின்தடை ஏற்படுவதற்கான காரணம் என்ன?

அடிக்கடி மின்தடை ஏற்படுவதற்கான காரணம் என்ன?

800 இற்கும் மேற்பட்ட மக்களின் பாதுகாப்பு கேள்விக்குறி!

800 இற்கும் மேற்பட்ட மக்களின் பாதுகாப்பு கேள்விக்குறி!

இராஜதந்திர ரீதியிலான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்!

இராஜதந்திர ரீதியிலான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்!

அனோஜனின் இந்த நிலையைக் கண்டு நாங்கள் அனைவரும் வேதனையடைகிறோம்!

அனோஜனின் இந்த நிலையைக் கண்டு நாங்கள் அனைவரும் வேதனையடைகிறோம்!

பாராளுமன்றத்தில் கோடீஸ்வரன் விடுத்த கோரிக்கை!

பாராளுமன்றத்தில் கோடீஸ்வரன் விடுத்த கோரிக்கை!

அனோஜனின் வீட்டிற்கு பத்தரமுல்லே சீலரத்ன தேரர் விஜயம்!

அனோஜனின் வீட்டிற்கு பத்தரமுல்லே சீலரத்ன தேரர் விஜயம்!

அனோஜனை காப்பற்றுவதே எமது இலக்கு!

அனோஜனை காப்பற்றுவதே எமது இலக்கு!

அனோஜனை விடுதலை செய்யுமாறு கோரி போராட்டம்!

அனோஜனை விடுதலை செய்யுமாறு கோரி போராட்டம்!

நீதித்துறை இன்று சுதந்திரமாக செயல்படுகிறது!

நீதித்துறை இன்று சுதந்திரமாக செயல்படுகிறது!

Mobitel 1278