Sep 28, 2026 - 03:09 PM

மனிதவளத் தலைமையிலான மாற்றம், மனிதர்கள், பணியிடக் கலாசாரம் மற்றும் வணிகச் செயல்திறனை நிறுவனத்தின் செயல்பாடுகளின் மையமாக நிலைநிறுத்துகிறது
Ideal Motors (Pvt) Ltd நிறுவனம், 2026 ஆம் ஆண்டில் பல மதிப்புமிக்க பணியிட மற்றும் நிறுவன கலாசாரம் தொடர்பான விருதுகளைப் பெற்றதன் மூலம் ஒரு முக்கிய மைல்கல்லை எட்டியுள்ளது. இது இலங்கையின் வாகனத் துறையில் விருப்பத்திற்குரிய பணியிடம் என்ற அதன் நிலையை மேலும் வலுப்படுத்துகிறது.
அண்மைய சாதனைகளில், ‘2026 இலங்கையில் இளம் திறமையாளர்களுக்கான 20 சிறந்த பணியிடங்களில் ஒன்று’ (20 Great Workplaces for Young Talent in Sri Lanka 2026) ஆக Ideal Motors நிறுவனம் கௌரவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், ‘இலங்கையின் சிறந்த பணியிடங்கள் 2026’ (Best Workplaces™ in Sri Lanka 2026) பட்டியலின் சிறிய மற்றும் நடுத்தர நிறுவனப் பிரிவில் முதலிடத்தைப் பெற்று தங்கப் பதக்கத்தையும் வென்றுள்ளது. மேலும், ஆசியாவின் சிறந்த பணியிடங்கள் (Best Workplaces™ in Asia) நடுத்தர நிறுவனப் பிரிவில் 18ஆவது இடத்தைப் பெற்றுள்ளது. இப்பிரிவில் இலங்கையிலிருந்து மிக உயர்ந்த தரவரிசையைப் பெற்ற நிறுவனமாகவும் Ideal Motors திகழ்கிறது.
இதனுடன், ‘பணியிட கலாசாரத்திற்கான தொழிற்துறை விசேடத்துவம் – வர்த்தகத் துறை’ (Industry Excellence for Workplace Culture – Trading Industry) எனும் விருதையும் நிறுவனம் பெற்றுள்ளது.
இளம் திறமையாளர்களுக்கான விருது வழங்கும் நிகழ்வு 2026 செப்டெம்பர் 10 ஆம் திகதி கொழும்பு சினமன் லைஃப் ஹோட்டலில் நடைபெற்ற ‘Great Place To Work® CXO Forum 2026’ நிகழ்வில் இடம்பெற்றது. 100 இற்கும் மேற்பட்ட சான்றளிக்கப்பட்ட நிறுவனங்களின் மதிப்பீட்டைத் தொடர்ந்து இந்த அங்கீகாரம் வழங்கப்பட்டது. 35 வயதிற்குட்பட்ட ஊழியர்கள் வளர்ச்சியடையவும், நிறுவனத்தில் அர்த்தமுள்ள பங்களிப்புகளைச் செய்யவும், தங்களது தொழில் வாழ்க்கையில் முன்னேறவும் வாய்ப்புகளை உருவாக்கும் பணியிடங்களை இந்த அங்கீகாரம் கௌரவிக்கிறது. இளம் திறமையாளர்களுக்கு வளர்ச்சி வாய்ப்புகளை உருவாக்குதல், அவர்களின் திறன்களை மேம்படுத்துதல் மற்றும் நிறுவனத்தின் எதிர்கால தலைமைத்துவத்தை உருவாக்குதல் ஆகியவற்றில் Ideal Motors மேற்கொண்டு வரும் தொடர்ச்சியான முயற்சிகளுக்கு இந்த விருது ஒரு முக்கியமான அங்கீகாரமாக அமைகிறது.
2026 செப்டெம்பர் 11ஆம் திகதி கொழும்பு சினமன் லைஃப் ஹோட்டலில் நடைபெற்ற ‘Best Workplaces™ in Sri Lanka Awards Gala 2026’ நிகழ்வில் Ideal Motors நிறுவனம் முதன்முறையாக இலங்கையின் சிறந்த பணியிடங்கள் பட்டியலில் இடம்பெற்றது. சிறிய மற்றும் நடுத்தர நிறுவனப் பிரிவில் முதலிடத்திற்கான தங்கப் பதக்கத்தைப் பெற்றதன் மூலம் நிறுவனம் மற்றுமொரு வரலாற்று மைல்கல்லை எட்டியது. அதேவேளை, Best Workplaces™ in Asia பட்டியலில் நடுத்தர நிறுவனப் பிரிவில் Ideal Motors 18 ஆவது இடத்தைப் பெற்றது. இலங்கையைத் தாண்டியும் நிறுவனத்தின் பணியிட கலாசாரத்தின் வலிமையை இந்த அங்கீகாரம் எடுத்துக்காட்டுகிறது.
