Header Logo
Vallibel FD
Selan Bank
வணிகம்
உடனடி ஊடக வெளியீட்டிற்காக, கொழும்பு, இலங்கை Pay&Go நிறுவனம் செஜயா மைக்ரோ கிரெடிட் நிறுவனத்துடன் இணைந்து கடன் மீள்செலுத்தலை எளிதாக்குகிறது

Sep 23, 2026 - 12:23 PM

உடனடி ஊடக வெளியீட்டிற்காக, கொழும்பு, இலங்கை Pay&Go நிறுவனம் செஜயா மைக்ரோ கிரெடிட் நிறுவனத்துடன் இணைந்து கடன் மீள்செலுத்தலை எளிதாக்குகிறது
Mobitel Inner 1278

இப்பங்குடமையானது, செஜயாவின் நுண் தொழில்முனைவோர் வாடிக்கையாளர்கள் Pay&Go இன் Kiosk இயந்திரங்கள், கையடக்கச் செயலி (App) மற்றும் POS வலையமைப்பு ஆகியவற்றின் ஊடாக தங்களது கடன்களை மீளச் செலுத்துவதற்கு வழிவகுக்கிறது. 

Pay&Go நிறுவனத்தை இயக்கும் MegaPay (Pvt) Ltd, ஜப்பானின் Gojo & Company Inc. இன் முழுமையான துணை நிறுவனமும், நாடு முழுவதும் 55க்கும் மேற்பட்ட கிளைகள் மூலம் சேவையாற்றி வரும் உரிமம் பெற்ற நுண் நிதி நிறுவனமான செஜயா மைக்ரோ கிரெடிட் நிறுவனத்துடன் பங்குடமையை ஏற்படுத்தியுள்ளது. 

செஜயாவின் வாடிக்கையாளர்கள் இனி Pay&Go கையடக்கச் செயலி, நாடு முழுவதும் பரந்துள்ள 1,000க்கும் மேற்பட்ட Kiosk இயந்திரங்கள் அல்லது நாடு முழுவதும் உள்ள சில்லறை விற்பனை நிலையங்களில் கிடைக்கப்பெறும் Pay&Go POS இயந்திரங்கள் ஊடாக தங்களது கடன்களை மீளச் செலுத்த முடியும். 

வங்கிக் கிளைகளுக்கு நேரில் செல்ல வேண்டிய அவசியமின்றி, 24/7 மணிநேரமும் கட்டணங்களைச் செலுத்த முடிவதுடன், உடனடி டிஜிட்டல் பற்றுச்சீட்டுகள் மற்றும் கொடுப்பனவு உறுதிப்படுத்தல்களையும் வாடிக்கையாளர்கள் பெற்றுக்கொள்ள முடியும். “ஒவ்வொரு இலங்கையருக்கும் கொடுப்பனவுச் சேவைகளை இலகுவில் அணுகக்கூடியதாக மாற்றுவது எமது இலக்காகும். அந்த இலக்கை நோக்கிய பயணத்தில் இப்பங்குடமையானது மேலும் ஒரு முக்கிய மைல்கல்லாகும். செஜயா நிறுவனத்துடன் இணைந்து, இந்த வசதியான சேவையை மிகவும் அவசியமாகத் தேவைப்படுபவர்களின் கரங்களில் நேரடியாகக் கொண்டு சேர்க்கின்றோம்.” 

— MegaPay (Pvt) Ltd இன் பொதுப் பணிப்பாளர் திரு. வர்தான் அஸ்லிபெக்யான் செஜயாவிடம் கடன் பெற்றுள்ளவர்களில் பெரும்பாலானோர் சில்லறைக் கடைகள், சேவை நிலையங்கள் மற்றும் ஏனைய சிறு தொழில்களை நடத்தும் சுயதொழில்முனைவோராக உள்ளனர். 

“மீள்செலுத்தி வளர்வோம்” (Repay & Grow) 

“மீள்செலுத்தி வளர்வோம்” (“Repay & Grow”) எனும் புதிய முன்முயற்சியின் ஊடாக, இவ்வாடிக்கையாளர்களுக்கு Pay&Go POS தீர்வுகளை விரிவாக்குவதற்கான வழிகளை இரு நிறுவனங்களும் ஆராய்ந்து வருகின்றன. 

இத்திட்டமானது, செஜயா கடன் பெறுநர்கள் தங்களது சொந்தக் கடைகளிலேயே அட்டை (Card) மற்றும் பட்டியல் கட்டணக் கொடுப்பனவுகளை ஏற்றுக்கொள்ள வழிவகுப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இத்திட்டம் தொடர்பான மேலதிக விவரங்கள் முன்னெடுக்கப்படும் போது அறிவிக்கப்படும். 

இது தொடர்பாக கருத்துத் தெரிவித்த செஜயா மைக்ரோ கிரெடிட் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி திரு. ரிஸாந்த் பிரான்சிஸ் கூறுகையில்: 

“எமது வாடிக்கையாளர்கள் அவர்களின் வாழ்க்கை முறைக்கேற்ப செயற்படும் நிதிச் சேவைகளுக்கே உரித்தானவர்கள்; மாறாக, நிதிச் சேவைகளுக்கு ஏற்ப அவர்களின் வாழ்க்கை முறை மாறிவிடுவது நன்றன்று. அதனை Pay&Go இன்று சாத்தியமாக்கியுள்ளது.” 

