Header Logo
Vallibel FD
Mogo Academy
Selan Bank
செய்திகள்
22ஆவது திருத்தத்திற்கு எதிராக மனசாட்சிக்கு அமைய வாக்களியுங்கள்!

Sep 24, 2026 - 12:53 PM

 22ஆவது திருத்தத்திற்கு எதிராக மனசாட்சிக்கு அமைய வாக்களியுங்கள்!
Mobitel Inner 1278

தொலைநோக்கற்ற 22 ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம் மீதான பாராளுமன்ற வாக்கெடுப்பின் போது, அதற்கு எதிராகத் தமது மனசாட்சிக்கு அமைவாக வாக்களிக்குமாறு சர்வஜன அதிகாரத்தின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான திலித் ஜயவீர பாராளுமன்ற உறுப்பினர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார். 

அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் கடிதம் ஒன்றினை அனுப்பி வைத்துள்ள அவர், நாட்டின் ஜனநாயக வரலாற்றுப் பக்கங்களில் இடம்பெறக்கூடிய கரும்புள்ளியை அகற்றி, இந்தத் தீர்மானமிக்க தருணத்தில் புத்திசாலித்தனமாகச் செயல்படுவார்கள் என தாம் நம்புவதாகக் குறிப்பிட்டுள்ளார். 

கடிதத்தின் விபரம்: 

''அரசியல் எதிரியாக அன்றி, நமது நாட்டின் எதிர்காலத்தைப் பற்றி எப்போதும் சிந்திக்கும், நாட்டின் ஜனநாயக விழுமியங்களுக்காகக் குரல்கொடுக்கும் ஒரு சகோதர பாராளுமன்ற உறுப்பினராகவே இக்கடிதத்தை உங்களுக்கு அனுப்புகின்றேன். 

இந்தச் சட்டமூலம் அரசியலமைப்பிற்கு இணக்கமானதா இல்லையா என்பதை ஆராய்வதும், அப்படி என்றால் பாராளுமன்றம் இதனைச் சாதாரண பெரும்பான்மையிலா, மூன்றில் இரண்டு பெரும்பான்மையிலா அல்லது சர்வசன வாக்கெடுப்பின் மக்கள் தீர்ப்பின் மூலமா நிறைவேற்ற வேண்டும் என்று தீர்மானிப்பதும் மட்டுமே நீதிமன்றத்தின் வேலையாகும். இந்தத் திருத்தத்தால் நாட்டிற்கும் மக்களுக்கும் நன்மை ஏற்படுமா என்பதை நீதிமன்றம் தீர்மானிப்பதில்லை. உண்மையில் அந்த விவகாரம் உங்கள் மனசாட்சிக்கே விட்டுவிடப்பட்டுள்ளது. 

இன்று ஆளும் கட்சியின் ஆசனங்களில் அமர்ந்திருக்கும் உங்களில் பலர், உங்கள் அரசியல் வாழ்க்கையில் சட்டத்தின் ஆட்சி, ஜனநாயகம் மற்றும் சுயாதீன நீதித்துறைக்காகக் கடுமையாகக் குரல்கொடுத்துள்ளீர்கள். முன்னாள் பிரதம நீதியரசர் கலாநிதி ஷிராணி பண்டாரநாயக்கவிற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு எதிராக உங்களில் பலர் குரல்கொடுத்ததை நான் அறிவேன். சுதந்திரமான நீதித்துறை என்பது ஒரு சுதந்திர நாட்டின் முதுகெலும்பு என்பதை நீங்கள் புரிந்துகொண்டதாலேயே அவ்வாறு செய்தீர்கள் என நான் நம்புகிறேன். 

நீதித்துறை பலவீனமடைம்போது, பலம்பொருந்தியவர்களுக்கு எதிராகச் சாதாரணக் குடிமகனின் கடைசிப் பாதுகாப்பு அரண் இல்லாமற்போகும் என்பதை அக்காலத்தில் நீங்கள் நன்றாக அறிந்திருந்தீர்கள். அந்தப் புரிதலுக்குக் காலாவதியாகும் திகதி இருக்க முடியாது. 

அன்று உங்களுக்குள் இருந்த அந்தப் புரிதல், அதேபோன்றதொரு கொள்கை மீண்டும் ஆபத்தில் இருக்கும் இன்றைய நாளிலும் உங்களுக்குள் உயிர்ப்புடன் இருக்க வேண்டும். 

