Sep 27, 2026 - 02:19 PM

களுத்துறை வாத்துவ பகுதியில் சட்டவிரோத துப்பாக்கியுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
களுத்துறை குற்றத் தடுப்பு விசாரணை பிரிவினருக்குக் கிடைத்த தகவலுக்கு அமைய, நேற்று (26) மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது சந்தேகநபர் கைது செய்யப்பட்டார்.
சந்தேகநபரின் வீட்டைச் சோதனையிட்ட போது, 9 மில்லி மீற்றர் ரவைகளைப் பயன்படுத்தக்கூடிய ரிவோல்வர் (Revolver) வகை துப்பாக்கி ஒன்றும், அதற்குப் பயன்படுத்தப்படும் 02 ரவைகளும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர் ஹபரலகஹலந்த பகுதியைச் சேர்ந்த 31 வயதுடைய நபராவார். அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது, இத்துப்பாக்கியை வேறு ஒரு நபரிடமிருந்து விலைக்கு வாங்கியதாகத் தெரியவந்துள்ளது.
இருப்பினும், இத்துப்பாக்கி எந்த நோக்கத்திற்காக வாங்கப்பட்டது அல்லது குற்றச் செயல்கள் எதற்காவது பயன்படுத்தப்பட்டதா என்பது தொடர்பான தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.
களுத்துறை குற்றத் தடுப்பு விசாரணை பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வரும் அதேவேளை, சந்தேகநபர் பாணதுறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.































