Header Logo
Vallibel FD
Mogo Academy
Selan Bank
வணிகம்
உலக சுற்றுலா தினம் 2026: இலங்கையின் சுற்றுலாத் துறையில் புதிய அத்தியாயத்தை எழுதும் City of Dreams Sri Lanka

Sep 28, 2026 - 03:00 PM

உலக சுற்றுலா தினம் 2026: இலங்கையின் சுற்றுலாத் துறையில் புதிய அத்தியாயத்தை எழுதும் City of Dreams Sri Lanka
Mobitel Inner 1278

தொழில்நுட்பமும் புத்தாக்க கண்டுபிடிப்புகளும் உலகளாவிய சுற்றுலாத் துறையை எவ்வாறு மறுவரையறை செய்கின்றன என்பது குறித்து சர்வதேச அளவில் விவாதிக்கப்பட்டு வரும் நிலையில், சுற்றுலாத் தலங்களை மறுசீரமைப்பது பற்றிய மாறுபட்ட, புதிய கண்ணோட்டத்தை சிட்டி ஆஃப் ட்ரீம்ஸ் ஸ்ரீலங்கா வழங்குகிறது. சுற்றுலாவை மறுவடிவமைப்பு செய்வதற்கான டிஜிட்டல் நிகழ்ச்சி நிரல் மற்றும் செயற்கை நுண்ணறிவு (Digital Agenda and Artificial Intelligence to redesign tourism) என்ற கருப்பொருளின் கீழ் 2026 ஆம் ஆண்டின் உலக சுற்றுலா தினம் கொண்டாடப்படுகிறது. இயற்கை, பாரம்பரியம், கலாச்சாரம் மற்றும் சுகாதாரம் ஆகிய பாரம்பரிய அம்சங்களைத் தாண்டி இலங்கையின் சுற்றுலாத்துறை விரிவடைந்து வரும் சூழலில், கொழும்பின் இதயப் பகுதியில் அமைந்துள்ள இந்த ஒருங்கிணைந்த ரிசோர்ட் ((Integrated Resort) சுற்றுலாத்துறையின் அடுத்த கட்ட வளர்ச்சியைப் பறைசாற்றுகிறது. 

தெற்காசியாவின் முதலாவது மற்றும் மிகப்பெரிய முழுமையான ஒருங்கிணைந்த ரிசோர்ட்டான சிட்டி ஆஃப் ட்ரீம்ஸ் ஸ்ரீலங்கா, ஆடம்பர தங்குமிடம், உணவகங்கள், பொழுதுபோக்கு, வணிக வளாகங்கள், நிகழ்வுகள் மற்றும் கேமிங் வசதிகள் போன்ற அனைத்தையும் ஒரே குடையின் கீழ் கொண்டுவருகிறது. தனித்தனிச் சேவைகளின் தொகுப்பாக மட்டுமன்றி, ஒரு முழுமையான அனுபவச் சூழலை உருவாக்கும் வகையில் இத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், சுற்றுலாப் பயணிகள் தங்குவதற்கும், உணவருந்துவதற்கும், புதிய அனுபவங்களைப் பெறுவதற்கும், பொருட்கள் வாங்குவதற்கும் மற்றும் பொழுதுபோக்கிற்கும் ஏற்ற வகையில் ஒரு முழுமையான சூழல் இங்கு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த முயற்சி வெறும் ரிசோர்ட்டுடன் மட்டும் முடிந்துவிடாமல், ஒட்டுமொத்த சுற்றுலாத் துறைக்கும் புதிய உத்வேகத்தை அளிக்கிறது. இலங்கைக்கே உரித்தான பாரம்பரிய சுற்றுலா அனுபவங்களுக்கு மேலதிகமாக, சுற்றுலாப் பயணிகள் கொழும்பு நகரில் அதிக நாட்களைச் செலவிடுவதற்கான புதிய காரணங்களை இது உருவாக்குகிறது. 

