Header Logo
Vallibel FD
Mogo Academy
Selan Bank
செய்திகள்
வடக்கின் 15 பிரதேச செயலகங்கள் கௌரவிப்பு!

Sep 27, 2026 - 02:54 PM

வடக்கின் 15 பிரதேச செயலகங்கள் கௌரவிப்பு!
Mobitel Inner 1278

2025 ஆம் ஆண்டில் சிறந்த முறையில் பணியாற்றிய வட மாகாணப் பிரதேச செயலகங்களை மதிப்பீடு செய்து கௌரவிக்கும் நிகழ்வு, சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன தலைமையில் கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது. 

பொதுமக்களுக்கு மிகவும் திறமையாகவும் விரைவாகவும் சேவைகளை வழங்குவதற்காக ஜனாதிபதி நிதியத்தின் சேவைகளைப் பிரதேச செயலக மட்டம் வரை பரவலாக்கும் வேலைத்திட்டத்தின் கீழ் இந்த மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. 

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார், முல்லைத்தீவு மற்றும் வவுனியா ஆகிய ஐந்து மாவட்டங்களைச் சேர்ந்த பிரதேச செயலகங்களுக்கு இடையில் ஜனாதிபதி நிதியத்தின் விண்ணப்பங்களைப் பெற்றுக்கொள்வது மற்றும் அவற்றுக்குக் விரைவாகப் பதிலளிக்கும் திறனின் அடிப்படையில் ஒவ்வொரு மாவட்டத்திலிருந்தும் 3 பிரதேச செயலகங்கள் வீதம், தேர்ந்தெடுக்கப்பட்ட 15 பிரதேச செயலகங்கள் இவ்வாறு மதிப்பீடு செய்யப்பட்டன. 

அதற்கமைய, யாழ்ப்பாண மாவட்டத்தில் முதலாம் இடத்தை நல்லூர் பிரதேச செயலகமும், இரண்டாம் இடத்தை சாவகச்சேரி பிரதேச செயலகமும், மூன்றாம் இடத்தை வலிகாமம் கிழக்கு பிரதேச செயலகமும் பெற்றுக்கொண்டன. 

கிளிநொச்சி மாவட்டத்தில் முதலாம் இடத்தை கிளிநொச்சி பிரதேச செயலகமும், இரண்டாம் இடத்தை பூநகரி பிரதேச செயலகமும், மூன்றாம் இடத்தை பச்சிலைப்பள்ளி பிரதேச செயலகமும் பெற்றுக்கொண்டன. 

மன்னார் மாவட்டத்தில் முதலாம் இடத்தை நானாட்டான் பிரதேச செயலகமும், இரண்டாம் இடத்தை மன்னார் பிரதேச செயலகமும், மூன்றாம் இடத்தை மாந்தை மேற்கு பிரதேச செயலகமும் பெற்றுக்கொண்டன. 

முல்லைத்தீவு மாவட்டத்தில் முதலாம் இடத்தை கரைதுறைப்பற்று பிரதேச செயலகமும், இரண்டாம் இடத்தை ஒட்டுசுட்டான் பிரதேச செயலகமும், மூன்றாம் இடத்தை மாந்தை கிழக்கு பிரதேச செயலகமும் பெற்றுக்கொண்டன. 

வவுனியா மாவட்டத்தில் முதலாம் இடத்தை வவுனியா பிரதேச செயலகமும், இரண்டாம் இடத்தை வவுனியா வடக்கு பிரதேச செயலகமும், மூன்றாம் இடத்தை வெண்கலச்செட்டிக்குளம் பிரதேச செயலகமும் பெற்றுக்கொண்டன. 

சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன, அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்லத்தம்பி திலகநாதன், எம். ஜெகதீஸ்வரன் மற்றும் ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளரும் ஜனாதிபதி நிதியத்தின் செயலாளருமான ரோஷன் கமகே மற்றும் மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்ட அரச அதிகாரிகள் பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

Disclaimer: All the comments will be moderated by the AD editorial. Abstain from posting comments that are obscene, defamatory or slanderous. Please avoid outside hyperlinks inside the comment and avoid typing all capitalized comments. Help us delete comments that do not follow these guidelines by flagging them (mouse over a comment and click the flag icon on the right side). Do use these forums to voice your opinions and create healthy discourse.

Comments

0
Comments are disabled

Note: Due to legal constraints, the Ada Derana Editorial team has taken a decision to disable comments on all articles concerning ongoing court procedures.


MOST READ

காணொளி
எங்கள் ஆட்சியில் இனவாதம் தலைதூக்கவே இல்லை!

எங்கள் ஆட்சியில் இனவாதம் தலைதூக்கவே இல்லை!

ஒவ்வொரு முன்னேற்றத்திற்குப் பின்னாலும் ஒரு போராட்டம் இருக்கிறது!

ஒவ்வொரு முன்னேற்றத்திற்குப் பின்னாலும் ஒரு போராட்டம் இருக்கிறது!

நீதித்துறை தமிழர்களுக்கு என்ன செய்துள்ளது?

நீதித்துறை தமிழர்களுக்கு என்ன செய்துள்ளது?

உடகந்த தோட்டத்தில் விநாயகர் சிலை உடைப்பு!

உடகந்த தோட்டத்தில் விநாயகர் சிலை உடைப்பு!

நுவரெலியாவில் இடைவிடாது பெய்யும் கனமழை!

நுவரெலியாவில் இடைவிடாது பெய்யும் கனமழை!

எங்களின் சந்தேகம் குறித்து நீங்கள் கவலைப்படத் தேவையில்லை!

எங்களின் சந்தேகம் குறித்து நீங்கள் கவலைப்படத் தேவையில்லை!

மலையகத்தில் தொடரும் கனமழை!

மலையகத்தில் தொடரும் கனமழை!

ஹட்டன் - கொழும்பு வீதி இயல்பு நிலைக்கு திரும்பியது!

ஹட்டன் - கொழும்பு வீதி இயல்பு நிலைக்கு திரும்பியது!

அரசியல் கைதிகளின் வழக்குகள் துரிதப்படுத்தப்படுமா?

அரசியல் கைதிகளின் வழக்குகள் துரிதப்படுத்தப்படுமா?

சிறுவர்களுக்கான அதிதீவிர சிகிச்சை பிரிவு திறப்பு!

சிறுவர்களுக்கான அதிதீவிர சிகிச்சை பிரிவு திறப்பு!

Mobitel 1278