Header Logo
Vallibel FD
Mogo Academy
Selan Bank
உலகம்
8,000 ஐ கடந்த எபோலா பாதிப்பு!

Sep 29, 2026 - 08:59 AM

8,000 ஐ கடந்த எபோலா பாதிப்பு!
Mobitel Inner 1278

காங்கோவில் எபோலா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 8,000 ஐ கடந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். உயிரிழப்பை ஏற்படுத்தும் இந்த நோயை கட்டுப்படுத்த தேவையான சுகாதாரப் பணியாளர்கள் பற்றாக்குறையாக காரணமாகவே இந்நிலை ஏற்பட்டுள்ளது. 

இது அந்நாட்டில் ஏற்பட்டுள்ள 17 ஆவது மற்றும் மிகக் கடுமையான எபோலா பாதிப்பாகும். அறிய வகை 'புண்டிபுக்யோ' (Bundibugyo) வைரஸால் ஏற்படும் எபோலா பாதிப்பு குறித்து காங்கோ மே 15 ஆம் திகதி அறிவித்தது. 

இந்த வைரஸுக்கு இதுவரை அறியப்பட்ட சிகிச்சையோ அல்லது தடுப்பூசியோ இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இந்நோயை கட்டுப்படுத்த அந்நாடு பெரும் சிரமத்தை எதிர்கொண்டு வருகிறது. 

கடந்த 27 ஆம் திகதி வெளியிடப்பட்ட காங்கோ சுகாதார அமைச்சகத்தின் சமீபத்திய தரவுகளின்படி, செப்டம்பர் 26 நிலவரப்படி நாட்டின் 26 மாகாணங்களில் 7 இல் உள்ள 63 சுகாதார மண்டலங்களில் 8,067 பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டுள்ளன. இதில் 3,901 பேர் உயிரிழந்துள்ளனர். இறப்பு விகிதம் 48% இற்கும் அதிகமாக உள்ளது. 

"தொடர்ந்து அதிகமாக இருக்கும் நோயாளிகளின் இறப்பு விகிதம், குறிப்பாக சமூகங்களுக்குள்ளேயே நிகழும் அதிகப்படியான இறப்புகள் ஆகியவை, இந்நோயின் தீவிரத்தையும், சரியான நேரத்தில் நோயை கண்டறிதல் மற்றும் ஆரம்பக்கட்ட தகுந்த மருத்துவச் சிகிச்சையை பெறுவதில் உள்ள தொடர்ச்சியான சவால்களையும் எடுத்துக்காட்டுகின்றன" என்று உலக சுகாதார அமைப்பு தனது சமீபத்திய அறிக்கையில் தெரிவித்துள்ளது. 

இதன் பொருள், உதவி கோருவதில் ஏற்படும் தாமதம் அல்லது கண்டறியப்படாத பாதிப்புகள் போன்ற காரணிகளை கணக்கில் கொள்ளாமலேயே, பாதிக்கப்பட்டவர்களில் பெரும் பகுதியினர் உயிரிழக்கின்றனர் என்பதாகும். 

வானொலி நிகழ்ச்சி ஒன்றில் எபோலாவுக்கு எதிரான அரசின் நடவடிக்கைகளை ஆதரித்து பேசியதற்காக, காங்கோவின் ஆளும் கட்சியான UDPS-ன் அதிகாரி மேரி-செலஸ்டின் கரோண்ட்வா அடையாளம் தெரியாத நபர்களால் தாக்கப்பட்டார். அவர் ஆபத்தான நிலையில் இருப்பதாக UDPS தெரிவித்துள்ளது. 

எபோலா பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளில் ஒன்றான வடக்கு கிவு மாகாணத்தின் புடெம்போ (Butembo) நகரில், அக்கட்சியின் கூட்டாட்சி நிர்வாகக் குழுவின் தற்காலிகத் தலைவராக கரோண்ட்வா செயல்பட்டு வருகிறார். அவர் "தனது குடியிருப்புப் பகுதியான வுலிண்டியை சேர்ந்ததாக கூறப்படும் சிலரால்" தாக்கப்பட்டதாக கட்சி தெரிவித்துள்ளது. 

இந்தத் தாக்குதல் குறித்து அரசு விசாரணை நடத்த வேண்டும் என்று அக்கட்சி வலியுறுத்தியுள்ளது. எபோலா நோய் பரவத் தொடங்கியதிலிருந்தே, உள்ளூர் மக்களிடையே நிலவிய பரவலான ஐயுணர்வு அதன் தீவிர பரவலுக்கு ஒரு காரணமாக அமைந்தது, அவர்கள் இந்நோயை ஒரு கட்டுக்கதை என்று புறக்கணித்ததுடன், பல சந்தர்ப்பங்களில் சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் சுகாதார நிலையங்கள் மீதும் தாக்குதல்களை நடத்தினர்.

Disclaimer: All the comments will be moderated by the AD editorial. Abstain from posting comments that are obscene, defamatory or slanderous. Please avoid outside hyperlinks inside the comment and avoid typing all capitalized comments. Help us delete comments that do not follow these guidelines by flagging them (mouse over a comment and click the flag icon on the right side). Do use these forums to voice your opinions and create healthy discourse.

Comments

0
Comments are disabled

Note: Due to legal constraints, the Ada Derana Editorial team has taken a decision to disable comments on all articles concerning ongoing court procedures.


MOST READ

காணொளி
திட்டமிட்டு குற்றஞ்சாட்டுவதை ஏற்க முடியாது!

திட்டமிட்டு குற்றஞ்சாட்டுவதை ஏற்க முடியாது!

அரசியல் இனி திருட்டுக் குகை அல்ல!

அரசியல் இனி திருட்டுக் குகை அல்ல!

இலங்கை ரசிகர்களுக்கு  சூரி கொடுத்த மாஸ் அதிர்ச்சி!

இலங்கை ரசிகர்களுக்கு சூரி கொடுத்த மாஸ் அதிர்ச்சி!

எங்கள் ஆட்சியில் இனவாதம் தலைதூக்கவே இல்லை!

எங்கள் ஆட்சியில் இனவாதம் தலைதூக்கவே இல்லை!

ஒவ்வொரு முன்னேற்றத்திற்குப் பின்னாலும் ஒரு போராட்டம் இருக்கிறது!

ஒவ்வொரு முன்னேற்றத்திற்குப் பின்னாலும் ஒரு போராட்டம் இருக்கிறது!

நீதித்துறை தமிழர்களுக்கு என்ன செய்துள்ளது?

நீதித்துறை தமிழர்களுக்கு என்ன செய்துள்ளது?

உடகந்த தோட்டத்தில் விநாயகர் சிலை உடைப்பு!

உடகந்த தோட்டத்தில் விநாயகர் சிலை உடைப்பு!

நுவரெலியாவில் இடைவிடாது பெய்யும் கனமழை!

நுவரெலியாவில் இடைவிடாது பெய்யும் கனமழை!

எங்களின் சந்தேகம் குறித்து நீங்கள் கவலைப்படத் தேவையில்லை!

எங்களின் சந்தேகம் குறித்து நீங்கள் கவலைப்படத் தேவையில்லை!

மலையகத்தில் தொடரும் கனமழை!

மலையகத்தில் தொடரும் கனமழை!

Mobitel 1278