இது தொடர்பில் கருத்து தெரிவித்த சிட்டி ஆஃப் ட்ரீம்ஸ் ஸ்ரீலங்கா நிறுவனத்தின் பொது முகாமையாளர் (ரிசோர்ட்) மைக்கல் ஹபாஷி, “சுற்றுலாத்துறை வேகமாக வளர்ச்சியடைந்து வருகிறது. அதற்கு ஏற்ப சுற்றுலாத் தலங்களும் பரிணமிக்க வேண்டும். எங்களைப் பொறுத்தவரை, கொழும்பிற்கு மற்றொரு கவர்ச்சிகரமான இடத்தை சேர்ப்பது மட்டுமே நோக்கமல்ல, மாறாக கொழும்பு நகரை அனுபவிப்பதற்கான ஒரு புதிய வழியை உருவாக்குவதே இலக்காகும். ஒரு ஒருங்கிணைந்த ரிசோர்ட் என்பது பல்வேறு அனுபவங்கள், பயணிகள், வணிகங்கள் மற்றும் திறமைகளை ஒன்றிணைத்து, தொடர்ந்து வளர்ச்சியடையும் ஒரு சுற்றுலாத் தலத்தை உருவாக்குகிறது,” எனக் குறிப்பிட்டார். 

இந்த மாற்றத்திற்குத் தொழில்நுட்பமே பிரதான உந்துசக்தியாக விளங்குகிறது. நவீன கேமிங் தொழில்நுட்பம் மற்றும் சர்வதேசத் தரம் வாய்ந்த அமைப்புகளை அறிமுகப்படுத்துவது முதல், NÜWA வர்த்தக நாமத்தின் சர்வதேச ஆடம்பர விருந்தோம்பல் சேவையை இலங்கைக்குக் கொண்டுவந்தது வரை தொழில்நுட்பத்தின் பங்கு முக்கியமானது. சினமன் லைஃப் மற்றும் NÜWA ஆகியவற்றில் தொழில்நுட்பம் சார்ந்த சேவைகள் மூலம் விருந்தினர்களுக்கு மிகவும் தடையற்ற மற்றும் தனிப்பயனாக்கப்பட்ட அனுபவம் வழங்கப்படுகிறது. அதேபோன்று, இங்குள்ள அதிநவீன ஒளிக்-ஒலி அமைப்புகள் மற்றும் நிகழ்வு உட்கட்டமைப்புகள் மூலமாகப் பெரிய அளவிலான MICE நிகழ்வுகள், பெரு நிறுவன கூட்டங்கள், பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் மற்றும் சர்வதேச மாநாடுகளைத் தற்கால சர்வதேசத் தரத்தில் நடத்த முடிகிறது. இவை அனைத்தும், தொழில்நுட்பமானது தனிப்பட்ட விருந்தினர்களின் அனுபவத்தையும் தாண்டி, இலங்கையின் பரந்த சுற்றுலாச் சூழலமைப்பின் வளர்ச்சிக்கு எவ்வாறு பங்களிக்கிறது என்பதைத் தெளிவாகக் காட்டுகின்றன. 

இத்தகைய கட்டமைப்பு, சர்வதேச தரம் வாய்ந்த விருந்தோம்பல் மற்றும் ஆடம்பர வாழ்வியல் சேவைகளுடன் இலங்கையின் தனித்துவமான அனுபவங்களும் கைகோர்த்து பயணிப்பதற்கான சிறந்த தளத்தை அமைத்துக் கொடுக்கிறது.எடுத்துக்காட்டாக, சிட்டி ஆஃப் ட்ரீம்ஸ் ஸ்ரீலங்காவில் அமைந்துள்ள The Shoppes வணிக வளாகம், இலங்கையின் முன்னணி ஆடை வடிவமைப்பு, ஆபரணங்கள், சுகாதாரம், உணவு மற்றும் வாழ்க்கை முறை வர்த்தக நாமங்கள் உள்நாட்டு மற்றும் சர்வதேச வாடிக்கையாளர்களைச் சென்றடைய சிறந்த வாய்ப்பை வழங்குகிறது. இதன் மூலம் இலங்கையின் படைப்பாற்றல் மற்றும் பாரம்பரியக் கைவினைத்திறன் ஆகியவை ஒரு நவீன சுற்றுலாச் சூழலில் மிளிர்கின்றன. 

விருந்தினர்களுக்கு வழங்கப்படும் உயர்தர அனுபவங்களுக்குப் பின்னணியில் நிகழும் அறிவு மற்றும் திறமைப் பரிமாற்றமும் அதற்கு நிகரான முக்கியத்துவம் வாய்ந்தது. உள்ளூர் தொழில்முறை வல்லுநர்களையும் சர்வதேச விருந்தோம்பல் நிபுணத்துவத்தையும் ஒன்றாக இணைப்பதன் மூலம், திறன் மேம்பாடு, உலகளாவிய தரநிலைகளுக்கான அறிமுகம் மற்றும் இலங்கை சுற்றுலாத்துறை முழுவதும் தொழில்நுட்ப அறிவைப் பகிர்வதற்கான வாய்ப்புகளை உருவாக்குகிறது. 