இந்த சாதனைகள் வெறுமனே விருதுகளின் தொகுப்பை பிரதிபலிப்பவை அல்ல. மாறாக, மனிதர்கள், கலாசாரம் மற்றும் வணிக செயல்திறன் ஆகியன நிலைபேறான வளர்ச்சிக்கான ஒன்றோடொன்று இணைக்கப்பட்ட உந்துசக்திகள் எனக் கருதப்படும் Ideal Motors நிறுவனத்திற்குள் இடம்பெற்று வரும் மாற்றத்தை அவை பிரதிபலிக்கின்றன.
கடந்த சில வருடங்களில், நிறுவனத்தின் மனிதவள (HR) செயற்பாடானது பிரதானமாக நிர்வாகப் பொறுப்பை மேற்கொள்ளும் ஒரு பிரிவிலிருந்து, ஊழியர் அனுபவம், திறன் மேம்பாடு, ஈடுபாடு, செயல்திறன், தகவல் தொடர்பு, சுகவாழ்வு, பன்முகத்தன்மை மற்றும் அனைவரையும் உள்ளடக்குதல், அத்துடன் தரவு சார்ந்த மனிதவள நடைமுறைகள் ஆகியவற்றுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கும் ஒரு மூலோபாய வணிகப் பங்காளியாக பரிணமித்துள்ளது.
நிறுவனத்தின் மனிதவளக் கொள்கை தொடர்பில் கருத்து வெளியிட்ட மனிதவளம் மற்றும் நிர்வாகம் தொடர்பான குழும பிரதிப் பொது முகாமையாளர் தெரிவிக்கையில்:
“மனிதவளம் என்பது வெறுமனே ஊழியர்களை நிர்வகிக்கும் ஒரு செயற்பாடு அல்ல. மனிதர்களை மையமாகக் கொண்டு நிபுணத்துவத்துடன் செயல்படும் ஒரு வணிகச் செயற்பாடாகும். மனிதவளத்தின் மூலம் சிறந்த நடைமுறைகள், புத்தாக்கமான யோசனைகள் மற்றும் நிறுவனத்திற்கு அர்த்தமுள்ள புதிய முயற்சிகளை தொடர்ந்து அறிமுகப்படுத்த எமது குழு பாடுபட்டு வருகிறது. ஊழியர்களின் திறன்களை வலுப்படுத்தி, அவர்களின் அனுபவத்தை மேம்படுத்தி, நிறுவனத்திற்கு அளவிடக்கூடிய வணிக மதிப்பை உருவாக்கும் மனிதவளத் தீர்வுகளை உருவாக்குவதே எமது நோக்கமாகும்.”
இந்த மாற்றம், Ideal Motors நிறுவனத்தின் மனிதவளப் பிரிவு நிர்வாகச் செயற்பாட்டிலிருந்து, ஊழியர் வளர்ச்சி, ஈடுபாடு மற்றும் அனுபவத்தை மையமாகக் கொண்ட ஒரு மூலோபாய வணிகப் பங்காளியாக பரிணமித்துள்ளதை வெளிப்படுத்துகிறது.
இந்த மாற்றத்திற்கு நிறுவனத்தின் தலைமைத்துவமும் பலமான ஆதரவை வழங்கி வருகிறது. Ideal குழுமத்தின் முகாமைத்துவ பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியும் தெரிவிக்கையில்:
“எமது ஊழியர்களே எமது மிகப்பெரிய சொத்தாகும். Ideal Motors நிறுவனத்தின் பலம் இறுதியில் எமது வணிகத்தை முன்னோக்கி கொண்டு செல்கின்ற ஊழியர்களின் கைகளில் உள்ளது. எனவே, தாம் மதிக்கப்படுவதாகவும், வலுவூட்டப்படுவதாகவும், வளர்ச்சியடைவதற்கான கற்றல் வாய்ப்புகளைப் பெறுவதாகவும் எமது ஊழியர்கள் உணரும் ஒரு பணியிடத்தை உருவாக்குவதென்பது வெறுமனே மனிதவள முன்னுரிமை மட்டுமல்லாது, அது ஒரு வணிக முன்னுரிமையுமாகும்.”
இந்தத் தலைமைத்துவ அணுகுமுறை, ஊழியர்களை நிறுவனத்தின் வளர்ச்சிக்கும் வெற்றிக்கும் பங்களிக்கும் மதிப்புமிக்க பங்காளிகளாக அங்கீகரிக்கும் ஒரு வலுவான பணியிடக் கலாசாரத்தை உருவாக்கி வருகிறது.