கொடுப்பனவுத் தொழில்நுட்பம் ஊடாக பணமில்லாப் பரிவர்த்தனைகளை (Cashless Transactions) அதிகரித்தல், நிதியியல் சார்ந்த அறிவை மேம்படுத்துதல் மற்றும் பொருளாதார வலுவூட்டலுக்கு ஆதரவளித்தல் ஆகியவற்றில் கூட்டு அவதானம் செலுத்தி, நாடு முழுவதும் டிஜிட்டல் கொடுப்பனவு ஏற்றுக்கொள்ளலை விரிவாக்குவதற்கான திட்டங்கள் குறித்தும் இரு நிறுவனங்களும் கலந்துரையாடின. 

செஜயா மைக்ரோ கிரெடிட் நிறுவனம் 2015 ஆம் ஆண்டு முதல் “எவரையும் பின்தங்க விடக்கூடாது” (“Leave No One Behind”) எனும் நல்வோக்குடன் இயங்கி வருவதுடன், உள்ளடக்கிய நிதியியல் சேவைகள் ஊடாகக் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்கள் மற்றும் நுண் தொழில்முனைவோருக்கு ஆதரவளித்து வருகின்றது. Pay&Go இன் Kiosk வலையமைப்பு, கையடக்கச் செயலி மற்றும் POS உள்கட்டமைப்பு ஆகியவை டிஜிட்டல் கொடுப்பனவுச் சேவைகளைத் தேவையான சமூகங்களுக்கு அருகாமையில் கொண்டு சேர்ப்பதன் மூலம் அந்நோக்கை மேலும் விரிவுபடுத்துகின்றன. 

Pay Go பற்றி 

Pay Go என்பது இலங்கையின் முன்னணி கொடுப்பனவுத் தொழில்நுட்பத் தளமாகும். இது தனது கையடக்கச் செயலி, POS வலையமைப்பு, Kiosk இயந்திரங்கள் மற்றும் இணையச் சேவைகள் ஊடாக ஒருங்கிணைந்த டிஜிட்டல் மற்றும் நேரடி பணப்பரிவர்த்தனைத் தீர்வுகளை வழங்கி வருகின்றது. 

செஜயா மைக்ரோ கிரெடிட் நிறுவனம் பற்றி 

செஜயா மைக்ரோ கிரெடிட் நிறுவனம் என்பது 2014 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட உரிமம் பெற்ற நுண் கடன் நிறுவனமாகும். இது ஜப்பானின் Gojo & Company Inc. இன் முழுமையான துணை நிறுவனமாகும். 

செஜயா, நிதி அணுகலினூடான சமூகப் பொறுப்புணர்வை முன்னிலையாகக் கொண்டு, இலங்கை முழுவதிலும் உள்ள குறைந்த வருமானம் பெறும் பெண்கள் மற்றும் குடும்பங்களுக்கு உள்ளடக்கிய நிதியியல் சேவைகளை வழங்கி வருகின்றது. “எவரையும் பின்தங்க விடக்கூடாது” என்ற நல்வோக்கின் கீழ் இயங்கும் இந்நிறுவனம், சமூக மூலதனத்தைக் கட்டியெழுப்புதல், வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துதல் மற்றும் வாடிக்கையாளர்களின் வறுமையைக் குறைத்தல் ஆகியவற்றுக்காகப் பணியாற்றி வருகின்றது.

Disclaimer: All the comments will be moderated by the AD editorial. Abstain from posting comments that are obscene, defamatory or slanderous. Please avoid outside hyperlinks inside the comment and avoid typing all capitalized comments. Help us delete comments that do not follow these guidelines by flagging them (mouse over a comment and click the flag icon on the right side). Do use these forums to voice your opinions and create healthy discourse.

Comments

0
Comments are disabled

Note: Due to legal constraints, the Ada Derana Editorial team has taken a decision to disable comments on all articles concerning ongoing court procedures.


MOST READ

காணொளி
சண்டியன் இல்லாத இடத்தில் நொண்டியனும் சண்டியனாம்!

சண்டியன் இல்லாத இடத்தில் நொண்டியனும் சண்டியனாம்!

மயிலத்தமடு - மாதவனை பற்றி பேசி பேசி களைத்துவிட்டோம்!

மயிலத்தமடு - மாதவனை பற்றி பேசி பேசி களைத்துவிட்டோம்!

அடிக்கடி மின்தடை ஏற்படுவதற்கான காரணம் என்ன?

அடிக்கடி மின்தடை ஏற்படுவதற்கான காரணம் என்ன?

800 இற்கும் மேற்பட்ட மக்களின் பாதுகாப்பு கேள்விக்குறி!

800 இற்கும் மேற்பட்ட மக்களின் பாதுகாப்பு கேள்விக்குறி!

இராஜதந்திர ரீதியிலான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்!

இராஜதந்திர ரீதியிலான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்!

அனோஜனின் இந்த நிலையைக் கண்டு நாங்கள் அனைவரும் வேதனையடைகிறோம்!

அனோஜனின் இந்த நிலையைக் கண்டு நாங்கள் அனைவரும் வேதனையடைகிறோம்!

பாராளுமன்றத்தில் கோடீஸ்வரன் விடுத்த கோரிக்கை!

பாராளுமன்றத்தில் கோடீஸ்வரன் விடுத்த கோரிக்கை!

அனோஜனின் வீட்டிற்கு பத்தரமுல்லே சீலரத்ன தேரர் விஜயம்!

அனோஜனின் வீட்டிற்கு பத்தரமுல்லே சீலரத்ன தேரர் விஜயம்!

அனோஜனை காப்பற்றுவதே எமது இலக்கு!

அனோஜனை காப்பற்றுவதே எமது இலக்கு!

அனோஜனை விடுதலை செய்யுமாறு கோரி போராட்டம்!

அனோஜனை விடுதலை செய்யுமாறு கோரி போராட்டம்!

Mobitel 1278