இலங்கையின் சுற்றுலாத்துறைக்கான தனித்துவமே அதன் பன்முகத்தன்மையில் தான் எப்போதும் நிலைத்திருக்கிறது. அந்தப் பன்முகத்தன்மையை தற்காலத்திற்கு ஏற்ற புதிய வழிகளில் ஒன்றிணைப்பதே இப்போது நம்முன் இருக்கும் மிகப்பெரிய வாய்ப்பாகும். 

இலங்கை தனது சுற்றுலாச் சேவைகளை மேலும் நவீனமயமாக்கி, பலதரப்பட்ட அனுபவங்களை வழங்கி வரும் சூழலில், சிட்டி ஆஃப் ட்ரீம்ஸ் ஸ்ரீலங்கா அந்தப் பயணத்தில் ஒரு புதிய அத்தியாயத்தைக் குறிக்கிறது. இனி கொழும்பு நகரமானது நாட்டிற்குள் நுழைவதற்கான வெறும் ஒரு கதவாக மட்டுமல்லாமல், அதுவே ஒரு தனித்துவமான சுற்றுலாத் தலமாக உருவெடுக்கிறது. மேலும், இலங்கையின் இயற்கை, கலாச்சாரம் மற்றும் பாரம்பரிய பலங்கள், நவீனத்துவமும் தொடர் வளர்ச்சியும் கொண்ட ஒரு நகரமய அனுபவத்தோடு சந்திக்கும் புள்ளியாகவும் இது அமைகிறது.

Disclaimer: All the comments will be moderated by the AD editorial. Abstain from posting comments that are obscene, defamatory or slanderous. Please avoid outside hyperlinks inside the comment and avoid typing all capitalized comments. Help us delete comments that do not follow these guidelines by flagging them (mouse over a comment and click the flag icon on the right side). Do use these forums to voice your opinions and create healthy discourse.

Comments

0
Comments are disabled

Note: Due to legal constraints, the Ada Derana Editorial team has taken a decision to disable comments on all articles concerning ongoing court procedures.


MOST READ

காணொளி
திட்டமிட்டு குற்றஞ்சாட்டுவதை ஏற்க முடியாது!

திட்டமிட்டு குற்றஞ்சாட்டுவதை ஏற்க முடியாது!

அரசியல் இனி திருட்டுக் குகை அல்ல!

அரசியல் இனி திருட்டுக் குகை அல்ல!

இலங்கை ரசிகர்களுக்கு  சூரி கொடுத்த மாஸ் அதிர்ச்சி!

இலங்கை ரசிகர்களுக்கு சூரி கொடுத்த மாஸ் அதிர்ச்சி!

எங்கள் ஆட்சியில் இனவாதம் தலைதூக்கவே இல்லை!

எங்கள் ஆட்சியில் இனவாதம் தலைதூக்கவே இல்லை!

ஒவ்வொரு முன்னேற்றத்திற்குப் பின்னாலும் ஒரு போராட்டம் இருக்கிறது!

ஒவ்வொரு முன்னேற்றத்திற்குப் பின்னாலும் ஒரு போராட்டம் இருக்கிறது!

நீதித்துறை தமிழர்களுக்கு என்ன செய்துள்ளது?

நீதித்துறை தமிழர்களுக்கு என்ன செய்துள்ளது?

உடகந்த தோட்டத்தில் விநாயகர் சிலை உடைப்பு!

உடகந்த தோட்டத்தில் விநாயகர் சிலை உடைப்பு!

நுவரெலியாவில் இடைவிடாது பெய்யும் கனமழை!

நுவரெலியாவில் இடைவிடாது பெய்யும் கனமழை!

எங்களின் சந்தேகம் குறித்து நீங்கள் கவலைப்படத் தேவையில்லை!

எங்களின் சந்தேகம் குறித்து நீங்கள் கவலைப்படத் தேவையில்லை!

மலையகத்தில் தொடரும் கனமழை!

மலையகத்தில் தொடரும் கனமழை!

Mobitel 1278