மனிதர்களுக்கு முன்னுரிமையளிக்கும் இந்த அணுகுமுறையானது பல்வேறு நடைமுறை முயற்சிகள் மூலம் பிரதிபலிக்கிறது.
இதில் ஊழியர்களின் ஈடுபாட்டை அதிகரிக்கும் தளங்கள், மனிதவள ஆலோசனைகள் (HR Clinics), கற்றல் மற்றும் மேம்பாட்டுத் திட்டங்கள், ஊழியர் கௌரவிப்பு மற்றும் அங்கீகார முயற்சிகள், மேம்படுத்தப்பட்ட மனிதவள கட்டமைப்புகள் மற்றும் செயன்முறைகள், வலுவான ஊழியர் தொடர்பாடல் ஆகியவை அடங்குகின்றன.
அதேபோன்று, பன்முகத்தன்மை, சமத்துவம், நியாயமான ஆட்சி, அனைவரையும் உள்ளடக்குதல் மற்றும் சொந்தம் கொண்டாடுதல் ஆகிய அம்சங்களுக்கும் நிறுவனம் அதிக கவனம் செலுத்தி வருகிறது.
‘மனிதர்களால் இயக்கப்படுதல், உள்ளீர்ப்பின் மூலம் வலுவூட்டப்படுதல்’ என்ற தத்துவத்தையும், 2026ஆம் ஆண்டிற்கான ‘ஒன்றிணைந்து உள்ளீர்த்தல் – ஒரே குழு, ஒவ்வொரு குரலுக்கும் முக்கியத்துவம்’ என்ற DEI கருப்பொருளையும் அடிப்படையாகக் கொண்டு, Ideal Motors நிறுவனம் இளம் திறமையாளர்கள், தொழில்நுட்ப மற்றும் முன்னணி பணிகளில் உள்ள பெண்கள், வளர்ந்து வரும் தலைவர்கள் மற்றும் தங்களது தொழில் வாழ்க்கையின் வெவ்வேறு கட்டங்களில் உள்ள ஊழியர்களுக்கான வளர்ச்சி வாய்ப்புகளை தொடர்ந்து உருவாக்கி வருகிறது.
நிறுவனத்தின் அர்ப்பணிப்பு அதன் சொந்த ஊழியர்களுடன் மட்டுப்படுத்தப்படவில்லை. Ideal Motors Technical Training Centre (IMTTC) மூலம், இளைஞர்களுக்கு நடைமுறை தொழில்நுட்பத் திறன்களையும் வாகனத் துறையில் தொழில் வாய்ப்புகளுக்கான பாதைகளையும் வழங்கி, தொழில்துறைக்குத் தயாரான திறமையான பணியாளர்களை உருவாக்குவதில் நிறுவனம் பங்களித்து வருகிறது. இதன் மூலம் Ideal Motors நிறுவனத்திற்கான எதிர்கால திறமையாளர்களை உருவாக்குவதுடன், இலங்கையின் வாகனத் துறைக்குத் தேவையான எதிர்காலத்திற்குத் தயாரான திறமையான பணியாளர்களை உருவாக்குவதற்கும் நிறுவனம் பங்களிக்கிறது.
அண்மையில் கிடைத்துள்ள இந்த அங்கீகாரங்கள், உயர் நம்பிக்கை, அனைவரையும் உள்ளடக்கிய மற்றும் உயர் செயல்திறன் கொண்ட பணியிடத்தை உருவாக்க Ideal Motors மேற்கொண்டு வரும் தொடர்ச்சியான பயணத்திற்கான வெளிப்புற அங்கீகாரமாக அமைகின்றன.
Ideal Motors நிறுவனத்தைப் பொறுத்தவரை, விருதுகளை வெல்வது மட்டுமே இலக்கல்ல. ஊழியர்கள் வளரவும், தங்களது திறமைகளையும் பங்களிப்புகளையும் முழுமையாக வெளிப்படுத்தவும், வெற்றிபெறவும் வாய்ப்பளிக்கும் பணியிடத்தை உருவாக்குவதுடன், நிறுவனத்தின் மற்றும் இலங்கையின் வாகனத் துறையின் நிலையான வளர்ச்சிக்கும் பங்களிப்பதே அதன் நீண்டகால நோக்கமாகும்.
மக்கள் வளரும்போது, கலாசாரம் வலுவடைகிறது. கலாசாரம் வலுவடையும் போது, வணிகமும் வளர்கிறது.