ஒரு கட்சியின் தீர்மானத்திற்கு ஏற்பக் குறுகிய முறையில் செயல்படுவதற்கு மக்கள் உங்களுக்கு வாக்களிக்கவில்லை. அவர்கள் ஒரு வாக்குறுதிக்காகவே வாக்களித்தார்கள். நீங்கள் வாக்களிக்கும் போது, உங்கள் கட்சியின் கொள்கைவாத வழிகாட்டல்கள் அல்லாது, முன்னரே கூறப்பட்ட வாக்குறுதியே உங்களின் தீர்மானிக்கும் காரணியாக இருக்க வேண்டும் என்பது எனது புரிதலாகும். 

ஒரு அறையில் கூடிய சிறிய குழுவொன்றினால் நீங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டீர்கள் என்று நீங்கள் நினைக்கக் கூடாது; மாறாக உங்கள் தேர்தல் தொகுதியின் சாதாரண வாக்காளர்களாலேயே நீங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டீர்கள் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். 

திருத்தங்கள் வரும், போகும். ஆனால், ஒரு தீர்மானமிக்க தேசியப் பிரச்சினையில் ஒவ்வொரு பாராளுமன்ற உறுப்பினரும் எவ்வாறு வாக்களித்தார்கள் என்பதை வரலாறும் உங்கள் மீது நம்பிக்கை வைத்த மக்களும் நீண்ட காலத்திற்கு நினைவில் வைத்திருப்பார்கள். 

நமது தாய்நாட்டின் ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்காக, இந்தத் தொலைநோக்கற்ற 22 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்திற்கு எதிராக உங்களின் மனசாட்சிப்படி வாக்களிப்பீர்கள் என நான் எதிர்பார்க்கின்றேன். 

நீங்கள் நடைமுறைச் சிக்கலை எதிர்கொண்டால், வாக்கெடுப்பில் கலந்துகொள்வதைத் தவிர்ப்பதற்கு நீங்கள் எடுக்கும் முடிவிற்குக்கூட வரலாறு மிகப்பெரிய மதிப்பைக் கொடுக்கும். 

தாய்நாடு அமைதியாக, ஆனால் நம்பிக்கையுடன் உங்களை எதிர்நோக்கியுள்ளது. 

தாய்நாட்டிற்கு வெற்றி உரித்தாகட்டும். 

சகோதர பாராளுமன்ற உறுப்பினர், 

திலித் ஜயவீர"

Disclaimer: All the comments will be moderated by the AD editorial. Abstain from posting comments that are obscene, defamatory or slanderous. Please avoid outside hyperlinks inside the comment and avoid typing all capitalized comments. Help us delete comments that do not follow these guidelines by flagging them (mouse over a comment and click the flag icon on the right side). Do use these forums to voice your opinions and create healthy discourse.

Comments

0
Comments are disabled

Note: Due to legal constraints, the Ada Derana Editorial team has taken a decision to disable comments on all articles concerning ongoing court procedures.


MOST READ

காணொளி
மலையகத்தில் பலத்த காற்றுடன் கனமழை!

மலையகத்தில் பலத்த காற்றுடன் கனமழை!

விரைவில் தீர்வு!

விரைவில் தீர்வு!

யாழ். மாவட்ட சர்வமத பேரவை உருக்கம்!

யாழ். மாவட்ட சர்வமத பேரவை உருக்கம்!

இது மிகவும் மோசமான செயற்பாடாகும்!

இது மிகவும் மோசமான செயற்பாடாகும்!

ஹபீப் ரிஃபான் பாராளுமன்ற  உறுப்பினராக சத்தியப்பிரமாணம்!

ஹபீப் ரிஃபான் பாராளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணம்!

சலசலப்பை ஏற்படுத்திய அனல் பறக்கும் விவாதம்!

சலசலப்பை ஏற்படுத்திய அனல் பறக்கும் விவாதம்!

எங்களது முழு ஒத்துழைப்பையும் வழங்குவோம்!

எங்களது முழு ஒத்துழைப்பையும் வழங்குவோம்!

நாங்கள் வலியுறுத்த மட்டுமே முடியும், தவிர, தலையிட முடியாது!

நாங்கள் வலியுறுத்த மட்டுமே முடியும், தவிர, தலையிட முடியாது!

அம்புகள் தண்டிக்கப்படும் போது, வில்லும் தண்டிக்கப்பட வேண்டும்!

அம்புகள் தண்டிக்கப்படும் போது, வில்லும் தண்டிக்கப்பட வேண்டும்!

சண்டியன் இல்லாத இடத்தில் நொண்டியனும் சண்டியனாம்!

சண்டியன் இல்லாத இடத்தில் நொண்டியனும் சண்டியனாம்!

Mobitel 1278