Sep 23, 2026 - 12:08 PM

சங்கடமான பாதாள உலகக் குற்றவாளியான நந்துன் சிந்தக விக்ரமரத்ன என்ற 'ஹரக் கட்டா' மற்றும் மந்தினு பத்மசிறி என்ற'கெஹெல்பத்தர பத்மே' ஆகியோருக்கு இடையே ஏற்பட்ட மோதல் சம்பவம் தொடர்பாக சிறைச்சாலைகள் திணைக்களம் சிறப்பு விசாரணையையொன்றை ஆரம்பித்துள்ளது.
குறித்த மோதல் சம்பவம் குறித்து விசாரணை நடத்துவதற்காக உதவிச் சிறைச்சாலை கண்காணிப்பாளர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளதாக அத்திணைக்களம் தெரிவித்துள்ளது.
வெலிசர சிறைச்சாலையில் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள 'ஹரக் கட்டா' மற்றும் 'கெஹெல்பத்தர பத்மே' ஆகியோருக்கு இடையே நேற்று (22) இரவளவில் மோதல் ஏற்பட்டுள்ளதுடன், இதில் காயமடைந்த 'கெஹெல்பத்தர பத்மே' வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
அவர் தற்போது வெலிசர சிறைச்சாலை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக சிறைச்சாலைகள் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.





























