Header Logo
Vallibel FD
Mogo Academy
Selan Bank
செய்திகள்
காணி உரித்து நிர்ணய திணைக்கள முன்னாள் ஆணையாளர் ஒருவர் கைது!

Sep 29, 2026 - 01:23 PM

காணி உரித்து நிர்ணய திணைக்கள முன்னாள் ஆணையாளர் ஒருவர் கைது!
Mobitel Inner 1278

அரசுக்கு 158 கோடி ரூபாவுக்கும் அதிக நிதி இழப்பை ஏற்படுத்தி ஊழல் புரிந்த குற்றச்சாட்டின் பேரில், காணி உரித்து நிர்ணய திணைக்களத்தின் முன்னாள் ஆணையாளர் (விசாரணை) ஒருவர் இன்று (29) லஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

 

சந்தேகநபர்  காணி உரித்து நிர்ணய திணைக்களத்தின் விசாரணை ஆணையாளராகப் பணியாற்றிய காலத்தில், தனது அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி, நிறுவனத்தின் உத்தியோகபூர்வ கடிதத் தலைப்பைப் பயன்படுத்தி, முறையற்ற விசாரணை இலக்கத்தின் கீழ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

 

குறித்த விசாரணை அறிக்கையின் மூலம், பொரளை எலியட் வீதியில் அமைந்துள்ள 1.0982 ஹெக்டேயர் பரப்பளவை  கொண்ட 158 கோடியே 60 லட்சம் ரூபாய் பெறுமதியான அரச காணியை, தனியாருக்கு சொந்தமான காணி என சித்தரித்துள்ளார்.

 

இதன் மூலம் அரசுக்கு பாரிய இழப்பை ஏற்படுத்தி, வேறு ஒரு தரப்புக்கு நியாயமற்ற நன்மையை வழங்கியதாக அவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

 

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

Disclaimer: All the comments will be moderated by the AD editorial. Abstain from posting comments that are obscene, defamatory or slanderous. Please avoid outside hyperlinks inside the comment and avoid typing all capitalized comments. Help us delete comments that do not follow these guidelines by flagging them (mouse over a comment and click the flag icon on the right side). Do use these forums to voice your opinions and create healthy discourse.

Comments

0
Comments are disabled

Note: Due to legal constraints, the Ada Derana Editorial team has taken a decision to disable comments on all articles concerning ongoing court procedures.


MOST READ

காணொளி
உலக சுற்றுலா தினம்!

உலக சுற்றுலா தினம்!

வலிகாமம் வடக்கு பிரதேச சபை அமர்வைப் புறக்கணித்த உறுப்பினர்கள்!

வலிகாமம் வடக்கு பிரதேச சபை அமர்வைப் புறக்கணித்த உறுப்பினர்கள்!

திட்டமிட்டு குற்றஞ்சாட்டுவதை ஏற்க முடியாது!

திட்டமிட்டு குற்றஞ்சாட்டுவதை ஏற்க முடியாது!

அரசியல் இனி திருட்டுக் குகை அல்ல!

அரசியல் இனி திருட்டுக் குகை அல்ல!

இலங்கை ரசிகர்களுக்கு  சூரி கொடுத்த மாஸ் அதிர்ச்சி!

இலங்கை ரசிகர்களுக்கு சூரி கொடுத்த மாஸ் அதிர்ச்சி!

எங்கள் ஆட்சியில் இனவாதம் தலைதூக்கவே இல்லை!

எங்கள் ஆட்சியில் இனவாதம் தலைதூக்கவே இல்லை!

ஒவ்வொரு முன்னேற்றத்திற்குப் பின்னாலும் ஒரு போராட்டம் இருக்கிறது!

ஒவ்வொரு முன்னேற்றத்திற்குப் பின்னாலும் ஒரு போராட்டம் இருக்கிறது!

நீதித்துறை தமிழர்களுக்கு என்ன செய்துள்ளது?

நீதித்துறை தமிழர்களுக்கு என்ன செய்துள்ளது?

உடகந்த தோட்டத்தில் விநாயகர் சிலை உடைப்பு!

உடகந்த தோட்டத்தில் விநாயகர் சிலை உடைப்பு!

நுவரெலியாவில் இடைவிடாது பெய்யும் கனமழை!

நுவரெலியாவில் இடைவிடாது பெய்யும் கனமழை!

Mobitel 1278